கதிரேசன் ஆலயத்தில் கதிரவனுக்கு பொங்கலோ பொங்கல்!
புது விதி செய்து வரும் வெற்றியின் தைத்திருநாள் கொண்டாட்டங்கள் பம்பலபிட்டி புதிய கதிரேசன் ஆலயத்தில் வெற்றிகரமா நடைபெற்றது.
ஏற்கெனவே பதிவு செய்திருந்த நேய நெஞ்சங்களோடு வெற்றிக் குடும்பமும் Voice of Asia நிறுவன ஊழியர்களும் இணைந்து இரவி பகவானுக்கு இனிய அமுதாக்கி படைக்க அனைத்து ஏற்பாடுகளும் காலை 9.30 மணிக்கே நிறைவு பெற்றிருந்தன. இந்த ஏற்பாடுகளை செய்த பெருமை வெற்றியின் திட்டமிடல் விரிவாக்கற் பிரிவைச் சேர்ந்தவர்களையே சாரும். நம் ஜேசன் (இவர் தான் காதல் கொண்டேன் தனுஷ் ஆம்...) மற்றும் தினேஷ் (இவரு வேற வாரணம் ஆயிரம் சூர்யாவாம்...) வழமைபோலவே பறந்து பறந்து எல்லா வேலைகளையும் செய்து முடித்த போட்டியை ஆரம்பிக்க வழி செய்தார்கள்.
காலை 10மணியளவில் வெற்றியின் அறிவிப்பாளர் விமல் ஒலிவாங்கியை கையிலெடுத்து போட்டியாளர்களை போட்டிக்கு தயாராகும்படி அறிவுறுத்தினார் (காலையில் இருந்து சாப்பிடவில்லை போல..) அதேநேரம் அறிவிப்பாளர் வனிதாவும் நண்பரொவரும் (நம்ம சதீஸ் தான்) சேர்ந்து போட்டியாளர்களுக்கான இலக்கங்களை அவர்களது அடுப்பாக வழங்கிய செங்கற்களில் பதித்தனர். (இலக்கங்களை எந்த மாற்றமுமில்லாமல் சரியாக போட்டு அசத்திட்டாங்க..) அதன்பின் அறிவிப்பாளர் சதீஷ் ஒவ்வொரு போட்டியாளர்களாக அவர்களுக்குரிய அடுப்புகளில் சேர்த்து பெயர்களையும் பதிவு செய்தபின் போட்டியும் ஆரம்பமானது. இந்த நெரத்திலம் விமலின் உற்சாகமூட்டும் அறிவிப்பு போட்டியாளர்களை வெற்றியை நோக்கி தூண்டிக் கொண்டிருந்தது.
என்றுமே வெற்றிக் குடும்பத்தின் வெற்றிக்காக உழகைகும் அருந்ததி அக்கா,பந்திபோடுவதையே நிகழ்ச்சியாக தரும் பூஜா வெற்றியின் உதவி முகாமையாளர் ஹிஷாம் இசைக்கட்டுப்பாட்டாளரும் அறிவிப்பாளருமான பிரதீப் என எல்லோரும் போட்டி ஆரம்பிக்க முன்னரே தாங்களும் சுறுசுறுப்பாகி போட்டி நேரமும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய வண்ணம் இருந்தனர்.(விரைவாக சாப்பிடனும் என்னும் அவா போல...)
பொங்கல் பொங்குவதற்கான அனைத்து பொருட்களையுமே வெற்றி வழங்கியதோடு அவ்வப்போது போட்டியாளர்களுக்னும் பார்வையாளர்களுக்கும் இன்ப அதிர்ச்சியையும் வழங்க தவறவில்லை.
இவ்வளவு நேரமாகியும் எங்கே வெற்றியின் முகாமையாளரும் விடியல் நாயகனுமான லோஷன் என்ற கேள்விக்கும் சற்று நேரத்தில் விடை கிடைத்தது. வந்தவர் தன் குரலையும் ஓலிக்கவிட்டு மேலும் சில பார்வையாளர்களை வசப்படுத்தினார். (உங்க குரலிலுள்ள மஜிக்க எங்களுக்கும் சொல்லித் தாங்களன்...
