Pages

Wednesday, December 31, 2008

புதிய வருடத்தில் புதிய வெற்றி..


 
99.6 F.M, 93.6 F.M, 101.5 F.Mஅலைவரிசைகளில் வலம் வந்து குறுகிய காலத்தில் நேயர்கள் மனதில் அழியாத இடம் பிடித்து வெற்றிக்கொடிகட்டி பறக்கும் வெற்றி F.M புத்தாண்டில் புதுத்தென்புடன் காலடி எடுத்து வைக்கிறது. 
  
ஆரம்பத்தில் வித்தியாசமான படைப்புக்கள் மூலம் நேயர்கள் நெஞ்சில் நுழைந்து இன்று நிலையாக இடம்பிடித்திருக்கும் வெற்றியின் வெற்றியில் பங்கு கொள்ளும் எங்கள் அன்புக்குரிய நேயர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.
 
அதிகாலைபொழுதில் பூ பூக்கும் நேரம் நிகழ்ச்சியில் சந்துருவும் பூஜாவும் நற்சிந்தனைகளை வழங்கி அன்றைய நாளை நல்ல நாளாக தொடக்கி வைக்க 

வாழ்த்துக்கள், "பேப்பர் தம்பி", "விளையாட்டு வலம்", கஞ்சிபாய், சிங்கபூர் சீலன், லாடு லபக்கு தாஸ், பெஞ்சிபாய்,  என நகைச்சுவை கில்லாடிகளின் நகைச்சுவைகளோடு லோஷன் தரும் விடியல் என்றுமே தமிழ் மக்கள் வாழ்வில் விடியல். புத்தாண்டு அன்று புத்தாண்டு சபதங்களோடும் புதிய விடயங்கNshLம் உங்களை சந்திக்க இருக்கிறது விடியல்.

அதனைத் தொடர்ந்து வித்தியாசமான சுவாரஸ்யமான சம்பந்தமே அற்ற நபர்கள், பொருட்கள், சம்பவங்களை ஒன்றாக்கி அவற்றுக்கு இடையே தேர்தல்போல விநோதவியூகத்தில் ஒரு போட்டியையே நடத்தும் விமலும் வைதேகியும் விரிக்கும் வியூகம் நிச்சயமாக விநோதமானதுதான். புது வருடத்திலும் புது வருடத்துடன் சம்பந்தபட்ட விடயங்களை போட்டியிட வைக்க காத்திருக்கிறது வினோத வியூகம். 

மதிய நேரத்தில் நாம் சாப்பாட்டு பந்தியில் அமரும் நேரம்கூட எங்களை சோர்வடைய விடாமல் உற்சாகமாக வானலை பரிசுகளோடு பூஜா போடும் பகல் பந்தி என்றுமே ஒரு "Energy". புத்தாண்டு அன்று எல்லையற்ற பரிசுகளோடு உங்களை மகிழ்விக்க காத்திருக்கிறது.

மாலைவேளைகளில் உலகவிடயங்கள், உள்ளூர் தகவல்கள், ஏன்? தெரியாத விடயங்கள் என எல்லாவற்றையும் திரட்டி ரசனையுடன் தரும் நண்பன் ஹிஷாமின் கற்றது கையளவு எங்களுக்கும் தருமே தெளிவான உலகறிவு. புத்தாண்டு சம்பந்தமான பல விடயங்களுடன் உங்களுக்காக காத்திருக்கிறது.

அதன்பின் சந்துருவின் எங்கேயும் எப்போதும் எங்கேயும் கலகல எப்போதும் சுவாரஸ்யம். நாம் விரும்பும் பாடல்கும் நகைச்சுவைகளும் வாழ்த்துக்களும் எமக்கு தரும் என்றுமே புன்னகை.

இதமான இரவு வேளைகளில் இதயத்துடன் பேச காற்றின் சிறகுகளோடு சுபாஷ் தரும் கானங்களும், கவிதைகளும், ஆகாயமுகவரியும் வானொலியில் மற்றுமொரு திருப்பம். புத்தாண்டன்று முற்றிலும் வித்தியாசமாக உங்களுடன் சிறகு விரிக்க காத்திருக்கிறது. 

நள்ளிரவு முதல் அதிகாலை வரை ஷகி வேலுவின் இசை ராஜாங்கம் இனி என்றுமே புதுமை புரட்சி. புதுவருடத்திலும் உங்கள் அபிமான பாடல்கள் தொடர்ச்சியாக.........

