Pages

Showing posts with label வெற்றி. Show all posts
Showing posts with label வெற்றி. Show all posts

Monday, December 13, 2010

10 தலைகள் நாகம் பரபரப்பு....



உங்களை தெளிவு பெறச்செய்வதற்கான சாட்சியங்கள்....


உங்களை குழப்பமடையச்செய்யும் இதுபோன்ற விடயங்களை தெளிவுபடுத்த நாம் தயார். இவ்வாறான விடயங்களை வெற்றி வானொலியில் மட்டுமல்லாது வெற்றி தொலைக்காட்சி வாயிலாகவும் விரைவில் தெரியப்படுத்தவுள்ளோம்.

வெற்றி என்றும் உங்களுடன்...

Thursday, June 17, 2010

வெற்றி பெற்றவர்கள்...

இவ்வாரம் வெற்றியின் வெற்றிபெற்றவர்கள் நிகழ்ச்சியில் தன் ஊடகத்துறை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவிருப்பவர்
சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு.S.நடராஜன்.

நேர்முகவர்ணணை, செய்தி வாசிப்பு, ஊடகத்துறையில் அறியாமல் விடப்படுகின்ற தவறுகள் இவற்றோடு இன்னும் பல்வேறுபட்ட சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்துகொள்ளவுள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு.S நடராஜன் பங்கேற்கும் வெற்றி பெற்றவர்கள் நிகழ்ச்சியை கேட்கத்தவறாதீர்கள்...

Saturday, June 5, 2010

வெற்றி பெற்றவர்கள்

இந்த சனிக்கிழமை வெற்றி வானலை வழியே தன் ஊடகத்துறைப் பயணத்தின் அனுபவங்களையும் கடல் கடந்து ரசிகர்களை தன் குரலால் வசியப்படுத்திய பிரபல ஒலிபரப்பாளர் பற்றியும் இன்றைய வெற்றி பெற்றவர்கள் நிகழ்ச்சி வாயிலாக பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்
சிரேஷ்ட அறிவிப்பாளர் திரு.A.சந்ரமோகன்.

யார் அந்த வசியக்குரலோன்?

இன்றிரவு வெற்றியின் செய்தியறிக்கையைத் தொடர்ந்து உங்களோடு சிரேஷ்ட அறிவிப்பாளர் திரு.A.சந்ரமோகன்....



Friday, May 14, 2010

வெற்றி பெற்றவர்கள்…


ஒரு சிறிய இடைவேளையைத் தொடர்ந்து மீண்டும் உங்கள் வெற்றியில் பிரதி சனிக்கிழமை தோறும் வெற்றி பெற்றவர்கள்…

இந்த சனிக்கிழமை வெற்றி வானலை வழியே தன் ஊடகத்துறைப் பயணத்தின் சுவடுகளை எம்மோடு பகிர்ந்துகொள்ளவிருப்பவர் பிரபல ஒலிபரப்பாளரும் எழுத்தாளரும் மற்றும் திறனாய்வாளருமான திரு. K.S சிவகுமாரன்.

தன் அனுபவங்களை வெற்றியின் இரவு நேர செய்தியறிக்கையைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் நிகழ்ச்சி வாயிலாக பகிர்ந்துகொள்கிறார்...

Sunday, May 9, 2010

வெற்றியோடு அன்னையர் தினம்...


பத்துத்திங்கள் தன்னில் தாங்கி
பத்திரமாய் தரணியில் கால் பதிக்க வைத்தவள்…
தன் உதிரத்தை உணவாக்கி
புது உறவுகள் பல தந்தவள்…
பார் போற்ற எம்மை பாராட்டி சீராட்டி வளர்த்தவளை
இனிய நாளில் இனிதாய் வாழ்த்துவோம்…
வெற்றியின் அன்னையர் தினவாழ்த்துக்கள்…

Tuesday, February 23, 2010

கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பாவிற்கு வெற்றியில் அஞ்சலி.



உங்கள் வெற்றி எப்.எம் நம்நாட்டு பன்முகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் மறைவை ஒட்டி வரும் புதன் இரவு ஒன்பது மணி செய்தி அறிக்கையை தொடர்ந்து ஒரு அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இலங்கையின் பிரபல கலைஞர்கள் தங்கள் அஞ்சலியை செலுத்த இருக்கின்றார்கள். ஒப்பற்ற உன்னத கலைஞனுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

Saturday, February 20, 2010

வெற்றியில் வெற்றி பெற்றவர்கள்.

புதிய நிகழ்ச்சிகளை தன் பிறந்த நாளில் அறிமுகப்படுத்துவது வெற்றியின் வழக்கம். கடந்தவருடம் ஆச்சரியமும் அமானுஷ்யமும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றது வெற்றி. அந்தவகையில் இந்த வருடம் என்ன வரப்போகின்றது என்ன ஸ்பெஷல் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நேயர்களுக்கு சஸ்பென்சாக வெற்றியில் அடிக்கடி வெற்றி பெற்றவர்கள் என்ற முன்னோட்டம் ஒலிபரப்பாகி எதிர்பார்ப்பை எகிறவைத்தது.

