Pages

Friday, May 22, 2009

வெற்றியில் இருபதுக்கு இருபது உலகக்கிண்ணம்.

நாடி நரம்புகளை முறுக்கேற்றும் கட்டத்தை தென் ஆபிரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகள் எட்டியுள்ளன. அரை இறுதிக்குள் தெரிவாகி உள்ள நான்கு அணிகளும் சமபலத்துடன் எதிரணிகளை அச்சுறுத்தி வருகின்றது. எந்த அணி கிண்ணத்தை கைப்பற்றப் போகின்றது என தெரியவில்லை. ஆனால் வெற்றியில் அத்தனை சூடான காட்சிகளும் வானலை வழியே ஒலிக்க காத்திருகின்றன. ஐ.பி.எல்லின் இறுதிக் கட்டம் வந்துவிட்டது. திருவிழாவின் வெற்றி அணி தெரியப் போகின்றது.

அதன் பின்...........?

இருபதுக்கு இருபது உலகக்கிண்ண போட்டி இங்கிலாந்தில் நடைபெறப்போகின்றது. கடந்த முறை சாம்பியன் ஆன இந்திய அணியுடன் மற்ற அணிகளும் இம்முறை மல்லுக்கட்ட நிற்கின்றன. முதல் போட்டியில் இருந்து பந்துக்கு பந்து சுவையான அம்சங்கள் வெற்றியில் ஒலிக்க காத்திருக்கின்றது. மீண்டும் ஒரு தடவை கிரிக்கெட் ரசிகர்களின் நாடித்துடிப்பு இனி வெற்றியில். எனவே கிரிக்கெட் விபரங்களோடு உங்கள் அபிமான நிகழ்ச்சிகளையும் எதிர்பாத்திருங்கள்.

வெற்றி எப்.எம்,

வாழ்க்கைக்கு வெற்றி.


Sunday, May 10, 2009

வணங்குகின்றோம் அன்னையர்களை.


கருவில் சுமந்து கண்ணாக பேணி இந்த உலகத்தில் ஒரு சிறந்த உயிராக எம்மை உருவாக்கும் அன்னையர்களை போற்றி கௌரவிக்கும் நன்னாள் இன்று கொண்டாடப்படுகின்றது.


எங்களின் முதுகெலும்பாக இருந்து வளப்படுத்தும் சக்தியான அம்மா என்ற தெய்வத்துக்கு விழா எடுக்கும் நாள் இது. இருந்தும் இந்த நாள் ஒரு சிறப்பு நாளே தவிர அன்னையர் என்றென்றும் போற்றப்பட வேண்டியவர்கள்.


அன்னையை வணங்கி ஆரம்பிக்கும் அத்தனை நிகழ்வும் என்றும் வெற்றியே. வெற்றியும் தங்கள் அன்பான அன்னை உள்ளங்களுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. அஹ்த்துடன் இன்று முழுவதும் வெற்றியில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் உங்களுக்காக ஒலிக்க இருக்கின்றன.


வெற்றி எப்.எம்,

வாழ்க்கைக்கு வெற்றி.

Monday, May 4, 2009

ஒரு விமர்சனம் இது.

எங்களைப் பற்றி வரும் விமர்சனங்களை நாங்கள் வரவேற்கின்றோம். அத்துடன், உங்கள் விமர்சனங்கள் தான் எங்களை வளப்படுத்துகின்றன.எங்கள் நிறைகளை கூறி பாராட்டும்போது அவை எங்களுக்கு உரமாக அமைவதோடு நாங்கள் செய்யும் பிழைகளை சுட்டிக்காட்டும் போது அவற்றை உடனடியாக திருத்திக்கொள்வதோடு தொடர்ந்தும் அவ்வாறான பிழைகளை தவிர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும்.


ஆனால் ஒரு விமர்சனத்தை செய்யும்போது முழுமையாக அந்த நிகழ்ச்சி பற்றி அறிந்து கொண்டு செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். அண்மையில் வெளிவந்த ஒரு பத்திரிகையில் வெளிவந்த விமர்சனத்தில் நிகழ்ச்சி பற்றி தெளிந்த அறிவில்லாமல் மனநல நிபுணர் ஒருவர் அமானுஷ்ய சக்திகளை பற்றி கூறியதை அறிவிப்பாளினி என தவறாக எண்ணி விமர்சனம் செய்திருக்கின்றார்கள் எனவே உங்கள் விமர்சனங்களை செய்யும்போது முதலில் ஒரு நிகழ்ச்சியை சரியாக கேளுங்கள் அதன்பின் அதன் குறை நிறைகளை எழுதினால் அவற்றை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம்.


அந்த விமர்சனத்தை இங்கே உங்களுக்காக தருகின்றோம். சொடுக்கி பெரிதாக்கி இதை வாசிக்கலாம். வாசித்த பின் உங்கள் கருத்துக்களை இங்கே பதித்து செல்லுங்கள்.

நன்றி தினக்குரல்.