இவை எல்லாம் நம் நேயர்கள் மனதில் மிகக் குறுகிய காலத்தில் பிரபல்யமடைந்த நிகழ்ச்சிகள். எம் நேயர் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்ற இந்நிகழ்ச்சிகள் உங்களுக்கு பிடித்த வண்ணம் புது மெருகுடன் புதுத் தென்புடன் புத்தாண்டிலும் புதுமை படைக்க இருக்கிறது வெற்றி 
புத்தாண்டன்று இன்ப அதிர்ச்சிகளுடன் இனிய நிகழ்ச்சிகளையும் தர இருக்கும் வெற்றியோடு தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

வெற்றி F.M
வாழ்க்கைக்கு வெற்றி 
புதுவருடத்திலும் புது விதி செய்வோம்.

vettri@voa.lk 

Monday, December 29, 2008

ஜெய்சன் வீட்டில் - அன்னதானம்!!!

27.12.2008 மதியம் 1.30 மணியளவில் வெற்றி F.M அலுவலகத்தில் அனைத்து நண்பர்களும் மிக முக்கியமாக ஒன்று கூடினோம். வேறொன்றுக்குமல்ல எங்கள் விரிவாக்கல் பிரிவைச் சேர்ந்த ஜெய்சனது வீட்டில் இடம்பெறும் மத்திய விருந்துபசாரத்தில் கலந்து கொள்வதற்காகத்தான். வழமைபோல லோஷன் உடைய வாகனத்தில் அடைந்த வண்ணம் ஏறிய விமல், பிரதீப், ஹிஷாம், சுபாஷ், சதீஷ், பூஜா, வைதேகி, எல்லோருமே வழமையான கிண்டல் கேலிகளுடன் ஜெய்சன் வீட்டினை நோக்கி பயணமானோம்.

இன்று நம் லோஷன் முகத்தில் ஒரு கண்ணாடி அவரின் அழகாய் இன்னும் அதிகப்படுத்திக்காட்டியது என்றால், நம் பூஜாவும் வைதேகியும் தங்களை அழகு படுத்திய விதமே ஒரு தனி அழகுதான். என்ன செய்வது மற்ற நண்பர்கள் சாதரணமாகவே வந்ததனர்.
விருந்துக்கு போகும்போது வெறும் கையுடனா போகமுடியும்? ஏதோ எங்களால் முடிந்த ஒரு பரிசுடன் ஒருவாறு ஜெய்சன் வீட்டினை தேடிப்பிடித்து போனபோது ஜெய்சனது குடும்பமே ஒன்றாக நின்று, அன்பாக வரவேற்று, எங்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கினார்கள்.

வழமையான அறிமுகங்களின் பின் எங்கள் உபதொழிலான கிண்டல் பேச்சுகள் ஆரம்பமாகின. இதில் லோஷன் முதல் புதிதாக வந்த சதீஷ் வரை யாருமே தப்பவில்லை. அதேபோல் எந்தப்பேச்சும் யாரையுமே காயப்படுத்தவில்லை.
இதில் சில நண்பர்கள் தவிர்க்கமுடியாத காரணத்தால் கலந்துகொள்ளமுடியாமல் போனதுடன் கடமையை கண்ணாகபோற்றும் சந்துருவும் வனிதாவும் கலையகத்திலேயே நாம் என்ன என்ன எல்லாம் உண்போமோ என்ற கனவுடன் இருபது புது இசையை உங்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தனர்.

ஜெய்சன் வீட்டிலோ சற்று பேச்சுக்கள் குறைந்து உணவின் பக்கம் பார்வை திரும்பியது. எல்லோருக்கும் பிடித்த அசைவ உணவுதான்... வயிறு நிறைய எல்லோரும் உண்டோம். உண்ணும்போது கூட எங்கள் நண்பர்களின் "கடி" குறையவில்லை. உணவைதொடர்ந்து வந்த "dessert" விட்டுவைக்கவில்லை.
அதன்பின் மீண்டும் குறும்பு பேச்சுகள். இடையே நண்பர் திஷோக்குமாருக்கு நாம் தொலைபேசி வாயிலாக கொடுத்த இனிய இம்சை மற்றொரு சிறப்பு. எங்கள் தொலைபேசி இலக்கத்தையே "sorry", இது "wrong number"என சொல்ல வைத்த சாதனையாளர்கள் எங்கள் நண்பர்கள்.

