Wednesday, December 31, 2008
புதிய வருடத்தில் புதிய வெற்றி..
Monday, December 29, 2008
ஜெய்சன் வீட்டில் - அன்னதானம்!!!
Friday, December 26, 2008
காற்றின் சிறகுகள் வழியே ஆகாய முகவரிக்கு காற்றோடு கலந்த கடிதம்.
சந்தோஷமாய் குதூகலமாய் கொண்டாடிய நத்தார் பண்டிகை, உண்ட உணவு செறிமானம் ஆகும் முன்னம் டிசம்பர் 26ம் திகதி எம்மனைவரையும் கலங்கடிக்க வைத்தாள் கடல் தாய். உறங்க மடி தந்தவளே உறக்கத்தை பலருக்கு நீண்டதாயும் தந்தாள். இன்னும் பலரின் உறக்கத்தையும் பறித்துவிட்டாள். பெயர் தெரியாத ஒருத்தியாய் உருவெடுத்து இன்று சுனாமி என அழைக்கப்படுகிறாள்.
ஒரு பொருளை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதை இல்லாதொழிப்பது அவ்வளவு கடினமல்ல என்பதை உன்னைக்கண்ட பின் எல்லோரும் உணர்ந்திருப்பார்கள்.
டிசம்பர் மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது தேவபாலன் பிறப்பே. இந்நிலை நான்கு வருடங்களுக்கு முன் இருந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் டிசம்பர் என்றாலே உடனே நினைவுக்கு வருவது சுனாமி. அந்தளவிற்கு கடல் அன்னையின் மறு உருவம் எம்மனைவர் மனதிலும் பதிந்துவிட்டது.
இவ் நான்கு வருடத்தில் எத்தனையோ மாற்றங்கள் நடந்தேறிவிட்டன. அதில் ஒன்றாக, உங்களோடு இணைந்தது தான் வெற்றி FM
உங்களில் ஒருவன் வெற்றி FM என்பதால் ஆழிப்பேரலையில் உயிரிழந்தோரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும் அதேவேளை, எம்மைவிட்டு பிரிந்தவர்களுக்கான கடிதங்களையும் பகிர்ந்துகொள்ளப்போகிறான் வெற்றியின் காற்றின் சிறகுகள் வாயிலாக.
இணைந்திடுங்கள் நீங்களும் இன்றிரவு 9 மணி செய்தியறிக்கையின் பின் சுனாமி நினைவாக ஒலிபரப்பப்படவிருக்கும் காற்றின் சிறகுகள் நிகழ்ச்சியில் ஆகாய முகவரியோடு.
Wednesday, December 24, 2008
சோகங்களை சுகமாக்கிட வந்த சொந்தம் வெற்றி FM !
உங்களோடு என்றென்றுமே தோளோடு தோள் நிற்கப் போகும் தோழன் இன்று, வானலையில் 10 மாத குழந்தையாக தவழும் வெற்றி FM . தனது முதலாவது கிறிஸ்மஸ் பண்டிகையினையும் ஆர்ப்பாட்டமில்லாத, அழகான, அமைதியான நத்தார் பண்டிகையாக உத்தியோகபூர்வமாக உலகளாவிய ரீதியில் நேயர்களோடு கொண்டாவிருக்கின்றது.
அவ்வகையிலேயே இம்மாதம் 15ஆம் திகதி முதல் நத்தார் கொண்டாட்டங்களை ஆர்ப்பாட்டமில்லாது ஆரம்பித்தது. தேவபாலனை வாழ்த்தும் பாடல்களையும், தனிமனித வாழ்வை மேம்படுத்தும் நத்தார் சிந்தனைகளையும் இன்றுவரை செவ்வனவே வழங்கி வருகின்றது. இதேபோல் மற்றுமொரு சிறப்பம்சமாக அமையப்போவது தேவபாலன் பிறக்கும் நள்ளிரவு, கொழும்பு 13 புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து எமது அறிவிப்பாளர்கள் வழங்கவிருக்கும் நேரடி ஒலிபரப்பு. அதுமட்டுமல்லாது நத்தார் தினத்தன்று வெற்றியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பல்வேறுபட்ட வித்தியாசமான மாறுபட்ட அம்சங்களும் இடம்பெறவிருக்கின்றன.
