Pages

Showing posts with label நேயர்கள். Show all posts
Showing posts with label நேயர்கள். Show all posts

Tuesday, December 1, 2009

உங்களை நெருங்கிவந்த வெற்றி.



தனியார் வானொலிகளில் வெற்றி எப்.எம் தனக்கென்ற ஒரு தனிப்பாதையில் நடை போட்டுவருகின்றது. கொழும்பில் 99.6 F.Mஇல் ஆரம்பித்த வெற்றிப்பயணம் இன்று இலங்கை முழுவதும் கொடிகட்ட ஆரம்பித்திருக்கின்றது. எத்தனையோ சவால்களை சந்தித்து எங்கேயும் எப்போதும் ரசிகர்களின் நாடித்துடிப்பறிந்து ஜொலித்து காட்டியது வெற்றி. மேல்மாகாணத்தில் ஆரம்பித்த குறுகியநாளில் நேய நெஞ்சங்களை கொள்ளையடித்த உங்கள் வெற்றி அதன் அடுத்த கட்ட விரிவாக்கலில் 101.5F.M இல் கண்டியை அடைந்து இன்னிசை மழை தூவியது.

கண்டி நேயர்களின் அளப்பரிய ஆதரவில் வெற்றியின் வெற்றி இன்னும் அதிகரித்தது. நல்ல நிகழ்ச்சிகளை நயம்படத்தந்த வெற்றி, தொடர்ந்து ஊவா,தென்கிழக்கில் 93.6 F.M இல் தன் அடுத்த பயணத்தை ஆரம்பித்தது. தொட்டதெல்லாம் துலங்க ஊவா தென்கிழக்கு வெற்றிக் கோட்டையாக மாறியது.

அடுத்தது எங்கே? யாருக்கு தெரியும் என அத்தனை நேயர்களும் கேட்டுக்கொண்டிருக்க நாளை எங்கே? என்ற கேள்வியுடன் 106.7 F.M இல் நாடு முழுவதும் என்னும் தொனியுடன் தன் கம்பீர அலையை பரப்பியது உங்கள் வெற்றி வானொலி. அதன் பின் யாழ் மண்ணில் 101.5F.M இல் தமிழ் வானொலி என்ற பெருமையுடன் களம் கண்டு யாழ் மக்களின் அன்பான ஆதரவில் அகம் மகிழ்ந்தது. இப்படி சென்ற இடமெல்லாம் ரசிகர் படை...
நாள்தோறும் அதிகரிக்கும் நேயர்கள்.....
ஆரம்பித்து இரண்டு வருடங்கள் கடக்கும் முன் பல சாதனைகள்.....

வெற்றி இலங்கை மண் முழுவதும் தன் ஒலியை ஒலிக்கவைக்க இன்றுமுதல் 93.9 F.M வாயிலாக வவுனியா,அனுராதபுரம்,திருகோணமலை, மன்னார்,பொலநறுவை,குருநாகல் இன்னும் பல பிரதேசங்களில் உங்கள் வாசல்கள் தோறும் வந்திருக்கின்றது.சிலபிரதேசங்களில் ஒலித்தெளிவின்மை இருப்பின் மிக விரைவில் அந்த தெளிவின்மையை சரிசெய்து உங்களை மகிழ்ச்சிப்படுத்துவோம். அதேநேரம் அலைவரிசையின் தெளிவு நிகழ்ச்சிகள் பற்றிய உங்கள் கருத்துக்கள் போன்றவற்றையும் வரவேற்கின்றோம். இதுவரை நாங்கள் உங்கள் ரசனை அறிந்து நிகழ்ச்சிகளை தந்தோம் இனியும் தருவோம் அதேபோல நீங்களும் எங்களுக்கு இதுவரை வழங்கிய ஆதரவை விட பலமடங்கு ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில்.

உலகளாவிய ரீதியில் நீங்கள் கேட்க :www.vettri.lk

உங்கள் மேலான கருத்துக்களுக்கு
SMS:0718996996
T.P:0114560383
Fax:0112304387

வெற்றி எப்.எம்
வாழ்க்கைக்கு வெற்றி.

Friday, October 9, 2009

யாழ் மண்ணில் வெற்றி


மக்களின் இதய துடிப்பறிந்து தேவையான நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்கி வரும் வெற்றி எப்.எம் இப்போது இன்னுமொரு இலக்காக யாழ்ப்பாணத்திலும் தன் வெற்றிக் கோடியை பறக்கவிட்டுள்ளது. அண்மைக் காலமாக வேகமாக தன் அலைவரிசைகளை அதிகரித்துக்கொண்டு நேயர்களை தன் வசப்படுத்திய வெற்றி இப்பொழுது யாழ் நேயர்களையும் வசீகரிக்க வந்துள்ளது.

101.5 F.M என்னும் அலைவரிசை வாயிலாக ஒலித்துக்கொண்டிருக்கும் வெற்றி எப்.எம் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அத்துடன் இதுவரை நீங்கள் எங்களுக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றிகளை தெரிவிப்பதோடு தொடர்ந்து உங்கள் நண்பர்கள் உறவினர்களையும் வெற்றியோடு இணைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களுடன் கை கோர்க்கின்றோம்.

தொலைபேசி:0114560383

மின் அஞ்சல்:vettri@voa.lk

SMS: 0718996996

Tuesday, January 13, 2009

வெற்றியின் 'பொங்கலோ பொங்கல்'


தைத்திருநாளைக் கொண்டாடும் தரணியெங்கும் உள்ள அனைத்து தமிழ் நல் உள்ளங்களுக்கும் வெற்றியின் உளமார்ந்த உழவர் தின வாழ்த்துக்கள்.

வெற்றியின் பயணத்தில் முதலாவது தைத்திருநாளை கொண்டாட இருக்கும் நாம் நம் நேயர்களோடு சேர்ந்து இந்த பொங்கலை கொண்டாடலாம் என எண்ணியபோது தோன்றிய ஒரு வழிதான் பம்பலப்பிட்டி கதிரேசன் கோவிலில் 20 குடும்பத்தினருடன் பொங்கல் பொங்கி அதில் வெற்றிபெறும் முதல் மூன்று குடும்பத்தினருக்கும் பெறுமதியான பணப்பரிசினை வழங்குவது என்பது.

வழமையாகவே பொங்கல் என்றால் எல்லோருமே வீட்டில் பொங்கி அந்த வருடம் முழுவதும் தங்களை வாழவைத்த கதிரவனுக்கு எங்கள் நன்றியை செலுத்துவதுடன் தினமும் உழைத்து எங்களை வாழவைக்கும் உழவர்களை போற்றி நன்றி கூறுவதுடன் சிலர் ஆலயங்களுக்கும் சென்று இறைவழிப்பாட்டை மேற்கொள்வதுண்டு.

புதிதாக எல்லாவற்றையும் செய்யும் வெற்றியின் தைத்திருநாள் இம்முறை காலைவேளையில் ஆலயத்திலேயே ஆராதனைகளுடன் ஆரம்பமாகி பொங்கல் பொங்கி ஆதவனுக்கு படைத்து நேயர்களின் மனங்களையும் மகிழ்ச்சியில் பொங்கவைக்கும் என்பதில் ஐயமில்லை. 

இப்பொங்கல் திருநாளில் பங்குபற்றும் 20 குடும்பங்களிலிருந்து வெற்றியாளர்களை தெரிவுசெய்ய வெற்றியின் நடுவர்குழு காத்திருக்கிறது.  (இவர்களுக்கு நல்லா சாப்பிட தெரியுமே தவிர சமைக்கவே தெரியாது என்பதை நான் சொல்லமாட்டேன்.....) 

இந்நடுவர்குழு தெரிவு செய்யும் அவ்வெற்றியாளர்களுக்கு பணப்பரிசினை வழங்கி சந்தோஷப்படுத்த இருக்கின்றோம்.

வெற்றி ஆரம்பித்து முதன் முதலாக ஒரு பண்டிகை திருநாளன்று எம் நேயர்களோடு நேரடியாக இணைந்து நாங்கள் கொண்டாட இருக்கும் இத்திருநாளில் வெற்றியின் அறிவிப்பாளர்கள் உட்பட வெற்றிக்குடும்பத்தினர் அனைவரும் உங்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து இத்தைத்திருநாளை சிறப்பிக்க இருக்கின்றார்கள்.

பொங்கும் பொங்கல் அனைவர் வாழ்விலும் மங்கலப்பொங்கலாக பொங்க மீண்டும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

வெற்றி எப் எம்
வாழ்க்கைக்கு வெற்றி!