இப்போது அதற்க்கான நேரமும் நெருங்கிவர இன்றிரவு ஒன்பதுமணி செய்தியை தொடர்ந்து களம் காண்கின்றது அந்த புதிய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி என்ன தரப்போகின்றது என்ன விடயத்தை பேசப்போகின்றது? இலங்கையின் ஊடகவியலாளர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் அவர்களின் அனுபவங்கள் இன்றைய ஊடக மாற்றங்களில் சாதனைகள் வேதனைகளை பகிரும் ஒரு நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி வானொலியில் அறிமுகமாகின்றது. கேளுங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

Sunday, February 14, 2010

வெற்றியில் காதல் சித்தம்.

இரண்டாவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடிக்கொண்டிருக்கும் வெற்றி எப்.எம்மில் இன்று காலை முதல் அடுக்கடுக்காக விசேட நிகழ்ச்சிகள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் இன்றிரவு வெற்றியின் ஒன்பது மணி செய்தி அறிக்கையை தொடர்ந்து காதல் சித்தம் என்னும் நிகழ்ச்சி இடம்பெற இருக்கின்றது.

உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் காதலர் தினம் கொண்டடப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நிலையில் காதலை ஒரு மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை இன்று நீங்கள் கேட்கக்கூடியதாக இருக்கும். சுவாரஸ்யமும், சூடான விடயங்களும் சுதந்திர சொல்லாடலில் வெளிப்பட இருக்கின்றது. வெற்றி அறிவிப்பாளர்களுடன் வெற்றிக்குடும்பத்தில் இல்லாத ஒருவருக்கும் வாய்ப்பளித்து இந்த நிகழ்ச்சி இடம்பெற இருக்கின்றது. இதுவரை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த மாதிரியான பிரமாண்டமான நிகழ்ச்சியை வானொலியில் முதல் முதல் தரும் அற்புதம் அரங்கேறும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. காதலர் தினம் கொண்டாடிய பின் கேளுங்கள். உங்களுக்கு இருக்கு? என்ன மறந்திடமாட்டியலே?

மறந்திட்டன் காதலர்களே இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

பிரதியாக்கம்: சித்தன்.
குரல் கொடுத்தோர்: சித்தன்,லோஷன்,ஹிஷாம்,பிரதீப்.
ஒலிப்பதிவு, தயாரிப்பு நிர்வாகம்: விமல்.
தயாரிப்பு, ஒலிச்சேர்க்கை: பிரதீப்.
தயாரிப்பு மேற்பார்வை: லோஷன்.

இது ஒரு வெற்றியின் தயாரிப்பு.

Monday, February 1, 2010

கிழக்கில் புது சூறாவளி கிளம்பியதே....



.இந்த வருடத்தில் வெற்றியின் உலா யாழ் மண்ணில் ஆரம்பமானது. முதல் படி வெற்றியை கொடுக்க இப்போது காடும் மலையும் கூட எம் காலுக்கு மெத்தை தான் என மீண்டும் இனிய நெஞ்சங்கள் வாழும் கிழக்கில் புது சூறாவளியாய் வருகிறது வெற்றி.

ஏற்கனவே கிழக்கில் விஜயம் செய்த பொது கிழக்கு மக்கள் கொடுத்த அமோக ஆதரவிலும் அன்பிலும் கட்டுட்ட நாம் மீண்டும் உங்களை சந்திக்க வருகின்றோம். வெகு விரைவில் உங்கள் பிரதேசத்தில் வெற்றிக்குழு.

இடமும் காலமும் அறிய காத்திருங்கள்.

Wednesday, December 16, 2009

இன்றிரவு ஆகாயமுகவரியில்.....



வெற்றியின் காற்றின் சிறகுகளில் ஆகாய முகவரி எத்தனையோ கடிதங்களை தாங்கி வந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நடந்த சுகமான சுமையான சம்பவங்கள், அல்லது சொல்லமுடியாமல் சொல்ல நினைக்கும் வார்த்தைகளை உரியவருக்கு அல்லது உரிய பொருளுக்கு அல்லது இடத்துக்கு கடிதம் மூலம் வானொலியில் அஞ்சலிட்டு வந்தோம். வானொலி வரம்புகளை மீறி வரையறைகளை தாண்டி அஞ்சலிடப்படும் கடிதங்களில் இன்று????

வானொலியே ஒரு வானொலிக்கு எழுதும் கடிதம்..... இது நமக்காக நாமே எழுதும் கடிதம்....

எமக்கு வந்த விமர்சனமா?
அல்லது பாராட்டா?
நாங்கள் சந்தித்த சோதனைகள் அல்லது சாதனைகளா?
அல்லது யாருக்காவது ஏதாவது சொல்லப்போகின்றோமா?

