Pages

Thursday, January 8, 2009

விடியலும் கஞ்சிபாயும்


தனியார் வானொலி வரலாற்றில் மற்றுமொரு புதிய வெற்றிகரமான வானொலியாக உதித்ததுதான் வெற்றி F.M. குறுகிய காலத்திலேயே பல வித்தியாசமான படைப்புகளால் பலரது நெஞ்சங்களில் வெற்றிகரமாக இடம்பிடித்ததுதான் வெற்றி வானொலி. இன்னும் முழுமையாக இலங்கை முழுவதும் வலம் வராமலேயே குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டும் தேன்மழை பொழிந்து ஒரு பெரிய நேயர் கூட்டத்தோடு வெற்றிகரமாக கொடிகட்டி பறக்கின்றது வெற்றி.

திங்கள் முதல் வெள்ளி வரை காலை ஆறு மணிக்கு விடியல் ஆரம்பித்தபின் சுவாரஸ்யமாக செல்லும் விடியலின் நகைச்சுவை நாயகர்களில் முதன்மையானவர்தான் எங்கள் கஞ்சுபாய். பிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவர் வரும்போது எல்லா இடத்திலும் வெற்றி சத்தமாக அதிருமே அதுதான் அவரின் வெற்றி. சுருக்கமாக சொல்லபோனால் இவர் ஒரு வடிவேலு, இவர் மனைவிதான் கோவை சரளா. 

முதன்முதலாக வானொலி மூலம் பிரபலமான ஒருவருக்கு ரசிகர் மன்றம் உள்ளதும் இவருக்குத்தான்.

சிங்கபூர் சீலன், லாடுலபக்குதாஸ், பெஞ்சுபாய் இவர்களோடு நம் லோஷன். இந்த நண்பர் வட்டத்தில் நடக்கும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் நீங்கள் தினமும் கேட்டு மகிழும் விடயங்கள் உங்கள் பாசையில் நகைச்சுவைகள். இவர்களிடம் நம் லோஷன் அடிக்கடி மாட்டுப்பட்டு படும் அவஸ்தை ஒரு சுகமான சுமை.

கஞ்சிபாய் உண்மையில் ஒரு நல்ல மனிதர். எப்போதும் பிறரை சிரிக்க வைக்கவே வரம் வாங்கி வந்தவர். இந்தக் கொடுப்பனையை ஆண்டவன் எத்தனை பேருக்குத்தான் கொடுப்பான். ஜாடிக்கேற்ற மூடி என்பதுபோல திருமதி.கஞ்சிபாயும் ரொம்ப ஜாலியானவர். கஞ்சிபாயின் மகனும் அப்பாவின் பெயரை கட்டிக்காப்பாற்ற பிறந்தவன் என்பதை பலமுறை நிரூபித்துவிட்டார். 

கஞ்சிபாயை பொறுத்தவரை தான் செய்யும் எல்லா வேலையையும் தன்  அதிசிறந்த மூளையில் திட்டமிட்டே மிகச்சிறப்பாக செய்வார். இதனால் தான் மக்கள் மத்தியில் இன்று பெயரோடும் புகழோடும் வலம் வருகிறார். தான் செய்யும் காரியங்கள் ரொம்ப புத்திசாலித்தனமானது என்று எண்ணி மிகவும் சீரியஸாக அவர் செய்யும் காரியங்கள் தான் நாம் தினமும் கேட்கும் வரலாற்று பதிவுகள். 

இந்த பதிவுகள் லோஷன் - கஞ்சிபாய் நட்புவரை என்றென்றும் தொடரும்.    

No comments: