Pages

Showing posts with label வெற்றி எப் எம். Show all posts
Showing posts with label வெற்றி எப் எம். Show all posts

Tuesday, January 13, 2009

வெற்றியின் 'பொங்கலோ பொங்கல்'


தைத்திருநாளைக் கொண்டாடும் தரணியெங்கும் உள்ள அனைத்து தமிழ் நல் உள்ளங்களுக்கும் வெற்றியின் உளமார்ந்த உழவர் தின வாழ்த்துக்கள்.

வெற்றியின் பயணத்தில் முதலாவது தைத்திருநாளை கொண்டாட இருக்கும் நாம் நம் நேயர்களோடு சேர்ந்து இந்த பொங்கலை கொண்டாடலாம் என எண்ணியபோது தோன்றிய ஒரு வழிதான் பம்பலப்பிட்டி கதிரேசன் கோவிலில் 20 குடும்பத்தினருடன் பொங்கல் பொங்கி அதில் வெற்றிபெறும் முதல் மூன்று குடும்பத்தினருக்கும் பெறுமதியான பணப்பரிசினை வழங்குவது என்பது.

வழமையாகவே பொங்கல் என்றால் எல்லோருமே வீட்டில் பொங்கி அந்த வருடம் முழுவதும் தங்களை வாழவைத்த கதிரவனுக்கு எங்கள் நன்றியை செலுத்துவதுடன் தினமும் உழைத்து எங்களை வாழவைக்கும் உழவர்களை போற்றி நன்றி கூறுவதுடன் சிலர் ஆலயங்களுக்கும் சென்று இறைவழிப்பாட்டை மேற்கொள்வதுண்டு.

புதிதாக எல்லாவற்றையும் செய்யும் வெற்றியின் தைத்திருநாள் இம்முறை காலைவேளையில் ஆலயத்திலேயே ஆராதனைகளுடன் ஆரம்பமாகி பொங்கல் பொங்கி ஆதவனுக்கு படைத்து நேயர்களின் மனங்களையும் மகிழ்ச்சியில் பொங்கவைக்கும் என்பதில் ஐயமில்லை. 

இப்பொங்கல் திருநாளில் பங்குபற்றும் 20 குடும்பங்களிலிருந்து வெற்றியாளர்களை தெரிவுசெய்ய வெற்றியின் நடுவர்குழு காத்திருக்கிறது.  (இவர்களுக்கு நல்லா சாப்பிட தெரியுமே தவிர சமைக்கவே தெரியாது என்பதை நான் சொல்லமாட்டேன்.....) 

இந்நடுவர்குழு தெரிவு செய்யும் அவ்வெற்றியாளர்களுக்கு பணப்பரிசினை வழங்கி சந்தோஷப்படுத்த இருக்கின்றோம்.

வெற்றி ஆரம்பித்து முதன் முதலாக ஒரு பண்டிகை திருநாளன்று எம் நேயர்களோடு நேரடியாக இணைந்து நாங்கள் கொண்டாட இருக்கும் இத்திருநாளில் வெற்றியின் அறிவிப்பாளர்கள் உட்பட வெற்றிக்குடும்பத்தினர் அனைவரும் உங்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து இத்தைத்திருநாளை சிறப்பிக்க இருக்கின்றார்கள்.

பொங்கும் பொங்கல் அனைவர் வாழ்விலும் மங்கலப்பொங்கலாக பொங்க மீண்டும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

வெற்றி எப் எம்
வாழ்க்கைக்கு வெற்றி!