இதற்க்கான விடைகளோடு இன்றைய காற்றின் சிறகுகளின் ஆகாயமுகவரி....

Monday, December 7, 2009

காற்றின் சிறகுகளில் புதியவரும் பழையவரும்.

அண்மைக்காலமாக வெற்றியின் காற்றின் சிறகுகள் நிகழ்ச்சியில் விசேட நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது அடுத்தடுத்து இரு பிரபலங்கள் காற்றலை வழியே உங்களை சந்திக்க வருகின்றனர். 

அந்த வகையில் இன்று ரஜீவுடன் இணையும் காற்றின் சிறகுகளில் இனிய குரலால் இதயங்களை வென்று நடிகராக அவதாரம் எடுத்தும் தன் இதமான குரலாலும் அழகிய தோற்றத்தாலும் உங்களை கவர்ந்த பிரபல் இளம் பின்னணி பாடகர் ஒருவர் உங்களை மகிழ்விக்க இருக்கின்றார்.

நாளை??

சதீஷுடன் வரும் காற்றின் சிறகுகளில் ஒரு சகலகலா வல்லவர். திரைத் துறையில் இவர் ஆதிக்கம் செலுத்தும் துறைகள் பல. இன்றும் இவர் இருக்கும் போதே அவரின் வாரிசுகளும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கின்றார்கள். அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கின்றது இவர் குடும்பம்.

இந்த பிரபலங்கள் யார்? என்ன விசேட நிகழ்ச்சி என்பதை அறிய திங்கள் மற்றும் செவ்வாய் காற்றின் சிறகுகளோடு இணைந்திருங்கள். 

Monday, November 30, 2009

Flash News - வடக்கு மற்றும் வடகிழக்கில் வெற்றி......

உங்கள் வெற்றி வானொலியின் இன்னொரு மைல்கல் ..........


சற்று முன்னர் முதல் வடக்கு வடகிழக்கு மாகாணத்தில் உங்கள் வெற்றி 93.9 F.M இல்


வவுனியா,
திருகோணமலை,
மன்னார்,
அனுராதபுரம்,
பொலநறுவை,
குருநாகல்.....................................

எங்கும் பறக்கிறது வெற்றிக்கொடி...

சற்று முன்னர்(30.11.2009) முதல் உங்கள் வெற்றி வானொலி மேற்குறிப்பிட்ட பகுதிகளில் ஒலிபரப்பை ஆரம்பித்துள்ளது...

வடக்கு வட கிழக்கு மாகாணங்களில் இந்த அலைவரிசையில் வெற்றியோடு இணைந்திருக்கும் நேயர்கள் ஒலித்தெளிவு தொடர்பாக உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

E-Mail: vettri@voa.lk
Sms: 0718996996
Fax: 0112304387
T.P:0114560383.

எங்கள் அலைவரிசைகளின் முழுமையான் விபரங்களோடு எமது அடுத்த பதிவை விரைவில் எதிர்பாருங்கள்.

Thursday, July 2, 2009

கடல்கடந்து கடவுளை தொழும் வெற்றி.

வாழ்க்கைக்கு வெற்றிதரும் உங்கள் வெற்றி வானொலி இலங்கையின் பல பாகங்களில் நடைபெறும் பல நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்கி உள்ளது. மக்கள் மனதை அறிந்து அவர்களின் மனதில் வெற்றிச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் வெற்றி வானொலி இன்று இன்னுமொரு படியில் ஏறப்போகின்றது.
இறைவன் ஒருவனே,அவனை தினமும் போற்றுவோம் என்பதற்கமைய இன்று கடல்கடந்து திருச்செந்தூர் முருகன் ஆலய நிகழ்வை(காலை 10.30 முதல்) நேரடியாக அஞ்சல் செய்ய போகின்றோம் என்பதை வெற்றி நேயர்களுக்கும், பக்தர்களுக்கும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Monday, April 20, 2009

வெற்றியின் கிரிக்கெட் திருவிழா

கடந்த சனிக்கிழமை எங்கள் வெற்றி நிறுவனத்துக்கு அருகில் இருந்த விளையாட்டு மைதானத்தில் VOA நிறுவன அனைத்து ஊழியர்களும் ஒன்று சேர்ந்தோம். ஏன் எதற்கு எப்படி என கேட்கிறியளா? எல்லாம் விளையாட்டுக்கு தான்.

நிறுவன ஊழியர்கள் எல்லோரும் ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து கிரிக்கெட் விளையாட தயாரானோம். வெற்றி நிகழ்ச்சிப்பிரிவு மற்றும் செய்திப்பிரிவை சேர்ந்தவர்களும் ஒன்றாக சேர்ந்து ஒரு அணியாக விளையாட களம் புகுந்தோம். அணிக்கு ஆறு overகள் அடங்கிய இந்தப்போட்டியில் அணிக்கு எட்டு பேர் பங்கு பற்றினர்.
முதல் போட்டி எங்கள் சகோதர வானொலியான சியத செய்திப்பிரிவைச் சேர்ந்த அணியினருடன் மோதினோம். நாணய சுழற்ச்சியில் வென்ற எங்கள் தலைவர் லோஷன் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சியத செய்திப்பிரிவை சேர்ந்தவர்கள் 68 ஓட்டங்களை குவித்தனர். பந்து வீச்சில் அருண் 2 விக்கெட்டுக்களையும் லோஷன், விமல், சந்துரு, விஜயகுமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வெற்றி அணியினர் விமல் மற்றும் விஜயகுமார் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் வெற்றி இலக்கை அடைந்தனர். இதில் விமல் ஓட்டங்களையும் விஜயகுமார் ஓட்டங்களையும் பெற்றனர்.
அதன் பின் அரை இறுதியில் நிர்வாகப்பிரிவுடன் மோதிய வெற்றி அணி அந்த அணியை துவைத்தே எடுத்து விட்டது. முதலில் துடுப்பெடுத்து ஆடிய நிர்வாகப்பிரிவு அணி 19 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. விமல், விஜயகுமார், லோஷன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். விமலின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் இந்தப்போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து நின்றது வெற்றி.
இறுதிப்போட்டியில் சகோதர வானொலியான வானொலியின் நிகழ்ச்சி பிரிவு மற்றும் செய்திப்பிரிவினர் ஒன்றாக இணைந்து களம் புகுந்த அணியினரை எதிர்த்து களம் கண்ட வெற்றி அணியினர் ஓட்டங்களை குவிக்க பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வெற்றி அணி ஊடங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
சந்துரு, ரஜீவ், பென்சி,ஹிஷாமின் அபாரமான களத்தடுப்பு என ஒரு சிறந்த அணியாக இந்த போட்டியில் பிரகாசித்த வெற்றி அணியினருக்கு நிறைவில் நடைபெற்ற பரிசளிப்பில் நிறுவன உரிமையாளர், மற்றும் உயர் அதிகாரிகளால் பாராட்டு கிடைத்தது.
மொத்தத்தில் இந்த போட்டி சில சில சுவையான சம்பவங்களுடன் நடந்தேறியது.

Monday, April 6, 2009

வெற்றி புதுவருட பெருவிழா. (2)

உங்கள் வெற்றி வானொலி உங்களோடு கைகோர்க்கிறது. உங்களின் நண்பனாக உலக வலம் வரும் வெற்றி F.M இந்த புதுவருடத்தை உங்களோடு சேர்ந்து கொண்டாட இருக்கிறது. இந்த புது வருடத்தில் வெற்றி உங்களுடன் சேர்ந்து காலடி எடுத்து வைக்க இருக்கும் இடங்கள்:


13.04.2009 Youth Star விளையாட்டு மைதானம் வேவல்தெனிய வரகாபொல

14.04.2009 பலாங்கொட

14.04.2009 Mount Jean தோட்ட கரப்பந்தாட்ட மைதானம் வட்டவள

14.04.2009 ருவன்வெல்ல தோட்ட மைதானம்

14.04.2009 நுவரெலியா West Ward HO தமிழ் வித்தியாலய மைதானம் நுவரெலியா

15.04.2009 திக்றேன விளையாட்டு மைதானம் கல்பாத்தி களுத்துறை

17.04.2009 உடப்புசல்லாவ Hummest Estate பாடசாலை மைதானம் உடப்புசல்லாவ

18.04.2009 கனகரத்தினம் விளையாட்டு மைதானம். காரைதீவு

26.04.2009 புதுபிங்கராவ தமிழ் வித்தியாலய மைதானம் நமுனுகுல

29.04.2009 ஸ்ரீ கணபதி தமிழ் வித்தியாலய பாடசாலை மைதானம் ரென்தப்பொல


உங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
வெற்றி F.M,
வாழ்க்கைக்கு வெற்றி

Saturday, March 14, 2009

ஆச்சரியமும் அமானுஷ்யத்தில் நடந்த ஆச்சரியம்.

வெற்றிகரமாக வெற்றி வானொலியில் ஒலிபரப்பாகி வந்த ஆச்சரியமும் அமானுஷ்யமும் நிகழ்ச்சியில் கடந்த ஆறாம் திகதி ஒலிபரப்பான நிகழ்ச்சி சிலருக்கு கேட்டிருக்கிறது சிலருக்கு கேட்கவில்லை. ஏன் ஒரே வீட்டில் வெவ்வேறு அறைகளில் இருந்து கேட்டவர்களுக்கும் இதே அனுபவம் தான். என்ன நடந்தது யாருக்குமே தெரியவில்லை. நிச்சயமாக இது மனித சக்தியை மீறிய ஒரு செயல் தான்.


