Pages

Friday, May 28, 2010

வெற்றி பெற்றவர்கள்


இந்த சனிக்கிழமை வெற்றி வானலை வழியே தன் ஊடகத்துறைப் பயணத்தின் சுவடுகளை எம்மோடு பகிர்ந்துகொள்ளவிருப்பவர்
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர்
திரு M.மயில்வாகனம் சர்வானந்தா.

தன் அனுபவங்களை வெற்றியின் இரவு நேர செய்தியறிக்கையைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் நிகழ்ச்சி வாயிலாக பகிர்ந்துகொள்கிறார்...

Friday, May 14, 2010

வெற்றி பெற்றவர்கள்…


ஒரு சிறிய இடைவேளையைத் தொடர்ந்து மீண்டும் உங்கள் வெற்றியில் பிரதி சனிக்கிழமை தோறும் வெற்றி பெற்றவர்கள்…

இந்த சனிக்கிழமை வெற்றி வானலை வழியே தன் ஊடகத்துறைப் பயணத்தின் சுவடுகளை எம்மோடு பகிர்ந்துகொள்ளவிருப்பவர் பிரபல ஒலிபரப்பாளரும் எழுத்தாளரும் மற்றும் திறனாய்வாளருமான திரு. K.S சிவகுமாரன்.

தன் அனுபவங்களை வெற்றியின் இரவு நேர செய்தியறிக்கையைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் நிகழ்ச்சி வாயிலாக பகிர்ந்துகொள்கிறார்...

Thursday, May 13, 2010

வெற்றியில் ஒரு நட்சத்திர அறிவிப்பாளராக உங்களுக்கான வாய்ப்பு...


உங்கள் நீண்ட நாள் இலட்சியம் நாளை நனவாகிறது.....



வெற்றி வானொலியில் ஒரு நட்சத்திர அறிவிப்பாளராகும் வாய்ப்பையும் நாடு முழுவதும் வெற்றிக்கொடி கட்டி புதுமை படைக்கும் வெற்றி திட்டமிடல் குழுவில் இணையும் சந்தர்ப்பத்தையும் தவறவிடாதீர்கள்...

நாளாந்த தேடல், புதுமையான சிந்தனை, சாதிக்க வேண்டுமென்ற ஆர்வம் உங்களிடமிருந்தால் வெற்றி உங்களுக்கு...

சாதனை படைத்திட ஆர்வமுள்ளவர்கள் சுயவிபரக்கோவையோடு நாளை(14.05.2010) முற்பகல் 11 மணிக்கு வாருங்கள்.

முகவரி : வெற்றியின் பிரதான காரியாலயம்
இல. 117/10 ஹுணுப்பிட்டிய லேக் வீதி,
கொழும்பு – 02.

Sunday, May 9, 2010

வெற்றியோடு அன்னையர் தினம்...


பத்துத்திங்கள் தன்னில் தாங்கி
பத்திரமாய் தரணியில் கால் பதிக்க வைத்தவள்…
தன் உதிரத்தை உணவாக்கி
புது உறவுகள் பல தந்தவள்…
பார் போற்ற எம்மை பாராட்டி சீராட்டி வளர்த்தவளை
இனிய நாளில் இனிதாய் வாழ்த்துவோம்…
வெற்றியின் அன்னையர் தினவாழ்த்துக்கள்…