Pages

Saturday, June 13, 2009

Real gameமை தொடர்ந்து வரும் Reel game.

இன்றைய சனிக்கிழமை நானாட நீயாட நிகழ்ச்சியில் T20 உலகக்கிண்ண விசேட நிகழ்ச்சி. என்ன இது நானாட நீயாடவில் விளையாட்டா என அதிர்ச்சி ஆகாதிங்க. அவதாரம் எப்போதும் விளையாட்டு தான் அதை தொடர்ந்து வரும் நிகழ்ச்சியிலும் கொஞ்சம் விளையாடி பார்ப்போமே என தோன்றியதன் விளைவை இன்று இரவு நீங்கள் கேட்கலாம்.

இன்றிரவு எத்தனை மணிக்கு இந்த விசேட நிகழ்ச்சி? சொல்லமாட்டேன் செய்தி அறிக்கையை தொடர்ந்து ஒலிக்கப்போகும் நிகழ்ச்சி திடீரென சிறப்பாக மாறும். சிலர் இதை ஏற்கனவே ஊகித்திருக்கலாம் மற்றவர்கள் கொஞ்சம் எதிர்பார்ப்புடன் காத்திருங்களேன்.

Tuesday, June 2, 2009

கேட்க மறக்காதீர்கள்! இது ஒரு விசேட நிகழ்ச்சி!


இன்று இரவு உங்கள் வெற்றியில் ஒன்பது மணி செய்தி அறிக்கையை தொடர்ந்து ஒரு விசேட நிகழ்ச்சி. என்ன அது?


இயக்குனர் மணிரத்தினம்.

தமிழ் சினிமாவிற்கு தன் முத்திரையோடு நல்ல பல படங்களை தந்து ஒரு மாற்றத்தை உருவாக்கிய ஒரு மிகப்பெரிய இயக்குனர். இன்று வரும் புதிய இயக்குனர்கள் பலர் இவரை பின்பற்ற இன்றைய பல முன்னணி கதாநாயகர்களுக்கு இவர் படத்தில் நடிக்க இன்னும் ஆசை. இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர் இன்று தன் பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இன்று காலை முதல் அவரை சிறப்பிக்கும் வண்ணம் வெற்றியின் நிகழ்ச்சிகள் ஒலித்துக்கொண்டிருக்கிறன. அதே நேரத்தில் அந்த ஜாம்பவானுக்கு இனிய நல்ல வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.


இசை அமைப்பாளர் இளையராஜா.

இசைஞானி, ராகதேவன், இசை அரசன் என எத்தனை பட்டங்களையும் சூட்டலாம் இந்த இசை மைந்தனுக்கு. அன்னைக்கிளியில் ஆரம்பமாகி இன்று மகன் இசை அமைக்கும் போதும் கூட அதைவிட சிறப்பாக இசை அமைத்து அசத்தும் ராஜா இந்த இளையராஜா. பாடுவதிலும் வல்லவர். அப்படிப்பாட ஒரு பக்திமானை போற்றும் வண்ணம் இன்றைய காற்றின் சிறகுகள் நிகழ்ச்சி ஒழிக்க இருக்கின்றது.


ராஜாவின் வாழ்க்கை குறிப்புகள், திரை உலக பயணங்கள், விருதுகள் என அத்தனை அம்சங்களோடு அவர் இசை அமைத்த பாடல்களோடு பாடிய பாடல்களும் தேன் மழை பொழிய இருக்கின்றது. இசை ராஜாவிற்கு எண்கள் இனிய வாழ்த்துக்களோடு எங்களால் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி இது.
சாதனை நாயகர்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துவதோடு நீங்களும் காற்றலையில் கொஞ்சம் உங்கள் காதுகளை தீட்டி வையுங்களேன்.