இந்த நிகழ்ச்சியே ஒரு திகில் நிறைந்த நிகழ்ச்சியாக தான் வானலை வழியே வருகிறது. நம் வாழ்வில் நடக்கும் சில ஆச்சரியமான எம் சக்தியை மீறிய நிகழ்வுகள் தான் ஒலிபரப்பாகின்றன. அதே போன்ற ஒரு அமானுஷ்ய சக்தி தான் இந்த ஒலி பரப்பிலும் புகுந்து விளையாடி இருக்க வேண்டும். எங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.


அதனை பற்றிய பல விடயங்களோடு நேற்றைய ஆச்சரியமும் அமானுஷ்யமும் நிகழ்ச்சி உங்களை வந்தடைந்தது. அமானுஷ்ய சக்திகளின் ஆச்சரியமான நிகழ்வுகளுக்கு மத்தியிலும் உங்களை வந்தடையக் காத்திருக்கிறது.

Sunday, March 1, 2009

தினக்குரல் பத்திரிகையில் பிரசுரமான விமர்சனம்.


ஆரம்பித்து ஒரு வருட காலத்துக்குள்ளேயே மக்கள் மனதில் ஆழமாக ஊடுருவி இன்று வெற்றிகரமாக வலம் வரும் வெற்றி எப்.எம் தனியார் வானொலிகளில் முன்னணி வானொலியாக விளங்குகிறது.


இசை ராஜாங்கத்துடன் ஆரம்பமாகும் வெற்றியின் நிகழ்ச்சிகள் காற்றின் சிறகுகள் வரை வகை வகையானவை. சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் நிகழ்ச்சிகள் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.


இந்த வரிசையில் இப்போது ஆரம்பித்திருக்கும் திகில் கலந்த பிரமிப்பான நிகழ்ச்சிதான் ஆச்சரியமும் அனுமானுஷ்யமும். உருவங்களால் அன்றி குரல் வளத்தாலும் தயாரிப்புத்திறனாலும் இவ்வாறான நிகழ்ச்சிகளைத் தரமுடியும் என்பதில் வெற்றி, வெற்றிகண்டிருக்கிறது. பலருக்குத் தெரியாத சிலர் சொல்லத்தயங்கும் விடயங்களைக்கூட இதில் சொல்லமுடிகின்றது. இப்படியான நிகச்சிகளை ஆரம்பித்து வைத்த பெருமை வெற்றியையே சாரும்.


மயில் ஆடுவதைப்பார்த்து வான்கோழியும் ஆடமுற்பட்டு தன் பெயரையே கெடுத்துக்கொண்டதைப்போல சில நிகழ்ச்சிகளை நாங்கள் வேறு அலைவரிசைகளிலும் கேட்கக்கூடியதாக இருக்கிறது. அதுவும் பிரமாண்டமாக விளம்பரம் செய்து விட்டு ஒரு சிறு துளியையே கிள்ளித் தெளிக்கின்றனர்.
இந்தியாவின் விஜய் ரி.வியை பார்த்து மற்ற ரி.விக்கள் நிகழ்ச்சியை ஆரம்பித்து மூக்குடைபடும் கதைதான் இதுவும்.


எந்த வானொலியானாலும் தரமான நிகச்சிகளைத் தந்தால் தான் நிலைக்க முடியும். வெற்றி அறிவிப்பாளர்கள் அதை திறம்பட செய்கின்றனர். ஒரு குழுவாக செயற்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதைத்தான் வெற்றி எப்.எம் செய்திருக்கிறது.

Thursday, February 19, 2009

வெற்றியின் ஓராண்டு பூர்த்தி



வெற்றியின் முதலாவது வெற்றிக்கொண்டாட்டங்கள் நேற்று ஆர்ப்பாட்டமில்லாமல் ஆடம்பரமில்லாமல் அமைதியான முறையில் நேயர்களின் வாழ்த்து மழையுடன் வெகு சிறப்பாக நடந்தேறியது.

காலை வேளையில் அதிரடி புதிரடி நிகழ்ச்சியில் நேயர்களின் வாழ்த்துக்களை எஸ்.எம்.எஸ் வாயிலாக மட்டுமன்றி தொலைபேசி நேயர்களையும் நேரடியாக இணைத்துக்கொண்டு ஆரம்பித்து வைத்தார் ஹிஷாம்.
இதில் அறிவிப்புத்துறையில் முன்னோடியான புது தலைமுறையினரை என்றுமே வாழ்த்தும் B.H.அப்துல் ஹமீத் அவர்கள் எங்கள் வெற்றியை வாழ்த்தியது சிறப்பு.
அதனைத்தொடர்ந்து நாங்களும் ஸ்பெஷல் செய்யப்போகிறோம் என்று முன்னோட்டம் வேறு கொடுத்துக்கொண்டு பூஜாவும் வைதேகியும் வந்து அனைத்து அறிவிப்பாளர்களையும் செய்திப்பிரிவு மற்றும் விரிவாக்கர்பிரிவைச் சேர்ந்தவர்களையும் நேயர்களுக்கு வாழ்த்து சொல்ல வைத்து அசத்திட்டாங்க.
இதில் எங்கள் முகாமையாளர் லோஷன் அறிமுகமாகும் போது "தலைபோல வருமா...." பாடலை ஒலிபரப்பி வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.(நீங்கள் தலையாக இருந்தா அந்தக் கூட்டணிக்கு எப்போதும் வெற்றி தான்.)
அதன் பின் உதவி முகாமையாளர் ஹிஷாம் அறிமுகப்பாடலாக அவர் அதிகம் உச்சரிக்கும் பெயர் கொண்ட "மல்லிகா ........" பாடலை ஒலிபரப்பினர்.(ஹிஷாமிடம் கண்டிப்பாக இதைபற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்)
அதன் பின் விமல் தன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் போது "கண்ணில் வந்ததும் நீதான்......." பாடலை ஒலிக்கவிட்டு அறிமுகப்படுத்தினர்.(ஒரு காலத்தில் (!?) விமலுக்கு சோகப்பாட்டுக்கள் என்றால் உயிர்)
அதற்கடுத்து வந்தார் நம் இசைக்கட்டுப்பட்டாளர் பிரதீப் இவரின் அறிமுகப்பாடலோ "விழிமூடி யாசித்தால்....." பாடல் (யூத் என்று சொல்லிக்கொண்டு இந்த பாட்டைக் கேட்பாராம்!......)
அடுத்ததாக வந்தார் நம்ம பில்லா சந்துரு (இவருக்கும் அந்த பில்லாவிற்கும் என்ன சம்பந்தமோ?.........)
அதன் பின் எங்கள் செய்திப் பிரிவைச்சேர்ந்த காளை ஜோ பென்சி வரும்போது "வந்திட்டான்யா வந்திட்டான்யா காளை........." பாடல் ஒலித்தது.(உங்கள் சிகை அலங்காரத்தை எங்கே செய்கிறீர்கள்? அடுத்த சிகை அலங்காரம் என்ன?)
உதவி இசைக்கட்டுப்பாளர், எப்போதும் சந்தேகம் கேட்கும் டிஷோக்குமார் தன் கறுவாத்தோட்டம் பற்றி சொல்லி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
காதல் கொண்டேன் தனுஷ் நாமத்தில் இருந்து இப்போது வெற்றியின் ஜூனியர் என சொல்லும் ஜெய்சனுக்காக "ஜூனியர் .." பாடலை ஒலிக்க விட்டனர்.
அடுத்ததாக சதீஷ் அறிமுகமாகும் போது "ராமா ராமா......." பாடலை ஒலிக்க விட்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.(ஏனுங்கன்னா நீங்க விஜய் போலவோ?)
அதன் பின் "அழகுக் குட்டி....." பாடலுடன் ரஜீவ் அறிமுகமாகி தன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.(அண்ணா அக்கா என எல்லோரையும் பாசமாக அழைக்கும் இவர் எங்கள் எல்லோருக்கும் பெரிய அண்ணா.....)
அடுத்து வந்தவர் "மலையாளக்குருவி......" வனிதா தன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.(மலையாளப் பக்கம் இருந்து எப்ப தமிழ் பக்கம் வரப்போறிங்க?.)
பூஜாவும் வைதேகியும் எங்கள் எல்லாருக்கும் பாட்டும் போட்டிங்க உங்களுக்கு ஏன் குட்டிப்பிசாசே பாடல் போடல? (பரவாயில்லை நீங்களும் நல்லாத்தான் ஸ்பெஷல் செய்கிறீர்கள்..................)
இதில் எங்களிடமிருந்து தன் மாற்று வேலை காரணமாக சற்று தொலைவில் இருக்கும் செந்தூரனும் இணைந்து கொண்டது மகிழ்ச்சியான விடயம்.(தொலை தூரம் போனாலும் வெற்றி மீது நீங்கள் கொண்ட பாசம் மாறாததற்கு நன்றி)
இவர்கள் காதலர் தினத்தையும் விட்டு வைக்கவில்லை. வெடி முத்துவை கூட்டி வந்து காதலர் தின விசேட "பன்ச்" சொல்ல வைத்தனர். அதுமட்டுமன்றி காதலியை சந்திக்க தாமதமாகப் செல்பவர்கள் தப்பிக்க சில வழிமுறைகளையும் வழங்கினர்.

அடுத்து இருபது புது இசை நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக நேயர்களின் வாழ்த்துக்களோடு சந்துருவும் வனிதாவும் அசத்திட்டீங்க.(நேற்று பெரிய அகப்பை வாங்கி வந்ததைப் பார்த்தா கலக்குவீங்க என்று பார்த்தா அசத்திட்டீங்க)

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காதலர்தின சிறப்பு நிகழ்ச்சியாக ஏன்? எதற்கு? எப்படி? என அடிக்கடி கேட்கும் பிரதீப் தந்த நிகழ்ச்சி அருமை. (எப்பதான் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல போறிங்க?)

