Pages

Friday, December 26, 2008

காற்றின் சிறகுகள் வழியே ஆகாய முகவரிக்கு காற்றோடு கலந்த கடிதம்.


சந்தோஷமாய் குதூகலமாய் கொண்டாடிய நத்தார் பண்டிகை, உண்ட உணவு செறிமானம் ஆகும் முன்னம் டிசம்பர் 26ம் திகதி எம்மனைவரையும் கலங்கடிக்க வைத்தாள் கடல் தாய். உறங்க மடி தந்தவளே உறக்கத்தை பலருக்கு நீண்டதாயும் தந்தாள். இன்னும் பலரின் உறக்கத்தையும் பறித்துவிட்டாள். பெயர் தெரியாத ஒருத்தியாய் உருவெடுத்து இன்று சுனாமி என அழைக்கப்படுகிறாள்.

ஒரு பொருளை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதை இல்லாதொழிப்பது அவ்வளவு கடினமல்ல என்பதை உன்னைக்கண்ட பின் எல்லோரும் உணர்ந்திருப்பார்கள்.

டிசம்பர் மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது தேவபாலன் பிறப்பே. இந்நிலை நான்கு வருடங்களுக்கு முன் இருந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் டிசம்பர் என்றாலே உடனே நினைவுக்கு வருவது சுனாமி. அந்தளவிற்கு கடல் அன்னையின் மறு உருவம் எம்மனைவர் மனதிலும் பதிந்துவிட்டது.

இவ் நான்கு வருடத்தில் எத்தனையோ மாற்றங்கள் நடந்தேறிவிட்டன. அதில் ஒன்றாக, உங்களோடு இணைந்தது தான் வெற்றி FM
.
உங்களில் ஒருவன் வெற்றி FM என்பதால் ஆழிப்பேரலையில் உயிரிழந்தோரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும் அதேவேளை, எம்மைவிட்டு பிரிந்தவர்களுக்கான கடிதங்களையும் பகிர்ந்துகொள்ளப்போகிறான் வெற்றியின் காற்றின் சிறகுகள் வாயிலாக.

விந்தை மிகு உலகமல்லவா இது. அதனால் காற்றோடு கலந்தவர்கள் நிச்சயமாக எம் சொந்தங்களின் பிரிவுத்துயரங்களை இன்று ஆகாய முகவரி வாயிலாக ஒலிக்கும் போது கேட்பார்கள்.

இணைந்திடுங்கள் நீங்களும் இன்றிரவு 9 மணி செய்தியறிக்கையின் பின் சுனாமி நினைவாக ஒலிபரப்பப்படவிருக்கும் காற்றின் சிறகுகள் நிகழ்ச்சியில் ஆகாய முகவரியோடு.
கொழும்பு 99.6
கண்டி 101.5
ஊவா மற்றும் தென்கிழக்கு 93.6

1 comment:

Unknown said...

வணக்கம் ,
நான் குமார் ,தமிழ்நாடு .
உங்கள் நிகழ்ச்சிகளை குளிர் காலத்தில் எப் .எம் வாயிலாக
கேட்ப்போம் .
இப்பொழுது கேயு பேன்ட் DTH 98* Protostar மூலம் கேட்கிறோம் .

ஆனாலும் ரேடியோ பொட்டி மாதிரி இல்லை .

தமிழ்நாடு
கேட்கிறமாதிரி ரெடி பண்ணுங்களேன் உங்கள் சூரியனையும்
சக்தியைமும் வெற்றியையும் .