சிசுபாலனை சிரம் தாழ்த்தி பூ பூக்கும் நேரத்தில் வரவேற்று விடியல் நிகழ்ச்சியிலே அவர் கருத்துக்களை அனைவரோடும் பகிரச் செய்து அவருடைய வினோதங்களை இவ்வியூகத்திற்கு வினோத வியூகம் வாயிலாக விளக்கி பஹல் பந்தியில் தேவபாலனை பசியாறச் செய்து அவரிடம் நாம் கற்றதை உலகறியச் செய்து எங்கேயும் எப்போதும் உலகமக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களாய் ஒற்றுமையாய், இன, மத, வேறுபாடின்றி சாந்தியும் சமாதானமாய் வாழ நல்வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து காற்றின் சிறகுகள் மூலம் மண்ணுலகத்திற்கு மீண்டும் வரச்சொல்லி விண்ணுலகம் அனுப்பி வைப்போம் அதிரூபனை.
சிசுபாலனின் கொண்டாட்டத்தோடு எம்மோடு இணையவிருக்கும் மற்றுமொரு நபர் குடு குடு ஆனாலும் துடிப்பான இளைஞனாக நம் வெள்ளை தாத்தா SANTA. வெற்றியோடு நத்தாரை கொண்டாடும் நேயர்களுக்கு வானலைப் பரிசுகளை வழங்கி சிசுபாலனின் தோற்றம் கொண்ட குழந்தைகளோடும் தம் பொழுதை கழிக்கவுள்ளார்.
இதெல்லாம் எவ்வாறு எப்படி என்று யோசிப்பவர்களும் அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் நத்தாரை கொண்டாட விரும்புவர்களும் இணைந்திருங்கள் வெற்றியோடு என்றென்றும்.
வெற்றி FM கிறிஸ்மஸ் FM
வெற்றி FM - "வாழ்க்கைக்கு வெற்றி"
Tuesday, December 23, 2008
McDonalds கற்றது கையளவு.
உலக நிகழ்வுகள், பொருளாதார நெருக்கடி, சினிமா என பல துறைகளையும் அலசும் இரண்டு மணி நேர நிகழ்ச்சியை வாரநாட்களில் கேட்கத்தவறாதீர்கள்.
இந்த பண்டிகை காலத்தில் வெற்றி FM இல் மாலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை கற்றது கையளவு நிகழ்ச்சியை கேட்கும் நண்பர்களுக்கு McDonalds வழங்கும் வவுச்சர்கள் காத்திருக்கின்றன.
அம்பாளின் அருளை வேண்டி வெற்றியுடன் இணைந்து நின்ற பெனிகல தோட்டம்
குளுகுளுப்பான இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் பெனிகெல தோட்டத்தில் கால்பதித்த வெற்றிக் குழுவினர் தங்களுடைய இசைநிகழ்வை ஆலயமுன்றலில் ஆரம்பித்தனர். அவ்வூர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பக்திபாடல்களை ஒலிபரப்பி மகிழ்வித்தனர்.
மதியவேளையில் மீண்டும் பூஜைகள் ஆரம்பமாகி அம்பாள் ஆலயத்தை சுற்றி வலம் வந்தபின் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதேவேளை வெற்றியின் இசைமழையை ஆரம்பித்த வெற்றிக்குழுவினர் நேயர்களின் பெயர்களையும் வாழ்த்துகளையும் இணைத்ததோடு போட்டிகளையும் நடாத்தி வெற்றியின் நினைவுப் பரிசில்களையும் வழங்கி சிறப்பித்தனர்.
