Pages

Wednesday, December 28, 2011

Vettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்

  • வெற்றியின் கிறிக்கற் விருதுகள் ஏன்?
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தந்த ஆண்டுகளில் சாதனை படைத்தவர்களை திரும்பப் பார்ப்பதுவும், அவர்களை பாராட்டுதலும் அனைவருக்கும் பொதுவானது.
ஆகவே இது புதிய முயற்சியெல்லாம் கிடையாது. வழக்கமான ஒன்றை புதிய விதமாக, மேம்படுத்திய விதத்தில் செய்யும் முயற்சியே.

  • ஏன் நேயர்களின் வாக்கு?
பொதுவாக வானொலிகளும், தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும், இணையத்தளங்களும் தாங்களாக விருதுகளைத் தெரிவுசெய்து உங்களின் பார்வைக்கு வழங்கும் போது அவர்களின் விருதுத் தெரிவில் தவறிருப்பதை உணர்ந்திருப்பீர்கள். ஆனால் விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வழங்கிய விருதுகளில் மாற்றங்கள் வழங்க முடியாது.
ஆகவே உங்களுக்கு அந்த வாய்ப்பை வெற்றி வழங்குகிறது. இணையத்தள வசதியுள்ள அனைவரும் இதில் பங்குபற்றக்கூடியதாக இருக்கும்.


  • அப்போது இணையத்தள வசதியற்ற நண்பர்கள்?
தொலைபேசி, அலைபேசி நேயர்கள் கலையகத்திற்கு அழைப்பெடுத்தோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பியோ வாக்களிப்பது இலகுவானது கிடையாது. ஏனைய நிகழ்ச்சிகள் பாதிக்கப்படக்கூடாது.
விளையாட்டு நிகழ்ச்சி நேரங்களின் போது இதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட எதிர்பார்க்கப்படுகிறது.
தபாலட்டை நேயர்களின் வாக்குகள் எந்நேரமும் வரவேற்கப்படுகின்றன.



  • நேயர்களின் வாக்குகளை மாத்திரம் கொண்டு விருதுகள் வழங்கப்படுமா?
இல்லை. நேயர்களின் வாக்குகள் மாத்திரம் விருதுகளை முடிவு செய்யாது. வெற்றியின் நடுவர் குழாம் ஆராய்ந்து விருதுகளை வழங்கும். நேயர்களின் வாக்குகள் கணிசமாக தாக்கம் செலுத்தும். உதாரணத்திற்கு, ஒரு வீரர் 500 வாக்குகளையும், இன்னொருவர் 50 வாக்குகளையும் பெறுவாராயின் நிச்சயமாக 500 வாக்குகள் பெற்றவருக்கு விருது கிடைக்க முழுமையான வாய்ப்புகள் காணப்படும்.


  • ஏன் நேயர்களின் வாக்குகளை மாத்திரம் கருத்திற்கொள்ள முடியாது?
சிறந்த வீரர் என்பதையும், விருப்பத்துக்குரிய வீரர் என்பதையும் வேறுபடுத்த விரும்பினோம்.
சங்கக்காரவா அல்லது ராகுல் ட்ராவிட்டா இவ்வருடத்தில் சிறப்பாக ஆடினார்கள் என வினவப்படும் போது சங்காவின் இரசிகர்கள் சங்காவிற்கும், ட்ராவிட்டின் இரசிகர்கள் ட்ராவிட் இற்கும் வாக்களித்தால் அங்கு இவ்வாண்டில் அதிக இரசிகர்களுடைய வீரரொருவரே தெரிவுசெய்யப்படுவாரே தவிர, இவ்வாண்டில் சிறப்பாகச் செயற்பட்ட வீரரல்ல.
ஆகவே சிறந்த வீரரைத் தெரிவுசெய்ய நடுவர் குழாமும் செயற்படும்.


  • நடுவர் குழாமை எவ்வளவுக்கு நம்பலாம்? அவர்களின் விருப்பு வெறுப்புக்கள் தாக்கம் செலுத்துமே?
நடுவர்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் காணப்படினும், நடுவர் பணியில் ஈடுபடும் போது முழுமையாக நடுநிலையுடன் செயற்படுவார்கள் என உறுதியளிக்கிறோம்.
அத்தோடு நடுவர் குழாமிலுள்ள ஒவ்வொருவரும் வேறுபட்ட விருப்புக்களை, தெரிவுகளை உடையவர்கள். ஆகவே ஒரு வீரர் அல்லது நாடு விருதுகளில் தாக்கம் செலுத்த வாய்ப்புக்கள் கிடையவே கிடையாது.



  • எனது சந்தேகம் இங்கே காணப்படவில்லை.
எங்கள் பேஸ்புக் பக்கத்தில் அல்லது இந்த பதிவில் அவற்றை வினவுங்கள்.
எங்கள் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.



வாக்களிக்க இங்கே செல்லுங்கள்.
உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்.

No comments: