இலங்கையில் அதிகம் பேர் விரும்பும், தமிழ் மக்கள் விரும்பி ரசிக்கும் கால்பந்து விளையாட்டின் புதிய பரிமாண வளர்ச்சியில் பிறந்த Futsal கால்பந்தாட்ட கிண்ண தொடர் ஒன்றை வெற்றி எப்.எம் இப்போது ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை மண்ணில் முதன் முறையாக பிரமாண்டமாக இந்த தொடரை வெற்றி ஆரம்பித்து வைக்கின்றது.
பலர் கால்பந்தாட்ட விளையாட்டுக்கு அனுசரணை வழங்க பின் நிற்கும் இந்த நிலையில் வெற்றி கால்பந்தாட்டத்தின் போட்டிகளை பிரபல்யப்படுத்தும் நோக்கிலும், பல புதிய வீரர்களையும் இனங்காணவும் உதவும் வகையில் இந்த போட்டிகள் ஆரம்பமாகப்போகின்றன. பிரபல பாடசாலைகள், விளையாட்டு கழகங்கள், இவர்களோடு நாற்பது வயதை தாண்டிய விளையாட துடிக்கும் வீரர்களையும் ஊக்குவிக்கும் வண்ணம் இந்த போட்டிகள் நடைபெறப்போகின்றன.
இந்த போட்டிகளில் இனம்,மதம்,மொழி களைந்து சகோதரமொழியை சேர்ந்த பல வீரர்களும் விளையாட உள்ளமை குறிப்பிடத்த்தக்கது. அணிக்கு ஐவர் கொண்ட முப்பத்தியிரண்டு பாடசாலை அணிகள், நாற்பத்தியிரண்டு கழகங்கள், இவற்றோடு பதினாறு நாற்பது வயதைக் கடந்தோரைக் கொண்ட அணிகள் களமிறங்கி வெற்றிக்காக போராடப்போகின்றன. வெற்றி எப்.எம் மிகுந்த பொருட்செலவில் பதக்கங்கள், பணப்பரிசுகள், வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வீரர்களை மகிழ்விக்கப்போகின்றது.
தொடர்ந்து இருபத்தைந்து வருடங்களுக்கு வெற்றி வழங்கும் இந்த தொடர் உங்களை நாடி வரப்போகின்றது. இந்த நீண்ட காலத் திட்டம் நம் இலங்கை திருநாட்டில் வரும் காலத்தில் சர்வதேச அணியில் பல திறமையான வீரர்களை சேர்த்துக்கொள்ள வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
எந்த வித கட்டணமும் இன்றி இலவசமாக நீங்கள் இந்த போட்டியை கண்டு களிக்க முடியும். City League கால்பந்தாட்ட மைதானத்தில்(கொழும்பு-௦02) நடைபெற இருக்கும் இந்த போட்டித் தொடர்கள் கிரிக்கெட்டில் போட்டி ஏற்படுத்திய புரட்சியை ஏற்படுத்தப்போகின்றன. வெறும் பதினைந்து நிமிடங்கள் கொண்ட இந்த போட்டியில் ஒரு பந்துடன் பத்து வீரர்கள் மோதும் கண்கொள்ளா காட்சியைக் காண நீங்களும் வாருங்கள். வெற்றியோடு நீங்களும் வெற்றிநடை போடுங்கள்.
இந்த நிகழ்வு நடைபெறும் கால்ப்பந்தாட்ட மைதானத்துக்கான வரைபடம்.