அதன் பின் லோஷன் மற்றும் விமல் இணைந்து வழங்கிய அவதாரம் வெற்றியின் இரண்டாவது வருடத்தில் எடுத்திருக்கும் புது அவதாரம்.(நீங்க இந்த விளையாட்டு தனத்தை இந்த பிறந்த நாளிலும் விடமாட்டிங்களா? விளையாடுங்க விளையாடுங்க?)

அதற்கு பிறகு தான் காத்திருந்தது கலக்கல் திருவிழா. இரவு செய்தி அறிக்கையைத தொடர்ந்து வழமை போலத்தான் தொடங்கினார் சதீஷ், நானாட நீயாட என்று. விசேட நிகழ்ச்சி வரப்போகிறது என்று கூறிக்கூறியே எங்கள் நாடித்துடிப்பை அதிகரித்தவண்ணம் இருந்தார்.
அதன் பின் 9.30 அந்த கூட்டணி, சந்துருவும் விமலும் தங்கள் நக்கல் நையாண்டிகளுடன் அதிரடியாகத் தொடங்கினர். அதற்கு பின்னர் லோஷன், ஹிஷாம், பிரதீப், ரஜீவ், என எல்லா அறிவிப்பாளர்களும் ஒன்றாக கலையகத்தில் கூட விரிவாக்கல் பிரிவைச் சேர்ந்த ஜேசன், தினேஷும், செய்திப் பிரிவைச் சேர்ந்த ஜோ பென்சியும் ரஞ்சன் அருண் பிரசாத்தும் கலையகத்தில் ஒன்றாகினர்.

அடுத்து வெற்றியின் வெற்றிப்படிகளில் கடந்து வந்த சாதனைகளையும் வேதனைகளையும் எந்த ஒழிவு மறைவும் இன்றி நேயர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
பெண் அறிவிப்பாளர்கள் பூஜா மற்றும் வைதேகியும் தொலைபேசி வாயிலாக இணைந்து தங்கள் கலாட்டாக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
அண்மையில் வெற்றியில் இருந்து விடைபெற்று சென்ற சுபாஷும் தொலைபேசி வாயிலாக இணைந்து தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.(நீங்கள் வெளிநாடு செல்லும் பொது காற்றின் சிறகுகளில் மிதந்தா போகிறீர்கள் அல்லது நானாட நீயாட என ஆடிக்கொண்ட போகிறீர்கள்? அங்கேயும் தாம்தூமாக வாழ வெற்றியின் வாழ்த்துக்கள்.)
இதில் ஒவ்வொருவரும் தங்கள் சகாக்களை கிண்டல்கள் செய்ததுடன் எதையும் மறைக்காமல் உண்மைகளைப் பகிர்ந்து கொண்டனர். நிறைவாக எல்லா கலாட்டங்களும் நள்ளிரவில் களைகட்டி நிறைவு பெற்றது.
காதலர்களையும் மகிழ்விக்க நினைத்த வெற்றி இடையிடையே எங்கள் நேயர்களின் காதல் கதைகளை அவர்கள் குரலிலேயே ஒழிக்க விட்டு மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. நிகழ்ச்சிகளின் இடை இடையே காதலர் தின சிறப்பு பகுதிகளையும் வழங்கி வாழ்த்தியது.

வெற்றிக் குடும்பமும் நேயர்களும் இந்த பிறந்த நாளால் மகிழுந்து நிற்பதோடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டிலும் புதுவிதி செய்து வாழ்க்கைக்கு வெற்றி தருவோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வெற்றி,
வாழ்க்கைக்கு வெற்றி,
இனி ஒரு புது விதி செய்வோம்.

Friday, February 13, 2009

வெற்றிப் பயணத்தில் ஒரு வருடம்.........

கடந்த ஆண்டு February மாதம் 14ம் திகதி பிறந்த உங்கள் வெற்றி FM வானொலி அதன் பின் தவழ்ந்துஎழுந்து நடந்து, வீறு நடையுடன் நாளை முதலாவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் வந்த சில சோதனைகளையும் சாதனைகளாக்கி இன்று இதயம் வென்று வெகு விரைவில் இமயம் வெல்ல வெற்றி நடை போடுகிறது.

A.R.V.லோஷனின் நேர்த்தியான வழிகாட்டலில் வலம்வரும் வெற்றி, நேயர்களின் ரசனைத்தன்மையை நாடிபிடித்தறிந்து அவர்களுக்கு என்ன பிடிக்குமோ,அவற்றை நிகழ்ச்சிகளாகத் தந்துகொண்டிருக்கிறது. வானலைவழியே தேன்மழை பொழிந்து வரும் உங்கள் வெற்றி, தன் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை எந்த நிகழ்ச்சியும் நேயர்களுக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தால் மாற்றவில்லை என்பது பெருமை கொள்ளும் விடயமே.

