Pages

Tuesday, March 16, 2010

கடவுளை நம்புகிறீர்களா? நாளை விடியலில்..


நாளை 17(புதன் கிழமை) காலை நேர வெற்றி FM நிகழ்ச்சியான விடியலில் சமயங்கள், கடவுள்கள், அண்மைக்காலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கடவுளின் தூதுவர்கள் பற்றி நேயர்களின் கருத்துக்களோடு அலசி ஆராயும் நிகழ்ச்சி.

கடவுளை நம்புகிறீர்களா?கடவுளின் அவதாரங்கள்,கடவுளின் தூதுவர்கள்,கடவுளை அடைய வழி காட்டுகிறோம் என்பவர்களையும் ஏற்றுக் கொள்கிறீர்களா?

எந்தவொரு சமயத்தையும் தனிப்படத் தாக்காமல் உங்கள் சமய நியாயங்களை,நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்..

முற்கூட்டியே உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கலாம்..
vettri@voa.lk

நாளைக் காலை ஏழு மணி முதல் விடியல் கேளுங்கள்..

பல நாட்களாக பல பேரின் வேண்டுகோளின் பேரில் சில பரபரப்புக்கள அடங்கிய பிறகு இந்த நிகழ்ச்சி நாளை விடியலில்

Thursday, March 11, 2010

''தம்பிக்கு இந்த ஊரு'' படம் பார்க்க பத்து டிக்கட்டுகள்


பத்ரியின் இயக்கத்தில் சின்ன தளபதி பரத், சனா கான், மடலசா நடிப்பில் வலம் வருகிறது தம்பிக்கு இந்த ஊரு.

தரனின் இசை படத்துக்கு பலம் சேர்க்கும் அதேநேரம் விவேக்கின் நகைச்சுவை பாத்திரமும் பிரபு மற்றும் ரஞ்சித்தின் கதாபாத்திரங்களும் மனதில் நிறைகின்றன.

இலங்கையில் தம்பிக்கு இந்த ஊரு படத்தின் உத்தியோகபூர்வ வானொலி உங்கள் வெற்றி எப் எம் வாரநாட்களில் மாலை 3மணி முதல் 5 மணி வரை கற்றது கையளவு நிகழ்ச்சியினூடாக டிக்கட்டுகளை வழங்குகிறது.