Pages

Tuesday, February 23, 2010

கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பாவிற்கு வெற்றியில் அஞ்சலி.



உங்கள் வெற்றி எப்.எம் நம்நாட்டு பன்முகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் மறைவை ஒட்டி வரும் புதன் இரவு ஒன்பது மணி செய்தி அறிக்கையை தொடர்ந்து ஒரு அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இலங்கையின் பிரபல கலைஞர்கள் தங்கள் அஞ்சலியை செலுத்த இருக்கின்றார்கள். ஒப்பற்ற உன்னத கலைஞனுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

Saturday, February 20, 2010

வெற்றியில் வெற்றி பெற்றவர்கள்.

புதிய நிகழ்ச்சிகளை தன் பிறந்த நாளில் அறிமுகப்படுத்துவது வெற்றியின் வழக்கம். கடந்தவருடம் ஆச்சரியமும் அமானுஷ்யமும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றது வெற்றி. அந்தவகையில் இந்த வருடம் என்ன வரப்போகின்றது என்ன ஸ்பெஷல் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நேயர்களுக்கு சஸ்பென்சாக வெற்றியில் அடிக்கடி வெற்றி பெற்றவர்கள் என்ற முன்னோட்டம் ஒலிபரப்பாகி எதிர்பார்ப்பை எகிறவைத்தது.

இப்போது அதற்க்கான நேரமும் நெருங்கிவர இன்றிரவு ஒன்பதுமணி செய்தியை தொடர்ந்து களம் காண்கின்றது அந்த புதிய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி என்ன தரப்போகின்றது என்ன விடயத்தை பேசப்போகின்றது? இலங்கையின் ஊடகவியலாளர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் அவர்களின் அனுபவங்கள் இன்றைய ஊடக மாற்றங்களில் சாதனைகள் வேதனைகளை பகிரும் ஒரு நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி வானொலியில் அறிமுகமாகின்றது. கேளுங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

Sunday, February 14, 2010

வெற்றியில் காதல் சித்தம்.

இரண்டாவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடிக்கொண்டிருக்கும் வெற்றி எப்.எம்மில் இன்று காலை முதல் அடுக்கடுக்காக விசேட நிகழ்ச்சிகள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் இன்றிரவு வெற்றியின் ஒன்பது மணி செய்தி அறிக்கையை தொடர்ந்து காதல் சித்தம் என்னும் நிகழ்ச்சி இடம்பெற இருக்கின்றது.

உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் காதலர் தினம் கொண்டடப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நிலையில் காதலை ஒரு மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை இன்று நீங்கள் கேட்கக்கூடியதாக இருக்கும். சுவாரஸ்யமும், சூடான விடயங்களும் சுதந்திர சொல்லாடலில் வெளிப்பட இருக்கின்றது. வெற்றி அறிவிப்பாளர்களுடன் வெற்றிக்குடும்பத்தில் இல்லாத ஒருவருக்கும் வாய்ப்பளித்து இந்த நிகழ்ச்சி இடம்பெற இருக்கின்றது. இதுவரை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த மாதிரியான பிரமாண்டமான நிகழ்ச்சியை வானொலியில் முதல் முதல் தரும் அற்புதம் அரங்கேறும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. காதலர் தினம் கொண்டாடிய பின் கேளுங்கள். உங்களுக்கு இருக்கு? என்ன மறந்திடமாட்டியலே?

மறந்திட்டன் காதலர்களே இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

பிரதியாக்கம்: சித்தன்.
குரல் கொடுத்தோர்: சித்தன்,லோஷன்,ஹிஷாம்,பிரதீப்.
ஒலிப்பதிவு, தயாரிப்பு நிர்வாகம்: விமல்.
தயாரிப்பு, ஒலிச்சேர்க்கை: பிரதீப்.
தயாரிப்பு மேற்பார்வை: லோஷன்.

இது ஒரு வெற்றியின் தயாரிப்பு.

வெற்றியின் 2வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள்.




வாழ்க்கைக்கு வெற்றி தரும் உங்கள் வெற்றி வானொலி இந்த புதிய வருடத்தில் நம்பிக்கை தரும் வெற்றியாக வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கின்றது. இரண்டு வருடங்களில் பல இதயங்களில் சிம்மாசனம் இட்டு இருப்பது வெற்றியின் வெற்றியே. இந்த குறுகிய காலப்பகுதியில் குறைந்த வளங்களுடன் கம்பீரமாக வலம் வருகின்றோம்.

