Pages

Tuesday, December 23, 2008

அம்பாளின் அருளை வேண்டி வெற்றியுடன் இணைந்து நின்ற பெனிகல தோட்டம்


வாழ்க்கைக்கு வெற்றிதரும் வெற்றி எப் எம்மின் ஊடக அனுசரணையில் 22.12.2008அன்று. வரகாபொல பெனிகெலதோட்டம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய வீதி உலா நிகழ்வு இடம்பெற்றது. காலையில் இடம்பெற்ற அபிஷேக நிகழ்வுகளளின் அவ்வூர் மக்கள் பக்திசிரத்தையுடன் கலந்துகொண்டனர்.
குளுகுளுப்பான இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் பெனிகெல தோட்டத்தில் கால்பதித்த வெற்றிக் குழுவினர் தங்களுடைய இசைநிகழ்வை ஆலயமுன்றலில் ஆரம்பித்தனர். அவ்வூர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பக்திபாடல்களை ஒலிபரப்பி மகிழ்வித்தனர்.

மதியவேளையில் மீண்டும் பூஜைகள் ஆரம்பமாகி அம்பாள் ஆலயத்தை சுற்றி வலம் வந்தபின் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதேவேளை வெற்றியின் இசைமழையை ஆரம்பித்த வெற்றிக்குழுவினர் நேயர்களின் பெயர்களையும் வாழ்த்துகளையும் இணைத்ததோடு போட்டிகளையும் நடாத்தி வெற்றியின் நினைவுப் பரிசில்களையும் வழங்கி சிறப்பித்தனர்.
இதேநேரம் வெற்றி குழுவினருடன் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அனைத்து நேயர்களும் மிக்க மகிழ்ச்சியுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.

இதில் முதலில் தெளிவற்று இருந்த வெற்றி அலைவரிசையினை தாம் அன்டானாவை பூட்டி ஏன் எத்தனையோ தடவை தம் கைகளால் பிடித்தவண்ணம் வெற்றியை கேட்டதாகவும் வெற்றியின் பேப்பர் தம்பி விடியல் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளும் தங்களை கவர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர். அத்துடன் எங்களுடன் பேசிய 'சரோஜா' குழுவினர் தாங்கள் எத்தனையோ தடவை call எடுத்தும நாம் அதை answer பண்ணவில்லை என உரிமையுடன் குறைபட்டக்கொண்டனர்.

அத்துடன் வெற்றி குழுவினரை தங்கள் வீட்டுக்கு வந்து செல்லுமாறு எத்தனையோ நேயர்கள் அன்பாக அழைத்தும் பல நேயர்களின் வீடுகளுக்கு செல்லமுடியாமைக்கு வருந்துகின்றோம். அத்துடன் அன்பாக அனுசரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.

மாலை 3.30 மணியளவில் மீண்டும் பூஜைகள் நடைபெற்று மேளகச்சேரியுடன் வாத்தியக் குழுவினரும் தொடரிசை வழங்க வீதி உலா ஆரம்பமானது. பெனிகெல தோட்டத்திலுள்ள ஒவ்வொரு வீடு வீடாக சென்ற அம்பாள் அதன்பின் ஆலயத்திலிருந்து ஏறத்தாள 3 1/2 கிலோமீற்றர் துரத்திலுள்ள கண்டிவீதிவரை உலாவாக வந்து அருள் பாலித்தார். தமிழ் சிங்கள சகோதரர்கள் பேதங்களை மறந்து அம்பாளின் அருளை வேண்டி இணைந்து நின்றது கண் கொள்ளாக்காட்சியாகும்.

இவ்வீதி உலாவில் கலந்து கொண்டு வந்த வெற்றிகுழுவினர் அடையே ஆலய பரிபாலசபையினரும் இந்நிகழ்வுக்கு ஊடக அனுசரணை வழங்க உதவி புரிந்த வரகாபொல அட்டகாச புயல் அமுதனுக்கு வெற்றியின் நினைவுப்பரிசினை
வழங்கினர்
நள்ளிரவை தொடும் வேளையில் வீதி உலா நிறைவுக்கு வந்தது. வெற்றி குழுவினர் இங்கிருந்து விடைபெறும் போது பெனிஹெல தோட்டமக்கள் ஒன்று திரண்டு கரகோஷமெழுப்பி நன்றி தெரிவித்தனர்.
உண்மையிலேயே மிகச் சிறப்பாக நடைபெற்ற இவ்வீதி உலாவுக்கு வெற்றி குடும்பமும் பங்களிப்பு செய்வதையிட்டு மகிழ்கின்றோம்.

இதேநேரம் வீதி உலா நிறைவுற்ற பின்னர் ஆலயத்துக்கண்மையில் இசை நிகழ்வை வழங்கிடுவோம் என தெரிவித்த எம்மால் வீதி உலா நிறைவு நள்ளிரவை தொட்டதால் அவ் இசைநிகழ்ச்சியை வழங்க முடியாமல் போனமைக்கு வருந்துகின்றோம்.

No comments: