உங்களோடு என்றென்றுமே தோளோடு தோள் நிற்கப் போகும் தோழன் இன்று, வானலையில் 10 மாத குழந்தையாக தவழும் வெற்றி FM . தனது முதலாவது கிறிஸ்மஸ் பண்டிகையினையும் ஆர்ப்பாட்டமில்லாத, அழகான, அமைதியான நத்தார் பண்டிகையாக உத்தியோகபூர்வமாக உலகளாவிய ரீதியில் நேயர்களோடு கொண்டாவிருக்கின்றது.
அவ்வகையிலேயே இம்மாதம் 15ஆம் திகதி முதல் நத்தார் கொண்டாட்டங்களை ஆர்ப்பாட்டமில்லாது ஆரம்பித்தது. தேவபாலனை வாழ்த்தும் பாடல்களையும், தனிமனித வாழ்வை மேம்படுத்தும் நத்தார் சிந்தனைகளையும் இன்றுவரை செவ்வனவே வழங்கி வருகின்றது. இதேபோல் மற்றுமொரு சிறப்பம்சமாக அமையப்போவது தேவபாலன் பிறக்கும் நள்ளிரவு, கொழும்பு 13 புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து எமது அறிவிப்பாளர்கள் வழங்கவிருக்கும் நேரடி ஒலிபரப்பு. அதுமட்டுமல்லாது நத்தார் தினத்தன்று வெற்றியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பல்வேறுபட்ட வித்தியாசமான மாறுபட்ட அம்சங்களும் இடம்பெறவிருக்கின்றன.
சிசுபாலனை சிரம் தாழ்த்தி பூ பூக்கும் நேரத்தில் வரவேற்று விடியல் நிகழ்ச்சியிலே அவர் கருத்துக்களை அனைவரோடும் பகிரச் செய்து அவருடைய வினோதங்களை இவ்வியூகத்திற்கு வினோத வியூகம் வாயிலாக விளக்கி பஹல் பந்தியில் தேவபாலனை பசியாறச் செய்து அவரிடம் நாம் கற்றதை உலகறியச் செய்து எங்கேயும் எப்போதும் உலகமக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களாய் ஒற்றுமையாய், இன, மத, வேறுபாடின்றி சாந்தியும் சமாதானமாய் வாழ நல்வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து காற்றின் சிறகுகள் மூலம் மண்ணுலகத்திற்கு மீண்டும் வரச்சொல்லி விண்ணுலகம் அனுப்பி வைப்போம் அதிரூபனை.
சிசுபாலனின் கொண்டாட்டத்தோடு எம்மோடு இணையவிருக்கும் மற்றுமொரு நபர் குடு குடு ஆனாலும் துடிப்பான இளைஞனாக நம் வெள்ளை தாத்தா SANTA. வெற்றியோடு நத்தாரை கொண்டாடும் நேயர்களுக்கு வானலைப் பரிசுகளை வழங்கி சிசுபாலனின் தோற்றம் கொண்ட குழந்தைகளோடும் தம் பொழுதை கழிக்கவுள்ளார்.
இதெல்லாம் எவ்வாறு எப்படி என்று யோசிப்பவர்களும் அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் நத்தாரை கொண்டாட விரும்புவர்களும் இணைந்திருங்கள் வெற்றியோடு என்றென்றும்.
வெற்றி FM கிறிஸ்மஸ் FM
வெற்றி FM - "வாழ்க்கைக்கு வெற்றி"
No comments:
Post a Comment