ஒருவாறாக திஷோக்குமாருக்கும் செய்திப்பிரிவைச் சேர்ந்த விஜயகுமாரும் ஜெய்சன் வீட்டினை அடைந்தபின் ஒருவர் பின் ஒருவராக photo எடுத்தனர். எங்கள் group photo எடுக்கும்போது விஜயகுமார் ஆறு தடவை ஒரே படத்தினை "click" செய்தது என்றுமே மறக்கமுடியாது. நிறைவில் ஜெய்சன் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தபின் மீண்டும் லோஷனின் வாகனத்திலேயே ஏறினோம்.

அலுவலகத்துக்கு வருகிறோம் என லோஷன் வேறு ஏதோ வழியில் போய்விட்டு வைதேகியை கலாய்த்ததுடன் வாகனத்திலேயே signalஇனை பக்கம் மாற்றி போட்டுக்காட்டி தன் "driving" திறமையை காட்டியது மற்றொரு அனுபவம். ஒருவாறாக நம் ஏன்? எதற்கு? எப்படி? "ஹீரோவை" நான்கு மணிக்கு சில நிமிடங்கள் இருக்கும் வேளையில் அவரை அலுவலகத்தில் சேர்த்து தான் ஒரு வெற்றியாளன் என்பதனை நிரூபித்தார் லோஷன்.
இந்த இனிமையான நேரத்தில் ஜெய்சன் குடும்பத்திற்கு வெற்றி குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
--------------

Friday, December 26, 2008

காற்றின் சிறகுகள் வழியே ஆகாய முகவரிக்கு காற்றோடு கலந்த கடிதம்.


சந்தோஷமாய் குதூகலமாய் கொண்டாடிய நத்தார் பண்டிகை, உண்ட உணவு செறிமானம் ஆகும் முன்னம் டிசம்பர் 26ம் திகதி எம்மனைவரையும் கலங்கடிக்க வைத்தாள் கடல் தாய். உறங்க மடி தந்தவளே உறக்கத்தை பலருக்கு நீண்டதாயும் தந்தாள். இன்னும் பலரின் உறக்கத்தையும் பறித்துவிட்டாள். பெயர் தெரியாத ஒருத்தியாய் உருவெடுத்து இன்று சுனாமி என அழைக்கப்படுகிறாள்.

ஒரு பொருளை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதை இல்லாதொழிப்பது அவ்வளவு கடினமல்ல என்பதை உன்னைக்கண்ட பின் எல்லோரும் உணர்ந்திருப்பார்கள்.

டிசம்பர் மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது தேவபாலன் பிறப்பே. இந்நிலை நான்கு வருடங்களுக்கு முன் இருந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் டிசம்பர் என்றாலே உடனே நினைவுக்கு வருவது சுனாமி. அந்தளவிற்கு கடல் அன்னையின் மறு உருவம் எம்மனைவர் மனதிலும் பதிந்துவிட்டது.

இவ் நான்கு வருடத்தில் எத்தனையோ மாற்றங்கள் நடந்தேறிவிட்டன. அதில் ஒன்றாக, உங்களோடு இணைந்தது தான் வெற்றி FM
.
உங்களில் ஒருவன் வெற்றி FM என்பதால் ஆழிப்பேரலையில் உயிரிழந்தோரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும் அதேவேளை, எம்மைவிட்டு பிரிந்தவர்களுக்கான கடிதங்களையும் பகிர்ந்துகொள்ளப்போகிறான் வெற்றியின் காற்றின் சிறகுகள் வாயிலாக.

விந்தை மிகு உலகமல்லவா இது. அதனால் காற்றோடு கலந்தவர்கள் நிச்சயமாக எம் சொந்தங்களின் பிரிவுத்துயரங்களை இன்று ஆகாய முகவரி வாயிலாக ஒலிக்கும் போது கேட்பார்கள்.

இணைந்திடுங்கள் நீங்களும் இன்றிரவு 9 மணி செய்தியறிக்கையின் பின் சுனாமி நினைவாக ஒலிபரப்பப்படவிருக்கும் காற்றின் சிறகுகள் நிகழ்ச்சியில் ஆகாய முகவரியோடு.
கொழும்பு 99.6
கண்டி 101.5
ஊவா மற்றும் தென்கிழக்கு 93.6

Wednesday, December 24, 2008

சோகங்களை சுகமாக்கிட வந்த சொந்தம் வெற்றி FM !


