Pages

Monday, December 29, 2008

ஜெய்சன் வீட்டில் - அன்னதானம்!!!

27.12.2008 மதியம் 1.30 மணியளவில் வெற்றி F.M அலுவலகத்தில் அனைத்து நண்பர்களும் மிக முக்கியமாக ஒன்று கூடினோம். வேறொன்றுக்குமல்ல எங்கள் விரிவாக்கல் பிரிவைச் சேர்ந்த ஜெய்சனது வீட்டில் இடம்பெறும் மத்திய விருந்துபசாரத்தில் கலந்து கொள்வதற்காகத்தான். வழமைபோல லோஷன் உடைய வாகனத்தில் அடைந்த வண்ணம் ஏறிய விமல், பிரதீப், ஹிஷாம், சுபாஷ், சதீஷ், பூஜா, வைதேகி, எல்லோருமே வழமையான கிண்டல் கேலிகளுடன் ஜெய்சன் வீட்டினை நோக்கி பயணமானோம்.

இன்று நம் லோஷன் முகத்தில் ஒரு கண்ணாடி அவரின் அழகாய் இன்னும் அதிகப்படுத்திக்காட்டியது என்றால், நம் பூஜாவும் வைதேகியும் தங்களை அழகு படுத்திய விதமே ஒரு தனி அழகுதான். என்ன செய்வது மற்ற நண்பர்கள் சாதரணமாகவே வந்ததனர்.
விருந்துக்கு போகும்போது வெறும் கையுடனா போகமுடியும்? ஏதோ எங்களால் முடிந்த ஒரு பரிசுடன் ஒருவாறு ஜெய்சன் வீட்டினை தேடிப்பிடித்து போனபோது ஜெய்சனது குடும்பமே ஒன்றாக நின்று, அன்பாக வரவேற்று, எங்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கினார்கள்.

வழமையான அறிமுகங்களின் பின் எங்கள் உபதொழிலான கிண்டல் பேச்சுகள் ஆரம்பமாகின. இதில் லோஷன் முதல் புதிதாக வந்த சதீஷ் வரை யாருமே தப்பவில்லை. அதேபோல் எந்தப்பேச்சும் யாரையுமே காயப்படுத்தவில்லை.
இதில் சில நண்பர்கள் தவிர்க்கமுடியாத காரணத்தால் கலந்துகொள்ளமுடியாமல் போனதுடன் கடமையை கண்ணாகபோற்றும் சந்துருவும் வனிதாவும் கலையகத்திலேயே நாம் என்ன என்ன எல்லாம் உண்போமோ என்ற கனவுடன் இருபது புது இசையை உங்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தனர்.

ஜெய்சன் வீட்டிலோ சற்று பேச்சுக்கள் குறைந்து உணவின் பக்கம் பார்வை திரும்பியது. எல்லோருக்கும் பிடித்த அசைவ உணவுதான்... வயிறு நிறைய எல்லோரும் உண்டோம். உண்ணும்போது கூட எங்கள் நண்பர்களின் "கடி" குறையவில்லை. உணவைதொடர்ந்து வந்த "dessert" விட்டுவைக்கவில்லை.
அதன்பின் மீண்டும் குறும்பு பேச்சுகள். இடையே நண்பர் திஷோக்குமாருக்கு நாம் தொலைபேசி வாயிலாக கொடுத்த இனிய இம்சை மற்றொரு சிறப்பு. எங்கள் தொலைபேசி இலக்கத்தையே "sorry", இது "wrong number"என சொல்ல வைத்த சாதனையாளர்கள் எங்கள் நண்பர்கள்.

ஒருவாறாக திஷோக்குமாருக்கும் செய்திப்பிரிவைச் சேர்ந்த விஜயகுமாரும் ஜெய்சன் வீட்டினை அடைந்தபின் ஒருவர் பின் ஒருவராக photo எடுத்தனர். எங்கள் group photo எடுக்கும்போது விஜயகுமார் ஆறு தடவை ஒரே படத்தினை "click" செய்தது என்றுமே மறக்கமுடியாது. நிறைவில் ஜெய்சன் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தபின் மீண்டும் லோஷனின் வாகனத்திலேயே ஏறினோம்.

அலுவலகத்துக்கு வருகிறோம் என லோஷன் வேறு ஏதோ வழியில் போய்விட்டு வைதேகியை கலாய்த்ததுடன் வாகனத்திலேயே signalஇனை பக்கம் மாற்றி போட்டுக்காட்டி தன் "driving" திறமையை காட்டியது மற்றொரு அனுபவம். ஒருவாறாக நம் ஏன்? எதற்கு? எப்படி? "ஹீரோவை" நான்கு மணிக்கு சில நிமிடங்கள் இருக்கும் வேளையில் அவரை அலுவலகத்தில் சேர்த்து தான் ஒரு வெற்றியாளன் என்பதனை நிரூபித்தார் லோஷன்.
இந்த இனிமையான நேரத்தில் ஜெய்சன் குடும்பத்திற்கு வெற்றி குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
--------------

4 comments:

துஷா said...

சந்துரு அண்ணாக்கும் வனிதா அக்காக்கும் எரிச்சல் முட்டவா இவ்வளவு டுப் எல்லாம்

lolllllllll
cool

துஷா said...

அது எல்லாம் சரி படத்தில் இருப்பவர்கள் யார் உங்க கூட சாப்பிட வந்தாங்களா பாவம் ஜெய்சன் அண்ணா ............................

Unknown said...

Saturday, December 27, 2008
சர்வதேச வானொலி - நவம்பர் 2008


வெளிவந்துவிட்டது நவம்பர் சர்வதேச வானொலி இதழ். இந்த இதழில் இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் நாகபூசணி கருப்பையா அவர்களின் சிறப்பு செவ்வி இடம்பெற்றுள்ளது. வளமையானத் தொடர்களுடன் 24 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த இதழைப் படிக்க கீழ்கண்ட தொடுப்பினைச் சொடுக்கவும்.
http://vaanoliulagam.googlepages.com/Nov2k8.pdf
உங்களின் இல்லதிற்கே இதழ் வர... தொடர்பு கொள்க 98413 66086. ஆண்டு சந்தா ரூ.100/-

Labels: சர்வதேச வானொலி - நவம்பர் 2008

posted by வானொலி | 5:15 PM | 0 comments

Sinthu said...

நீங்க சொன்னது அப்படியே சரி துஷா அக்கா.......
அண்ணா வீட்டில் அப்படி என்னத்தை வெட்டி புடுங்கி சாப்பிட்டிருக்க போறாங்க........
கவனம் சந்துரு அண்ணா வனிதா அக்கா....
நீங்க எதுக்கும் கவலை படாதீங்க...........
எல்லாம் சும்மா டூப்.......
Sinthu
Bangladesh