நாளை அதிகாலை பூபூக்கும் நேரத்தோடு ஆரம்பிக்கும் சிறப்பு நிகச்சிகள் நாள் முழுவதும் தொடர இருக்கிறது. அந்த நிகழ்ச்சிகள் சற்று வித்தியாசமாகவும் உங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தவும் இருக்கிறது. அந்த நிகழ்ச்சிகளை பற்றிய முன்னோட்டங்கள் இப்போது வானலை வழியே ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதன் சுவையையும் சுவாரஸ்யத்தையும் நாளை எங்கள் நேயநெஞ்சங்கள் உணரலாம்.

ஆர்ப்பாட்டமில்லாமல் மிக அமைதியான முறையில் எங்கள் நேயர்களுடன் இந்த நன் நாளில் கால் பதித்து கொண்டாட இருக்கிறோம். வெற்றியின் நேயர்கள் அனைவரும் வெற்றியின் பங்காளர்கள் எனவே அனைவருக்கும் எங்கள் நல்வாழ்த்துக்களுடன் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த ஒரு வருடமும் எங்களோடு இணைந்து வெற்றிக்கொடி கட்டும் நேயர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு கிட்டும் என்ற நம்பிக்கையோடு இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றோம்............................

வெற்றி எப்.எம்

வாழ்க்கைக்கு வெற்றி.

இனி ஒரு புது விதி செய்வோம்.

Tuesday, January 13, 2009

வெற்றியின் 'பொங்கலோ பொங்கல்'


தைத்திருநாளைக் கொண்டாடும் தரணியெங்கும் உள்ள அனைத்து தமிழ் நல் உள்ளங்களுக்கும் வெற்றியின் உளமார்ந்த உழவர் தின வாழ்த்துக்கள்.

வெற்றியின் பயணத்தில் முதலாவது தைத்திருநாளை கொண்டாட இருக்கும் நாம் நம் நேயர்களோடு சேர்ந்து இந்த பொங்கலை கொண்டாடலாம் என எண்ணியபோது தோன்றிய ஒரு வழிதான் பம்பலப்பிட்டி கதிரேசன் கோவிலில் 20 குடும்பத்தினருடன் பொங்கல் பொங்கி அதில் வெற்றிபெறும் முதல் மூன்று குடும்பத்தினருக்கும் பெறுமதியான பணப்பரிசினை வழங்குவது என்பது.

வழமையாகவே பொங்கல் என்றால் எல்லோருமே வீட்டில் பொங்கி அந்த வருடம் முழுவதும் தங்களை வாழவைத்த கதிரவனுக்கு எங்கள் நன்றியை செலுத்துவதுடன் தினமும் உழைத்து எங்களை வாழவைக்கும் உழவர்களை போற்றி நன்றி கூறுவதுடன் சிலர் ஆலயங்களுக்கும் சென்று இறைவழிப்பாட்டை மேற்கொள்வதுண்டு.

புதிதாக எல்லாவற்றையும் செய்யும் வெற்றியின் தைத்திருநாள் இம்முறை காலைவேளையில் ஆலயத்திலேயே ஆராதனைகளுடன் ஆரம்பமாகி பொங்கல் பொங்கி ஆதவனுக்கு படைத்து நேயர்களின் மனங்களையும் மகிழ்ச்சியில் பொங்கவைக்கும் என்பதில் ஐயமில்லை. 

இப்பொங்கல் திருநாளில் பங்குபற்றும் 20 குடும்பங்களிலிருந்து வெற்றியாளர்களை தெரிவுசெய்ய வெற்றியின் நடுவர்குழு காத்திருக்கிறது.  (இவர்களுக்கு நல்லா சாப்பிட தெரியுமே தவிர சமைக்கவே தெரியாது என்பதை நான் சொல்லமாட்டேன்.....) 

இந்நடுவர்குழு தெரிவு செய்யும் அவ்வெற்றியாளர்களுக்கு பணப்பரிசினை வழங்கி சந்தோஷப்படுத்த இருக்கின்றோம்.

வெற்றி ஆரம்பித்து முதன் முதலாக ஒரு பண்டிகை திருநாளன்று எம் நேயர்களோடு நேரடியாக இணைந்து நாங்கள் கொண்டாட இருக்கும் இத்திருநாளில் வெற்றியின் அறிவிப்பாளர்கள் உட்பட வெற்றிக்குடும்பத்தினர் அனைவரும் உங்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து இத்தைத்திருநாளை சிறப்பிக்க இருக்கின்றார்கள்.

பொங்கும் பொங்கல் அனைவர் வாழ்விலும் மங்கலப்பொங்கலாக பொங்க மீண்டும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

வெற்றி எப் எம்
வாழ்க்கைக்கு வெற்றி!