இதேநேரம் வெற்றி குழுவினருடன் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அனைத்து நேயர்களும் மிக்க மகிழ்ச்சியுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.
இதில் முதலில் தெளிவற்று இருந்த வெற்றி அலைவரிசையினை தாம் அன்டானாவை பூட்டி ஏன் எத்தனையோ தடவை தம் கைகளால் பிடித்தவண்ணம் வெற்றியை கேட்டதாகவும் வெற்றியின் பேப்பர் தம்பி விடியல் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளும் தங்களை கவர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர். அத்துடன் எங்களுடன் பேசிய 'சரோஜா' குழுவினர் தாங்கள் எத்தனையோ தடவை call எடுத்தும நாம் அதை answer பண்ணவில்லை என உரிமையுடன் குறைபட்டக்கொண்டனர்.
அத்துடன் வெற்றி குழுவினரை தங்கள் வீட்டுக்கு வந்து செல்லுமாறு எத்தனையோ நேயர்கள் அன்பாக அழைத்தும் பல நேயர்களின் வீடுகளுக்கு செல்லமுடியாமைக்கு வருந்துகின்றோம். அத்துடன் அன்பாக அனுசரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.
மாலை 3.30 மணியளவில் மீண்டும் பூஜைகள் நடைபெற்று மேளகச்சேரியுடன் வாத்தியக் குழுவினரும் தொடரிசை வழங்க வீதி உலா ஆரம்பமானது. பெனிகெல தோட்டத்திலுள்ள ஒவ்வொரு வீடு வீடாக சென்ற அம்பாள் அதன்பின் ஆலயத்திலிருந்து ஏறத்தாள 3 1/2 கிலோமீற்றர் துரத்திலுள்ள கண்டிவீதிவரை உலாவாக வந்து அருள் பாலித்தார். தமிழ் சிங்கள சகோதரர்கள் பேதங்களை மறந்து அம்பாளின் அருளை வேண்டி இணைந்து நின்றது கண் கொள்ளாக்காட்சியாகும்.
இவ்வீதி உலாவில் கலந்து கொண்டு வந்த வெற்றிகுழுவினர் அடையே ஆலய பரிபாலசபையினரும் இந்நிகழ்வுக்கு ஊடக அனுசரணை வழங்க உதவி புரிந்த வரகாபொல அட்டகாச புயல் அமுதனுக்கு வெற்றியின் நினைவுப்பரிசினை
வழங்கினர்
நள்ளிரவை தொடும் வேளையில் வீதி உலா நிறைவுக்கு வந்தது. வெற்றி குழுவினர் இங்கிருந்து விடைபெறும் போது பெனிஹெல தோட்டமக்கள் ஒன்று திரண்டு கரகோஷமெழுப்பி நன்றி தெரிவித்தனர்.
உண்மையிலேயே மிகச் சிறப்பாக நடைபெற்ற இவ்வீதி உலாவுக்கு வெற்றி குடும்பமும் பங்களிப்பு செய்வதையிட்டு மகிழ்கின்றோம்.
இதேநேரம் வீதி உலா நிறைவுற்ற பின்னர் ஆலயத்துக்கண்மையில் இசை நிகழ்வை வழங்கிடுவோம் என தெரிவித்த எம்மால் வீதி உலா நிறைவு நள்ளிரவை தொட்டதால் அவ் இசைநிகழ்ச்சியை வழங்க முடியாமல் போனமைக்கு வருந்துகின்றோம்.
Monday, September 22, 2008
சக்கரக்கட்டியும் வெற்றி எப்.எம்.மும்!
Sunday, September 7, 2008
வெற்றி எப்.எம். இன் உத்தியோகபூர்வ இணையத்தளம்!