ஏ.ஆர்.வி.லோஷன் அவர்களின் தலைமையில் மக்களின் நாடித்துடிப்பறிந்து உங்கள் நிகழ்ச்சிகள். விடியல்,அவதாரம் என லோஷனின் கலக்கல் நிகழ்ச்சிகள் ஒரு பக்கம், கேள்விகளின் நாயகனான ஹிஷாம் தரும் கற்றது கையளவு, அதிரடி புதிரடி, விமலின் வினோத வியூகம், அவதாரம் இன்னொரு புறம் களைகட்ட, எங்கேயும் எப்போதும் கலக்கும் சந்துருவுடன் வாங்க நீங்க என எல்லோரும் பங்கு பற்ற, வார இறுதி நாட்களில் ஏன், எதற்க்கு எப்படி என்ற கேள்வியை தம்தூமாக பிரதீப் கேட்க வினோத வியூகங்களோடு வேகம் விவேகமாய் உலாவரும் உற்சாகம் வைதேகி பூஜாவுடன் குதூகலகுவியலும் சேர்ந்துவர காற்றின் சிறகுகள்,நானாட நீயாட என சினிமாலையுடன் சதீஷும் இருபது புது இசையுடன் காற்றின் சிறகுகளில் தம் தூமாக ரஜீவும் பூப்பூக்கும் நேரத்தில் உங்களை சந்தித்து இருபது புது இசையுடன் வேகம் விவேகம் தரும் வனிதா என குறைந்தளவு அறிவிப்பாளர்களுடன் முதல் வருடத்தை கடக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே பாபு,பிர்னாஸ்,தினேஷா என மூன்று புதியவர்களின் வருகையும் சேர இப்போது இந்த வெற்றிக்கூட்டணி தொடர்கின்றது.

நாடு முழுவதும் பரந்தளவிலான இடங்களில் வெற்றி இப்போது ஒலித்துக்கொண்டிருக்கின்றது. வடக்கு,கிழக்கு,தெற்கு,மேற்கு என நாலு திசையிலும் வெற்றி கொடி பறக்கின்றது. பலஇடங்களில் இருந்தும் நாளுக்கு நாள் வெற்றி நேயர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றார்கள். காரணம் அவர்களுக்கு எது பிடிக்குமோ அது வெற்றியில் இருக்கின்றது. நிகழ்ச்சிகள், பாடல்கள்,அறிவிப்பாளர்கள் என எல்லாம் நேயருக்கு பிடித்தவை வெற்றியின் சங்கமத்தில். அன்பான அறிவான அறிவிப்பாளர்கள் என்றுமே வெற்றியின் பலம்.

எப்போது எந்த நிகழ்ச்சியை எப்படி தரவேண்டுமோ அப்படி தருவது வெற்றியின் ஸ்டைல். தேர்தல் என்றால் அதில் ஒரு ஸ்டைல் பண்டிகை என்றால் இன்னொரு முகம் என தன ரசிகர்களுக்கு தேவையான முகத்தை காட்டும் கண்ணாடியாக வலம் வருகின்றது. நான்கு நேர நடுநிலையான செய்திகள், இனிமையான பாடல்கள், தமிழை தமிழாக உச்சரிக்கும் அறிவிப்பாளர்கள் அதற்கும் மேல் அன்பான நேயர்களின் பலத்தில் இன்று இரண்டாவது ஆண்டில் கால்பதிக்கின்றோம்.

நாளைய தினம் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளோடு பல பெறுமதியான பரிசில்களும் காத்திருக்கின்றன. கேளுங்கள் வெற்றி, வெல்லுங்கள் பரிசு.

இதுவரை எங்களுக்கு ஆதரவு வழங்கிய நேயர்கள்,கலைஞர்கள், வியாபாரிகள்,விளம்பரதாரர்கள்,அன்பர்கள்,நண்பர்கள் எல்லோருக்கும் வெற்றிக்குடும்பம் சார்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வெற்றி,
வாழ்க்கைக்கு வெற்றி

Thursday, February 4, 2010

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்



இலங்கை வெற்றி நேயர்களுக்கு
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...


Monday, February 1, 2010

கிழக்கில் புது சூறாவளி கிளம்பியதே....



.இந்த வருடத்தில் வெற்றியின் உலா யாழ் மண்ணில் ஆரம்பமானது. முதல் படி வெற்றியை கொடுக்க இப்போது காடும் மலையும் கூட எம் காலுக்கு மெத்தை தான் என மீண்டும் இனிய நெஞ்சங்கள் வாழும் கிழக்கில் புது சூறாவளியாய் வருகிறது வெற்றி.

ஏற்கனவே கிழக்கில் விஜயம் செய்த பொது கிழக்கு மக்கள் கொடுத்த அமோக ஆதரவிலும் அன்பிலும் கட்டுட்ட நாம் மீண்டும் உங்களை சந்திக்க வருகின்றோம். வெகு விரைவில் உங்கள் பிரதேசத்தில் வெற்றிக்குழு.

இடமும் காலமும் அறிய காத்திருங்கள்.