Pages

Sunday, June 20, 2010

முதலிடத்தில் வெற்றி FM!

ஆரம்பித்து குறுகிய காலத்தில் நாடு முழுவதும் ஏராளம் நெஞ்சங்களை கவர்ந்த உங்கள் வெற்றி FM இன்று முதலிடத்தில்...

எம்மை முதற்தர வானொலியாக உங்கள் உள்ளத்தில் தரப்படுத்தி அழகுபார்க்கும் அத்தனை வெற்றி சொந்தங்களுக்கும் எம் மனமார்ந்த நன்றிகள்.

Thursday, June 17, 2010

வெற்றி பெற்றவர்கள்...

இவ்வாரம் வெற்றியின் வெற்றிபெற்றவர்கள் நிகழ்ச்சியில் தன் ஊடகத்துறை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவிருப்பவர்
சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு.S.நடராஜன்.

நேர்முகவர்ணணை, செய்தி வாசிப்பு, ஊடகத்துறையில் அறியாமல் விடப்படுகின்ற தவறுகள் இவற்றோடு இன்னும் பல்வேறுபட்ட சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்துகொள்ளவுள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு.S நடராஜன் பங்கேற்கும் வெற்றி பெற்றவர்கள் நிகழ்ச்சியை கேட்கத்தவறாதீர்கள்...

Wednesday, June 16, 2010

ராவணன் பார்க்க இலவச நுழைவுச்சீட்டு

6 வருடங்களுக்கு பின் தமிழில் மணிரத்னம் தரும் பிரமாண்டமான படைப்பு…

OSCAR நாயகன் A.R ரஹ்மானின் இசையில் சீயான் விக்ரம், ப்ருதிவிராஜ், ஐஸ்வர்யா ராய், கார்த்திக், பிரபு, ப்ரியாமணி மற்றும் பலருடைய நடிப்பில் JUNE 18 முதல் உலகளாவிய ரீதியில்…


ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளியாகும் ராவணன் திரைப்படத்தை இலங்கைத்திரையரங்குகளில் இலவசமாய் கண்டுகளிக்கும் வாய்ப்பினை வெற்றி உங்களுக்கு வழங்குகிறது.

வாரநாட்களில் கற்றது கையளவு நிகழ்ச்சியைக் கேளுங்கள்…
ராவணன் திரைப்பட நுழைவுச்சீட்டுக்களை வெல்லுங்கள்…

ராவணன் திரைப்படத்திற்கு இலங்கையில் உத்தியோகபூர்வ வானொலி
உங்கள் வெற்றிFM... வாழ்க்கைக்கு வெற்றி…

Saturday, June 12, 2010

வெற்றி பெற்றவர்கள்

ஒலி, ஒளிபரப்பு துறையில் 32 வருட அனுபவம் கொண்ட, POP இசைத்திலகம் என்றழைக்கப்படும் நம் நாட்டு கலைஞரும் மூத்த ஊடகவியலாளருமான திரு.S. ராமச்சந்திரன் ஒலி, ஒளிபரப்புத்துறை, கலைத்துறை, இசைத்துறை பற்றி தன் அனுபவங்களை இன்றைய 
வெற்றி பெற்றவர்கள் நிகழ்ச்சி வாயிலாக பகிர்ந்துகொள்கிறார்.

Saturday, June 5, 2010

வெற்றி பெற்றவர்கள்

இந்த சனிக்கிழமை வெற்றி வானலை வழியே தன் ஊடகத்துறைப் பயணத்தின் அனுபவங்களையும் கடல் கடந்து ரசிகர்களை தன் குரலால் வசியப்படுத்திய பிரபல ஒலிபரப்பாளர் பற்றியும் இன்றைய வெற்றி பெற்றவர்கள் நிகழ்ச்சி வாயிலாக பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்
சிரேஷ்ட அறிவிப்பாளர் திரு.A.சந்ரமோகன்.

யார் அந்த வசியக்குரலோன்?

இன்றிரவு வெற்றியின் செய்தியறிக்கையைத் தொடர்ந்து உங்களோடு சிரேஷ்ட அறிவிப்பாளர் திரு.A.சந்ரமோகன்....