வெற்றி எப்.எம். ஒலிபரப்பை இப்பொழுது நேயர்கள் இணையத்தினூடாகவும் கேட்டுமகிழ முடியும். வெற்றி எப்.எம்.இன் உத்தியோகபூர்வ இணைய ஒலிபரப்பு இணைப்பு முகவரி : www.vettri.lk
------------------------------------------------------------------------------------------------
Wednesday, June 11, 2008
வெற்றி எப்.எம். ஐ தொடர்புகொள்ள -
வெற்றி எப்.எம்.இன் எஸ்.எம்.எஸ். இலக்கம் : 0094 718996996
மின்னஞ்சல்: vettri@voa.lk
அஞ்சல் முகவரி: Vettri FM,P.O.Box No. 1011,Colombo,Sri Lanka.
Friday, May 16, 2008
வெற்றி எப்.எம் இன் முழுமையான நிகழ்ச்சிகள் செய்திகள்
http://nilavufm.com/live.html
--------------------------------
Wednesday, May 7, 2008
செய்திகள் விரைவில்???
நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டு ஒருவாரம்கூட கடக்காத நிலையில் நேயர்களின் பாராட்டுக்களாலும் வாழ்த்துக்களாலும் வெற்றி எப்.எம்.மைச் சேர்ந்தவர்கள் உற்சாகமடைந்திருப்பதாக அவர்களை மேற்கோள்காட்டி நண்பர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.
Tuesday, April 29, 2008
வெற்றி எப்.எம். நேயர்களின் நன்றிகள்
வெற்றி எப்.எம். இன் வளர்ச்சியில் அக்கறையோடு உறுதுணையாக இருக்கும் இந்தத் தளத்தின் பராமரிப்புக் குழுவினருக்கு வெற்றி எப்.எம். நேயர்களின் சார்பில் நன்றிகள்.
நட்புத் தளத்தின் இணைப்புச் சுட்டி:
http://www.vettri.8m.com/index.html
Monday, April 28, 2008
தரவுகளை மீள் பிரசுரிக்கும் தளங்கள்!
அவ்வாறு செய்வது உகந்ததல்ல என்று கருதும் தளப் பராமரிப்பாளர்கள் இங்குள்ள தகவல் திரட்டுக்களை உபயோகிக்காதுவிடல் நேர்த்தியான செயலாக அமையும் என்பது எமது எண்ணம்!
வெற்றி எப்.எம் - சந்தோஷ அதிர்ச்சி என்ன???
உழைப்பாளர்கள் தினமாகிய மே முதலாம் திகதியில் வெற்றி எப்.எம், நேயர்களுக்குத் தரப்போகும் சந்தோஷ அதிர்ச்சி என்ன???
Saturday, April 26, 2008
தசாவதாரம் பாடல்கள் வெற்றி எப்.எம். இல்
நடிகர் கமல்ஹாசனின் கதை,திரைக்கதை, வசனத்தில் கே.எஸ்.ரவிக்குமாரிக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தசாவதாரம் திரைப்படப் பாடல்களை முந்திக்கொண்டு நேயர்களுக்கு வழங்கியிருக்கிறது வெற்றி எப்.எம். ஹிமேஷ் ரேஷ்மயாவின் இசையில் பாடல்கள் அருமை. வெற்றி எப்.எம் 99.6 அலைவரிகையில் நீங்கள் தசாவதாரம் பாடல்களைக் கேட்டு மகிழலாம்.
Monday, April 21, 2008
IPL கிரிக்கெட் போட்டிகள்!
20- 20 கிரிக்கெட் போட்டிகள் பரபரப்புக்குப் பெயர்பெற்றவை. IPL போட்டிகளில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நட்சத்திர வீரர்கள் விளையாடுவதால் பரபரப்புக்குப் பஞ்சமே இல்லை. எனவே இந்தப் போட்டிகளின் ஸ்கோர் விபரங்களை தொடர்ச்சியாக வழங்கிவரும் வெற்றி எப்.எம் நேயர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றுவருகிறது.
வெறுமனே ஸ்கோர் விபரங்களை மாத்திரம் வழங்காது போட்டிகள் பற்றிய முழுவிபரங்கள், எதிர்வுகூறல்கள் என்று வெற்றி எப்.எம் வழங்கிவரும் தகவல்களும் நேயர்களிடத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
Monday, April 14, 2008
வெற்றி எப்.எம். ஐ தொடர்புகொள்ள -
மின்னஞ்சல்: vettri@voa.lk
அஞ்சல் முகவரி:
Vettri FM,
P.O.Box No. 1011,
Colombo,
Sri Lanka.
வெற்றியின் விளையாட்டுத்திடல்!!!
14ஆம் திகதி திங்கட்கிழமை முதல் விளையாட்டுத் தகவல்களைத் தொகுத்துத் தரும் வெற்றியின் விளையாட்டுத் திடல் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.
தினமும் இரவு 8.00 மணிக்கு வெற்றியின் விளையாட்டுத்திடலை நேயர்கள் கேட்டு மகிழலாம் என்ற தகவல் எமக்குக் கிடைத்திருக்கிறது.
Saturday, April 12, 2008
பேப்பர் தம்பி!!!
செய்திகளை வாசித்துவிட்டு பேப்பர் தம்பி அடிக்கும் கொமென்ட்டுகள் கலகல!!!
சிங்கப்பூருக்கு பறக்கும் வாய்ப்பு!
வெற்றியில் தினமும் கேட்கப்படும் 3 கேள்விகளுக்கு குறுஞ்செய்திமூலம் பதிலளிக்கும் நேயர்களில் தினமும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு விமானப் பயணச்சீட்டு பரிசாக வழங்கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது. இந்த அறிவிப்பானது நேயர்கள் மத்தியில் பரபரப்பை உண்டுபண்ணியிருப்பதாக அறியமுடிகிறது.
Tuesday, March 25, 2008
முழுமையான நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கவிருக்கிறது
Thursday, March 6, 2008
இலங்கை தமிழ் வானொலி வரலாற்றில் புதிய உதயம்.
Wednesday, February 20, 2008
காதோரம் வலைப்பூவில் வெற்றி எப் எம்
99.6 இல் பரீட்சார்த்த ஒலிபரப்பை கொழும்பில் ஆரம்பித்திருக்கும் புதிய தமிழ் வானொலியான வெற்றி எப் எம் நல்ல பாடல்களை தொடர்ச்சியாக ஒலிபரப்பி வருகிறது. ஆயினும் அவர்களது அலைவரிசை பலவீனமாக இருப்பதால் கொழும்பு பெரும்பாக பகுதிகளில் கூட வெற்றி எப் எம் வானொலியை தெளிவாகக் கேட்பது சிரமமாக உள்ளது. குறிப்பாக பகல் நேரங்களில் 99.6 அலைவரிசையில் வேறு வானொலிகளின் அலைவரிசைகளின் இடையூறுகள் மிக அதிகம்.
இத்தகைய இடையூறுகளை களைந்து வெற்றி எப் எம் வெற்றி பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Saturday, February 16, 2008
இணையதளத்தில் ஓரங்கட்டப்படும் ஹிந்தி
தற்போது உலகில் பேசப்படும் 6,000 மொழிகளில் 12 மட்டுமே இணையதளங்களில் ஏறக்குறைய முழு அளவிற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதில் ஆங்கிலம் முதலிடத்தில் இருப்பதாகவும், இன்டெர்நெட் வேர்ட் ஸ்டேட்ஸ்.காம் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள பிராந்திய மொழிகளில் இணையதள பயன்பாட்டு வளர்ச்சி, வரையறுக்கப்பட்ட விகிதத்திலேயே உள்ளன. இந்திய இணையதள பயன்பாட்டாளர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலத்தை பெரிதும் பயன்படுத்துகின்றனர்.
