Pages

Friday, July 30, 2010

வெற்றி செய்திப்பிரிவு தீக்கிரை

எமது வெற்றி வானொலி நிலையம் (voice of asia network pvt ltd.) இனம் தெரியாத காடையர்களால் சேதப்படுத்தப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது...

இன்று அதிகாலை 1.20அளவில் 10இற்கும் மேற்பட்ட காடையர்களால் எமது நிறுவனம் தாக்குதலுக்குள்ளாகியது. எமது செய்திப்பிரிவு முற்றாக செயலிழந்து போயுள்ளது.

எமது செய்திப்பிரிவைச்சேர்ந்த ரஜனி மற்றும் லெனின் தாக்கப்பட்டதுடன் நிறுசனத்தின் பாதுகாப்பு அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செயலிழந்து போயிருக்கும் வெற்றி செய்திப்பிரிவு விரைவில் இயங்குவதற்கான அத்தனை பணிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

Saturday, July 10, 2010

வெற்றி பெற்றவர்கள்....

இவ்வாரம் வெற்றியின் வெற்றிபெற்றவர்கள் நிகழ்ச்சியில் தன் ஊடகத்துறை, கலைத்துறை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவிருப்பவர்
சிரேஷ்ட ஊடகவியலாளரும் சிரேஷ்ட இசைக்கலைஞருமான
திருமதி. அருந்ததி ஸ்ரீரங்கநாதன்.


மேடை நிகழ்சிகள், இயல், இசை, நாடகம் எனும் துறைகளில் சாதித்த, கலைத்துறையில் சிகரம் கண்ட, திருமதி. அருந்ததி ஸ்ரீரங்கநாதன் வெற்றிப் பெற்றவர்கள் நிகழ்ச்சியில் உங்களை சந்திக்கவுள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளரும் சிரேஷ்ட இசைக்கலைஞருமான
திருமதி. அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பங்கேற்கும் வெற்றி பெற்றவர்கள் நிகழ்ச்சியை கேட்கத்தவறாதீர்கள்...