
Saturday, March 28, 2009
சூப்பர் ஸ்டாருடன் நானாட நீயாட.

Friday, March 20, 2009
அகதியான மக்களுக்கு அமைதியான வாழ்வு கேட்போம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு தங்கள் சொந்த வீடு வாசல்களை விட்டு நிர்க்கதியாக நலன்புரி நிலையங்களில் தங்கி வாழும் நம் சகோதரர்களுக்கு கை கொடுக்க அனைவரும் ஒன்றுபடுவோம்.
பல கஷ்டங்களுக்கு மத்தியில் தங்கள் உறவுகளை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் எங்கள் சொந்தங்களுக்கு The International Association of Lions Clubs Multiple District 306 Sri Lanaka உடன் இலங்கையின் அனைத்து Lions கழகங்களும் வெற்றி F.Mமும் இணைந்து ஏற்ப்பாடு செய்துள்ள இந்த கரம்கொடுக்கும் நிகழ்வில் உங்கள் கரத்தையும் இணைத்து பாலம் அமையுங்கள்.
கைக்குழந்தைகள் முதல் பெரியோருக்கு அத்தியாவசியமாகத் தேவையான பால் மா, புதிய ஆடைகள், கட்டில் விரிப்புகள், துவாய்கள், சவர்க்காரம் மற்றும் உலர் உணவுப்போருட்களோடு உங்களால் இயன்ற பண உதவியையும் செய்து நீங்களும் அவர்கள் வாழ்கையில் தாங்கிப்பிடிக்கும் தூண்கள் ஆகுங்கள்.
உங்கள் பொருட்களை இலக்கம் 38, Ward Place கொழும்பு-07 என்ற முகவரியில் கையளிக்கும் அதேநேரம் உங்கள் பண உதவியை இலங்கை Lions கழகத்தின் பம்பலப்பிட்டி Commercial வங்கியின் கணக்கிலக்கம் 1106013630 இல் வைப்புச் செய்யுங்கள்.
இம்மாதம் 31 திகதிக்கு முன் உங்கள் உதவிகளை வழங்குங்கள்.தமிழ் மக்களுக்கு கைகொடுத்து உதவ வெற்றியோடு ஒன்று சேருங்கள்.
மேலதிக விபரங்களுக்கு: vettri@voa.lk
வெற்றி எப்.எம்,
வாழ்க்கைக்கு வெற்றி.
Monday, March 16, 2009
Saturday, March 14, 2009
ஆச்சரியமும் அமானுஷ்யத்தில் நடந்த ஆச்சரியம்.

இந்த நிகழ்ச்சியே ஒரு திகில் நிறைந்த நிகழ்ச்சியாக தான் வானலை வழியே வருகிறது. நம் வாழ்வில் நடக்கும் சில ஆச்சரியமான எம் சக்தியை மீறிய நிகழ்வுகள் தான் ஒலிபரப்பாகின்றன. அதே போன்ற ஒரு அமானுஷ்ய சக்தி தான் இந்த ஒலி பரப்பிலும் புகுந்து விளையாடி இருக்க வேண்டும். எங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.
அதனை பற்றிய பல விடயங்களோடு நேற்றைய ஆச்சரியமும் அமானுஷ்யமும் நிகழ்ச்சி உங்களை வந்தடைந்தது. அமானுஷ்ய சக்திகளின் ஆச்சரியமான நிகழ்வுகளுக்கு மத்தியிலும் உங்களை வந்தடையக் காத்திருக்கிறது.
நான் தன்னந்தனிக்காட்டு ராஜா

ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9மணி செய்த அறிக்கையை தொடர்ந்து உங்கள் பசுமையான நினைவுகளை மீட்டிப்பார்க்கும் அமரகானங்கள் நிகழ்ச்சியில் இந்த ஞாயிறு(March 15) இரவு உங்களுக்காக........
Monday, March 9, 2009
வெற்றி உலா

Saturday, March 7, 2009
வெற்றிப் பெண்கள்

உலகத்தின் சக்தியாக இருந்து சாதனைகளை படைத்துக்கொண்டிருக்கும் பெண்களை கௌரவிக்கும் முகமாக நாளைய வெற்றியின் நிகழ்ச்சிகள் இடம்பெறக்காத்திருக்கின்றன. நிகச்சிகளில் உங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதோடு பெண்ணியம் போற்றுவோமாக.
Tuesday, March 3, 2009
களுத்துறையில் சிவராத்திரி.

மாலை வேளையில் களுத்துறை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தை அடைந்த வெற்றிக் குழுவினர் ஆலய பூஜையில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாலை 7.00 மணி அளவில் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின. வெற்றியின் விரிவாக்கல் பிரிவைச் சேர்ந்த ஜெய்சன் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைக்க தொடர்ந்து வெற்றியின் அறிவிப்பாளர் சதீஷும் அவர்களுடன் இணைந்து கொண்டார்.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கௌரவ ரெஜினோல்ட் குரே அவர்களும் களுத்துறை பிரதேச சிரேஷ்ட போலீஸ் உத்தியோகத்தரும் இன்னும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
கடவுள் வாழ்த்துடன் ஆரம்பமான நிகழ்வில் தொடர்ந்து மங்கலம் தரும் மங்கல விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.
அதன் பின் ஆசியுரை வரவேற்புரை இடம்பெற்றதுடன் விருந்தினர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றன. அதன் பின் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின.
கராட்டத்துடன் ஆரம்பமான நிகழ்வில் அதுவரை மேடை நிகழ்ச்சிக்குரிய தொனியிலே இடம்பெற்ற அறிவிப்பையும் மாற்றி கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர் சதீஷ், ஜெய்சன் மற்றும் தினேஷ்.
தொடர்ந்து பல சுவாரஸ்யமான திறமைகளை வெளிக்காட்டிய பேச்சு நடன இன்னும் பல நிகழ்வுகள் நடந்தேறின. இடை இடையே ஆலயத்தில் சிவராத்திரியின் ஜாமப்பூசைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
நிகழ்ச்சிகளின் ஒரு மகுடமாக வெற்றியின் அறிவிப்பாளர் A.R.V.லோஷன் அவர்களுடைய சகோதரனும் கொழும்பு பல்கலைக்கழக மாணவனும் ஆனா தவமயூரன் அவர்களும் மற்றுமொரு கொழும்பு பல்கலைக்கழக மாணவனான நிரோஷனும் நடுவர்களாக கலந்து சிறப்பித்த பட்டி மண்டபம் நிகழ்வு மிகவும் சூடாகவும் சுவையாகவும் நடைபெற்றது.
இவ்வாறு பல நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது வெற்றிக் குழுவினர் நேயர்களுடன் நேயர்களாக கலந்து இருந்து திடீரென அவர்களுக்குள் இருந்து ஒலி வாங்கியுடன் எழுந்து அவர்களுடன் பேசியது முதன்முறையாக ஒரு வித்தியாசமான இன்ப அதிர்ச்சியை நேயர்களுக்கு வழங்கியது அது மட்டுமன்றி வெற்றியின் நிகழ்ச்சிகள் மற்றும் அறிவிப்பாளர்கள் பற்றியும் நேயர்கள் எங்களுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
சில அன்பான நேயர்கள் எங்களுக்கு ஐஸ் கிரீம் மற்றும் தேநீர் இன்னும் உணவு வகைகளை வாங்கித் தந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினர்.
தொடர்ந்து அதிகாலை 3.30 அளவில் ஒரு நேயர் வெற்றி வானொலிக்கு தொலைபேசி அழைப்பெடுத்து பாடல் கேட்பதற்காக அழைப்பை ஏற்ப்படுத்த கலையகத்தில் இருந்து வெற்றியின் தினேஷ் அந்த நேயருடன் பேச ஆரம்பித்தால் ஒரு சின்ன குழந்தை. கேட்டதோ வில்லு பாட்டு. தினேஷோ வில்லுப்பாட்டு வேணுமென்றால் வில்லுடன் வரவேண்டும் என சொல்ல அதுவரை மறைந்ததிருந்து குழந்தை குரலில் பேசிய சதீஷ் வில்லுடன் மேடை ஏறினார். தொடர்ந்தது சிறிது நேரம் இந்த கலாட்டா தொடர்ந்த பின் வில்லுப்பாட்டு நிகழ்வு சிறுவர்களால் மேடை ஏற்றப்பட்டது. அந்த நிறைவு நிகழ்வுடன் வெற்றி குழு விடைபெற்றது.
இந்த நேரத்தில் ஆலய பரிபாலன சபையினருக்கும் அப்பிரதேச மக்களுக்கும் வெற்றிக் குடும்பம் சார்பாக நன்றி தேரிவித்துக்கொல்கின்றோம்.
Sunday, March 1, 2009
தினக்குரல் பத்திரிகையில் பிரசுரமான விமர்சனம்.
ஆரம்பித்து ஒரு வருட காலத்துக்குள்ளேயே மக்கள் மனதில் ஆழமாக ஊடுருவி இன்று வெற்றிகரமாக வலம் வரும் வெற்றி எப்.எம் தனியார் வானொலிகளில் முன்னணி வானொலியாக விளங்குகிறது.
இசை ராஜாங்கத்துடன் ஆரம்பமாகும் வெற்றியின் நிகழ்ச்சிகள் காற்றின் சிறகுகள் வரை வகை வகையானவை. சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் நிகழ்ச்சிகள் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.
இந்த வரிசையில் இப்போது ஆரம்பித்திருக்கும் திகில் கலந்த பிரமிப்பான நிகழ்ச்சிதான் ஆச்சரியமும் அனுமானுஷ்யமும். உருவங்களால் அன்றி குரல் வளத்தாலும் தயாரிப்புத்திறனாலும் இவ்வாறான நிகழ்ச்சிகளைத் தரமுடியும் என்பதில் வெற்றி, வெற்றிகண்டிருக்கிறது. பலருக்குத் தெரியாத சிலர் சொல்லத்தயங்கும் விடயங்களைக்கூட இதில் சொல்லமுடிகின்றது. இப்படியான நிகச்சிகளை ஆரம்பித்து வைத்த பெருமை வெற்றியையே சாரும்.
மயில் ஆடுவதைப்பார்த்து வான்கோழியும் ஆடமுற்பட்டு தன் பெயரையே கெடுத்துக்கொண்டதைப்போல சில நிகழ்ச்சிகளை நாங்கள் வேறு அலைவரிசைகளிலும் கேட்கக்கூடியதாக இருக்கிறது. அதுவும் பிரமாண்டமாக விளம்பரம் செய்து விட்டு ஒரு சிறு துளியையே கிள்ளித் தெளிக்கின்றனர்.
இந்தியாவின் விஜய் ரி.வியை பார்த்து மற்ற ரி.விக்கள் நிகழ்ச்சியை ஆரம்பித்து மூக்குடைபடும் கதைதான் இதுவும்.
எந்த வானொலியானாலும் தரமான நிகச்சிகளைத் தந்தால் தான் நிலைக்க முடியும். வெற்றி அறிவிப்பாளர்கள் அதை திறம்பட செய்கின்றனர். ஒரு குழுவாக செயற்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதைத்தான் வெற்றி எப்.எம் செய்திருக்கிறது.