உங்களோடு என்றென்றுமே தோளோடு தோள் நிற்கப் போகும் தோழன் இன்று, வானலையில் 10 மாத குழந்தையாக தவழும் வெற்றி FM . தனது முதலாவது கிறிஸ்மஸ் பண்டிகையினையும் ஆர்ப்பாட்டமில்லாத, அழகான, அமைதியான நத்தார் பண்டிகையாக உத்தியோகபூர்வமாக உலகளாவிய ரீதியில் நேயர்களோடு கொண்டாவிருக்கின்றது.


அவ்வகையிலேயே இம்மாதம் 15ஆம் திகதி முதல் நத்தார் கொண்டாட்டங்களை ஆர்ப்பாட்டமில்லாது ஆரம்பித்தது. தேவபாலனை வாழ்த்தும் பாடல்களையும், தனிமனித வாழ்வை மேம்படுத்தும் நத்தார் சிந்தனைகளையும் இன்றுவரை செவ்வனவே வழங்கி வருகின்றது. இதேபோல் மற்றுமொரு சிறப்பம்சமாக அமையப்போவது தேவபாலன் பிறக்கும் நள்ளிரவு, கொழும்பு 13 புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து எமது அறிவிப்பாளர்கள் வழங்கவிருக்கும் நேரடி ஒலிபரப்பு. அதுமட்டுமல்லாது நத்தார் தினத்தன்று வெற்றியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பல்வேறுபட்ட வித்தியாசமான மாறுபட்ட அம்சங்களும் இடம்பெறவிருக்கின்றன.



சிசுபாலனை சிரம் தாழ்த்தி பூ பூக்கும் நேரத்தில் வரவேற்று விடியல் நிகழ்ச்சியிலே அவர் கருத்துக்களை அனைவரோடும் பகிரச் செய்து அவருடைய வினோதங்களை இவ்வியூகத்திற்கு வினோத வியூகம் வாயிலாக விளக்கி பஹல் பந்தியில் தேவபாலனை பசியாறச் செய்து அவரிடம் நாம் கற்றதை உலகறியச் செய்து எங்கேயும் எப்போதும் உலகமக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களாய் ஒற்றுமையாய், இன, மத, வேறுபாடின்றி சாந்தியும் சமாதானமாய் வாழ நல்வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து காற்றின் சிறகுகள் மூலம் மண்ணுலகத்திற்கு மீண்டும் வரச்சொல்லி விண்ணுலகம் அனுப்பி வைப்போம் அதிரூபனை.

சிசுபாலனின் கொண்டாட்டத்தோடு எம்மோடு இணையவிருக்கும் மற்றுமொரு நபர் குடு குடு ஆனாலும் துடிப்பான இளைஞனாக நம் வெள்ளை தாத்தா SANTA. வெற்றியோடு நத்தாரை கொண்டாடும் நேயர்களுக்கு வானலைப் பரிசுகளை வழங்கி சிசுபாலனின் தோற்றம் கொண்ட குழந்தைகளோடும் தம் பொழுதை கழிக்கவுள்ளார்.

இதெல்லாம் எவ்வாறு எப்படி என்று யோசிப்பவர்களும் அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் நத்தாரை கொண்டாட விரும்புவர்களும் இணைந்திருங்கள் வெற்றியோடு என்றென்றும்.

வெற்றி FM கிறிஸ்மஸ் FM


வெற்றி FM - "வாழ்க்கைக்கு வெற்றி"



Tuesday, December 23, 2008

McDonalds கற்றது கையளவு.



உலக நிகழ்வுகள், பொருளாதார நெருக்கடி, சினிமா என பல துறைகளையும் அலசும் இரண்டு மணி நேர நிகழ்ச்சியை வாரநாட்களில் கேட்கத்தவறாதீர்கள்.
இந்த பண்டிகை காலத்தில் வெற்றி FM இல் மாலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை கற்றது கையளவு நிகழ்ச்சியை கேட்கும் நண்பர்களுக்கு McDonalds வழங்கும் வவுச்சர்கள் காத்திருக்கின்றன.

அம்பாளின் அருளை வேண்டி வெற்றியுடன் இணைந்து நின்ற பெனிகல தோட்டம்


வாழ்க்கைக்கு வெற்றிதரும் வெற்றி எப் எம்மின் ஊடக அனுசரணையில் 22.12.2008அன்று. வரகாபொல பெனிகெலதோட்டம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய வீதி உலா நிகழ்வு இடம்பெற்றது. காலையில் இடம்பெற்ற அபிஷேக நிகழ்வுகளளின் அவ்வூர் மக்கள் பக்திசிரத்தையுடன் கலந்துகொண்டனர்.
குளுகுளுப்பான இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் பெனிகெல தோட்டத்தில் கால்பதித்த வெற்றிக் குழுவினர் தங்களுடைய இசைநிகழ்வை ஆலயமுன்றலில் ஆரம்பித்தனர். அவ்வூர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பக்திபாடல்களை ஒலிபரப்பி மகிழ்வித்தனர்.

மதியவேளையில் மீண்டும் பூஜைகள் ஆரம்பமாகி அம்பாள் ஆலயத்தை சுற்றி வலம் வந்தபின் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதேவேளை வெற்றியின் இசைமழையை ஆரம்பித்த வெற்றிக்குழுவினர் நேயர்களின் பெயர்களையும் வாழ்த்துகளையும் இணைத்ததோடு போட்டிகளையும் நடாத்தி வெற்றியின் நினைவுப் பரிசில்களையும் வழங்கி சிறப்பித்தனர்.
இதேநேரம் வெற்றி குழுவினருடன் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அனைத்து நேயர்களும் மிக்க மகிழ்ச்சியுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.

இதில் முதலில் தெளிவற்று இருந்த வெற்றி அலைவரிசையினை தாம் அன்டானாவை பூட்டி ஏன் எத்தனையோ தடவை தம் கைகளால் பிடித்தவண்ணம் வெற்றியை கேட்டதாகவும் வெற்றியின் பேப்பர் தம்பி விடியல் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளும் தங்களை கவர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர். அத்துடன் எங்களுடன் பேசிய 'சரோஜா' குழுவினர் தாங்கள் எத்தனையோ தடவை call எடுத்தும நாம் அதை answer பண்ணவில்லை என உரிமையுடன் குறைபட்டக்கொண்டனர்.

அத்துடன் வெற்றி குழுவினரை தங்கள் வீட்டுக்கு வந்து செல்லுமாறு எத்தனையோ நேயர்கள் அன்பாக அழைத்தும் பல நேயர்களின் வீடுகளுக்கு செல்லமுடியாமைக்கு வருந்துகின்றோம். அத்துடன் அன்பாக அனுசரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.

மாலை 3.30 மணியளவில் மீண்டும் பூஜைகள் நடைபெற்று மேளகச்சேரியுடன் வாத்தியக் குழுவினரும் தொடரிசை வழங்க வீதி உலா ஆரம்பமானது. பெனிகெல தோட்டத்திலுள்ள ஒவ்வொரு வீடு வீடாக சென்ற அம்பாள் அதன்பின் ஆலயத்திலிருந்து ஏறத்தாள 3 1/2 கிலோமீற்றர் துரத்திலுள்ள கண்டிவீதிவரை உலாவாக வந்து அருள் பாலித்தார். தமிழ் சிங்கள சகோதரர்கள் பேதங்களை மறந்து அம்பாளின் அருளை வேண்டி இணைந்து நின்றது கண் கொள்ளாக்காட்சியாகும்.

இவ்வீதி உலாவில் கலந்து கொண்டு வந்த வெற்றிகுழுவினர் அடையே ஆலய பரிபாலசபையினரும் இந்நிகழ்வுக்கு ஊடக அனுசரணை வழங்க உதவி புரிந்த வரகாபொல அட்டகாச புயல் அமுதனுக்கு வெற்றியின் நினைவுப்பரிசினை
வழங்கினர்
நள்ளிரவை தொடும் வேளையில் வீதி உலா நிறைவுக்கு வந்தது. வெற்றி குழுவினர் இங்கிருந்து விடைபெறும் போது பெனிஹெல தோட்டமக்கள் ஒன்று திரண்டு கரகோஷமெழுப்பி நன்றி தெரிவித்தனர்.
உண்மையிலேயே மிகச் சிறப்பாக நடைபெற்ற இவ்வீதி உலாவுக்கு வெற்றி குடும்பமும் பங்களிப்பு செய்வதையிட்டு மகிழ்கின்றோம்.

இதேநேரம் வீதி உலா நிறைவுற்ற பின்னர் ஆலயத்துக்கண்மையில் இசை நிகழ்வை வழங்கிடுவோம் என தெரிவித்த எம்மால் வீதி உலா நிறைவு நள்ளிரவை தொட்டதால் அவ் இசைநிகழ்ச்சியை வழங்க முடியாமல் போனமைக்கு வருந்துகின்றோம்.