உலகின் முதல் 5 இடங்களில் ஒன்றாகத் திகழும் ஹிந்தி மொழி, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களிலும் பேசப்படுகிறது. எனினும் இணையதள பயன்பாட்டில் சிறப்பான இடத்தை இது பெறவில்லை என்று ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தவம் - வடிவேல் நகைச்சுவை
ரெடி, ஸ்டார்ட், கேமரா, ஆக்சன்: 'ரோபோ' துவங்கியது!
`சிவாஜி'யை அடுத்து, `குசேலன்' மற்றும் 'ரோபோ' ஆகிய படங்களில் ரஜினி நடிக்கிறார். 'குசேலனை' பி.வாசுவும், `ரோபோ'வை ஷங்கரும் இயக்குகின்றனர்.
125 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக தயாராகிவரும் 'ரோபோ'வில் ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் தொடங்கியது.
ரஜினி நடித்த சில காட்சிகளை இயக்குனர் ஷங்கர் படமாக்கினார். இதனால் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதியதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாவலர்கள் திணறியதாகவும் ரசிகர்கள் சிலர் தெரிவித்தனர்.
பொழுதுபோக்கின் வெற்றிக்கு வெற்றி எப் எம்
வெகுவிரைவில் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆரம்பிக்கவுள்ள வெற்றி எப் எம் உலகெங்கும் உள்ள தமிழ் நேயர்களை தன் வசம் ஈர்க்கும் என்று எதிர்பார்கலாம்
Friday, February 15, 2008
Arai En 305il Kadavul - Simbudeven’s laugh riot yet again!
பேர்த் மைதானத்திற்கு விடை கொடுத்தார் கில்கிரிஸ்ட்
பெர்த் நகரில் வெள்ளிக்கிழமை நடந்த இத்தொடரின் 6வது போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. இதன்படி அந்த அணி 49.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தனது சொந்த மண்ணில் கடைசி போட்டியில் பங்கேற்ற துவக்க வீரர் கில்கிரிஸ்ட், ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். ஆட்டத்தின் 38வது ஓவரில், தனது 16வது சதத்தை கில்கிறிஸ்ட் பூர்த்தி செய்து, 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஹைடன் 4 ரன், கேப்டன் பாண்டிங் 25 ரன், கிளார்க் 43 ரன், சைமண்ட்ச் 4 ரன், ஹசே 25 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். பின் வரிசையில் வந்த ஹோப்ஸ் (2), ஹாக் (5), பிரட் லீ (2), ஜான்சன் (0) ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
இதன் பின் 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்ந்த இலங்கை, 45.3 ஓவர்களில் 173 ரன்களுக்கு சுருண்டது. சிறப்பாக விளையாடி 80 ரன்கள் குவித்த சங்ககராவைத் தவிர மற்றவர்கள் சோபிக்கத் தவறினர்.
ஆஸ்திரேலிய தரப்பில் பிராக்கென், ஜான்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாக் 2 விக்கெட்டுகளையும், பிரட் லீ, ஹோப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
சொந்த மண்ணில் சாதனை சதம் அடித்த கில்கிறிஸ்ட், ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இவ்வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2ம் இடத்திலும் (8 புள்ளிகள்) , இலங்கை (6) 3ம் இடத்திலும் உள்ளன.
இத்தொடரின் அடுத்த போட்டி, இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே வரும் 17ம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது.
வெற்றி எப்.எம். ஒலிபரப்பு ஆரம்பம்
நேயர்கள் தற்போது கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் 99.6 எப்.எம். அலைவரிசையில் வெற்றி எப்.எம். ஒலிபரப்பை கேட்டு மகிழலாம். முற்றிலும் வித்தியாசமான நிகழ்ச்சிகளையும் புத்தம்புதிய பாடல்களையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.
இலங்கையில் முதன்முறையாக புதிய தொழில்நுட்பத்துடன் வெற்றி எப்.எம். இது உங்கள் வெற்றி பொழுதுபோக்கின் வெற்றி.....