Pages

Friday, February 13, 2009

வெற்றிப் பயணத்தில் ஒரு வருடம்.........

கடந்த ஆண்டு February மாதம் 14ம் திகதி பிறந்த உங்கள் வெற்றி FM வானொலி அதன் பின் தவழ்ந்துஎழுந்து நடந்து, வீறு நடையுடன் நாளை முதலாவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் வந்த சில சோதனைகளையும் சாதனைகளாக்கி இன்று இதயம் வென்று வெகு விரைவில் இமயம் வெல்ல வெற்றி நடை போடுகிறது.

A.R.V.லோஷனின் நேர்த்தியான வழிகாட்டலில் வலம்வரும் வெற்றி, நேயர்களின் ரசனைத்தன்மையை நாடிபிடித்தறிந்து அவர்களுக்கு என்ன பிடிக்குமோ,அவற்றை நிகழ்ச்சிகளாகத் தந்துகொண்டிருக்கிறது. வானலைவழியே தேன்மழை பொழிந்து வரும் உங்கள் வெற்றி, தன் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை எந்த நிகழ்ச்சியும் நேயர்களுக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தால் மாற்றவில்லை என்பது பெருமை கொள்ளும் விடயமே.

நாளை அதிகாலை பூபூக்கும் நேரத்தோடு ஆரம்பிக்கும் சிறப்பு நிகச்சிகள் நாள் முழுவதும் தொடர இருக்கிறது. அந்த நிகழ்ச்சிகள் சற்று வித்தியாசமாகவும் உங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தவும் இருக்கிறது. அந்த நிகழ்ச்சிகளை பற்றிய முன்னோட்டங்கள் இப்போது வானலை வழியே ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதன் சுவையையும் சுவாரஸ்யத்தையும் நாளை எங்கள் நேயநெஞ்சங்கள் உணரலாம்.

ஆர்ப்பாட்டமில்லாமல் மிக அமைதியான முறையில் எங்கள் நேயர்களுடன் இந்த நன் நாளில் கால் பதித்து கொண்டாட இருக்கிறோம். வெற்றியின் நேயர்கள் அனைவரும் வெற்றியின் பங்காளர்கள் எனவே அனைவருக்கும் எங்கள் நல்வாழ்த்துக்களுடன் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த ஒரு வருடமும் எங்களோடு இணைந்து வெற்றிக்கொடி கட்டும் நேயர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு கிட்டும் என்ற நம்பிக்கையோடு இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றோம்............................

வெற்றி எப்.எம்

வாழ்க்கைக்கு வெற்றி.

இனி ஒரு புது விதி செய்வோம்.

7 comments:

Sinthu said...

ஆர்ப்பாட்டம் இல்லாத இனிய முதலாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்......
இனி ஒரு புது விதி செய்வோம்.....
நீங்க தான் வெற்றிக் கூட்டம் அச்சே................ அசத்துங்க....
வாழ்த்துக்கள்....

என்றும் வெற்றியின் ரசிகை..........
சிந்து

Vasudevan said...

Happy Anniversary, Keep the good work rolling.

Best Wishes from

Canadian Listeners.

நஜிமுதீன் said...

ஏனைய தமிழ் வானொலிகளுக்கு மத்தியில் வெற்றி FM நிகழ்ச்சிகள், அதன் தனித் திறமைகள் கண்டிப்பாக பாராட்டத் தக்கவை, மேலும் வெற்றி FM தனது முதலாவது பிறந்த தினத்தைக் கொண்டாடும், இந்த சந்தர்ப்பத்தில் உலகலாவிய நேயர்களின் சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நஜிமுதீன், சவுதி அரெபியா

Mathu said...

Congrats & All the very best for many more successes!
Keep going....

நஜிமுதீன் said...

தமிழ் வானொலி வரலாற்றில் வெற்றி FM சேவை அதன் தனிச் தன்மை, மற்றும் நிகழ்ச்சிகள் வழங்கும் விதம் நேயர்களுக்கு கொடுத்திருக்கும் முன்னுரிமைகள், சலுகைகள் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவை. வெற்றி FM தனது முதலாவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் இந்த சந்தர்ப்பத்தில், அதன் வளர்ச்சிக்காக பாடுபட்ட, அனைத்து ஊழியர்கள், மற்றும் அறிவிப்பாளர்கள், அனைவருக்கும் நேயர்களின் சார்பில் நன்றியினைத் தெரிவிப்பதோடு, எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,

நஜிமுதீன், சவுதி அரெபியா.

Sudhakar said...

Happy Birthday Vettri

Anonymous said...

வெற்றிக்கு இனிய முதலாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!!