இதேநேரத்தில் இந்த நிகழ்வுக்கு சிறப்பு அதிதிகளாக வருகை தந்ததுடன் நடுவர்களாகவும் சிறப்பிக்க பிரபல நடன ஆசிரிi திருமதி கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் மற்றும் பிரபல சமையல் கலை நிபுணர் திருமதி மல்லிகா ஜோசப் ஆகியோர் தயாராகின்றனர். கோலம் சுவை சுத்தம் அலங்காரம் கலாசாரம் என்ற 5 விடயங்களின் கீழ் போட்டியாளர்களுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் ஏழுஐஊநு ழுகு யுளுஐயுவைச் சேர்ந்த வருகை தந்தவுடன் அறிவிப்பாளர் சுபாஷ்ம் எம்முடன் இணைந்து கொண்டார். (வழமைபோலவே மொபைல் போன்னும் கையுமாக) தொடர்ந்து உதவி இசைக்கட்டுப்பாட்டாளர் திஷோக்குமார் வந்தடைய வெற்றிக் குடும்பமும் ஏறக்குறைய முழுமையாக நேயர்களோடு இணைந்து கொண்டது.
இருந்தாலும் நிகழ்ச்சியை வழங்கவேண்டும் என்னும் கடமை உணர்வோடு காலையிலேயே ஆலயம் வந்து பின் நிறுவனத்துக்கு சென்று வினோத வியூகத்தை வழங்கிய Pநவநச அக்கா மன்னிக்கவும் வைதேகி நீங்க கிரேட்(அவங்க வயித்தெரிச்சல் யாருக்குத் தெரியும்)
பொங்கல் பொங்கிக் கொண்டிருந்த போமு நடுவர்கள் தங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்க ஹிஷாம் பூஜா சுபாஷ் பிரதீப் சதீஷ் வனிதா ஒவ்வொரு அறிவிப்பாளர்களாக நேயர்களுக்கு நேரடியாக வாழ்த்து சொல்லி மகிழ்வித்தனர்.
அதன்பின் சற்றுநேரம் எல்லோருக்கம் குழப்பம் இன்று புதன்கிழமையா என காரணம் தாம் தூம் நாயகர்களான சுபாஷ் பிரதிப்பின் சிறப்பு தாம்தூம் நேரடி நிகழ்ச்சி தான்.
சின்னஞ்சிறு சிறுவர்கள் போட்டியாளர்கள் அறிவிப்பாளர்கள் என கலாய்த்து வந்த இவர்களிடம் ஒரு இத்தாலி நண்பர் சேர்ந்து கொள்ள நம் சுபாஷ் pநவநச அக்காவுக்கே முப்பாட்டன் என்பதை நிரூபித்துவிட்டார். (நிஜமாவே உங்களுக்கும் பீட்டர் என்னும் பேருக்கம் சம்பந்தம் இருக்கா? அதுக்கு பிரதீப் கேட்டாரா நீங்க ஹிந்தியிலேயே பேசினீர்களென்று அப்பப்பா அவரின் அறிவே அறிவு (ஏன் எதற்கு எப்படி உங்களால மட்டும் முடியிது)
தாம் தூம் கலகலப்பாக போய்க் கொடிருக்கும் போதே லோஷன் அதை நிறுத்திட்டார். காரணம் இன்னொரு அன்ப அதிர்ச்சி சகல போட்டியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்க மீண்டும் தொடர்ந்தது தாம்தூம்.
இந்த நேரத்தில் ஒரு சில பானைகள் பொங்கிச்சரிய ஆரம்பிக்க விமலின் சிம்மக் குரலோடு நேயர்களும் பொங்களோ பொங்கல் சொல்லி கதிரவனுக்கு நன்றி தெரிவித்தனர்.
12மணியளவில் பகல் பந்தி நிகழ்ச்சிக்காக சதீஷ் மற்றும் வனிதா கலையகம் செல்ல தயாரானாலும் தாமதப்பட்டு நிற்க லோஷன் போட்டு உடைத்தார். அந்த உண்மையை பொங்கல் சாப்பிடாமல் நிகழ்ச்சிக்கு செல்ல தயங்குகிறார்கள் என்று (பாவம் அவங்க இரண்டுபேரும் இந்த பொங்கலை சாப்பிட வேண்டும் என்பதற்காக எத்தனை நாளாக சாப்பிடாமல் வயிற்றில் இடம் ஒதுக்க வச்சாங்களோ..?
தொடர்நது எல்லா பானைகளும் பொங்கிச் சரிந்த பின் கதிரவனுக்கு படையல் செய்து வழிபட்டனர். அதன்பின் நடுவர்கள் உட்பட ஒரு சில வெற்றிக் குடும்பத்தவரும் சுவை பார்த்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.
முதலாம் இடத்தினை கொழும்ப 6ஐச் சேர்நத தரணீதரன் குடும்பமும் இரண்டாம் இடத்தினைச் கொழும்பு 13ஐச் சேர்ந்த சுசீலாதேவி குடும்பமும் கொழும்பு 04ஐச்சேர்ந்த குமார் குடும்பம் 3ஆம் இடத்தினை பெற்று முறையே 10000 ரூபா பணப்பரிசினை ஏழுஐஊநு ழுகு யுளுஐயு நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி திரு டினால் பெரமன அவர்களிடமிருந்தும் ரூபா 7000 நிறுவனத்தின் பொது முகாமையாளர் திரு மோகன்ராஜ் மடவலவிடமிருந்தும் ரூபாய் 5000 பணத்தினை நிறுவன வர்த்தக முகாமையாளர் ஜெயந் அவர்களிடமிருந்தும் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து நடுவராக கலந்து சிறப்பித்த திருமதி மல்லிகா ஜோசப் எல்லோரையும் பாராட்டி உற்சாகப்படுத்தி பேசினார். இதனிடையே நம் பேப்பர் தம்பி கஞ்சிபாயும் யாருக்கம் தெரியாமல் விழாவில் கலந்து கொண்டதுடன் பொங்கலை ஒரு கட்டுகட்டிவிட்டனர்.
விரிவாக்கற் பிரிவைச் சேர்ந்தவர்களும் வியாபார பிரிவைச் சேர்ந்தவர்களும் செய்தி ஆசிரியர்கள் பென்சி மற்றும் ரஜனிகாந்துடன் சகல நிருபர்களும் கலந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து நடுவர்களுக்க நினைவுப் பரிசில்களும் வழங்கி சிறப்பித்ததுடன் நேயர்களுட்ன எல்லோரும் உரையாடியமுடன் நிகழ்வுக்கும் இனிதாக நிறைவுபெற்றன.
போட்டியில் பற்குபற்றிய வெற்றியீட்டிய அதேநேரம் கலந்த சிறப்பித்த அனைவருக்கம் நன்றிகளை தெரிவித்தக் கொள்கின்றோம். அத்தடன் இந்த நிகழ்வுக்கு சகல ஒத்தழைப்பையும் நல்கிய ஆலய நிர்வாகத்துக்கு அனைத்த நல் உள்ளங்களுக்கம் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்கி சிறப்பித்த கணேஷ் டெக்ஸ்டைல்ஸ் ஸ்தாபனத்தாருக்கம் Span towers நிறுவனத்தாருக்கும் பரிசுகளை வழங்கி சிறப்பித்த The Pizza நிறுவனத்தாருக்கும் நேயநெஞ்சங்களுக்கும் வெற்றிக் குடும்பத்தின் உளமாரிந்த நன்றிகள்.
வெற்றி எப்.எம் வாழ்க்கைக்கு வெற்றி!