Pages

Wednesday, February 20, 2008

காதோரம் வலைப்பூவில் வெற்றி எப் எம்


காதோரம் இணைப்பில் வெற்றி எப் எம் பற்றிய பதிவொன்று உள்ளது.இது தொடர்பாக வெற்றி எப் எம் நிர்வாகம் கவனத்திற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

காதோரம் தளத்தில் பதியப்பட்ட செய்தி

வெற்றி எப் எம் - உத்தியோகபூர்வ ஒலிபரப்பு எப்போது?
99.6 இல் பரீட்சார்த்த ஒலிபரப்பை கொழும்பில் ஆரம்பித்திருக்கும் புதிய தமிழ் வானொலியான வெற்றி எப் எம் நல்ல பாடல்களை தொடர்ச்சியாக ஒலிபரப்பி வருகிறது. ஆயினும் அவர்களது அலைவரிசை பலவீனமாக இருப்பதால் கொழும்பு பெரும்பாக பகுதிகளில் கூட வெற்றி எப் எம் வானொலியை தெளிவாகக் கேட்பது சிரமமாக உள்ளது. குறிப்பாக பகல் நேரங்களில் 99.6 அலைவரிசையில் வேறு வானொலிகளின் அலைவரிசைகளின் இடையூறுகள் மிக அதிகம்.
இத்தகைய இடையூறுகளை களைந்து வெற்றி எப் எம் வெற்றி பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Saturday, February 16, 2008

இணையதளத்தில் ஓரங்கட்டப்படும் ஹிந்தி


உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்று என்ற சிறப்பை பெற்றுள்ள ஹிந்தி, இணையதள பயன்பாட்டில் ஓரங்கட்டப்பட்டு வருவதாக, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகில் பேசப்படும் 6,000 மொழிகளில் 12 மட்டுமே இணையதளங்களில் ஏறக்குறைய முழு அளவிற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதில் ஆங்கிலம் முதலிடத்தில் இருப்பதாகவும், இன்டெர்நெட் வேர்ட் ஸ்டேட்ஸ்.காம் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் உள்ள பிராந்திய மொழிகளில் இணையதள பயன்பாட்டு வளர்ச்சி, வரையறுக்கப்பட்ட விகிதத்திலேயே உள்ளன. இந்திய இணையதள பயன்பாட்டாளர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலத்தை பெரிதும் பயன்படுத்துகின்றனர்.

உலகின் முதல் 5 இடங்களில் ஒன்றாகத் திகழும் ஹிந்தி மொழி, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களிலும் பேசப்படுகிறது. எனினும் இணையதள பயன்பாட்டில் சிறப்பான இடத்தை இது பெறவில்லை என்று ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தவம் - வடிவேல் நகைச்சுவை

அருண் விஜய், அறிமுகங்கள் வந்தனா, அர்பிதா, வடிவேலு, ஜனகராஜ், வெ.ஆ.மூர்த்தி, வாசு விக்ரம், கலைராணி நடிப்பில் ரவியின் ஒளிப்பதிவில் டி. இமான் இசையில் ஷக்தி பரமேஷ் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஸ்ரீராம் பிலிம்ஸ் (பி) லிட்.

ரெடி, ஸ்டார்ட், கேமரா, ஆக்சன்: 'ரோபோ' துவங்கியது!


`ரோபோ' படப்பிடிப்பு துவங்கியது. ஏவிஎம் ஸ்டுடியோவில் ரஜினி நடித்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன.
`சிவாஜி'யை அடுத்து, `குசேலன்' மற்றும் 'ரோபோ' ஆகிய படங்களில் ரஜினி நடிக்கிறார். 'குசேலனை' பி.வாசுவும், `ரோபோ'வை ஷங்கரும் இயக்குகின்றனர்.
125 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக தயாராகிவரும் 'ரோபோ'வில் ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் தொடங்கியது.
ரஜினி நடித்த சில காட்சிகளை இயக்குனர் ஷங்கர் படமாக்கினார். இதனால் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதியதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாவலர்கள் திணறியதாகவும் ரசிகர்கள் சிலர் தெரிவித்தனர்.

பொழுதுபோக்கின் வெற்றிக்கு வெற்றி எப் எம்


எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கிரிக்ட் போட்டி விபரங்களை நேரடியாக தர வெற்றி எப் எம் தயாராகிறது. சிபி முக்கோண ஒருநாள் தொடரின் விறுவிறுப்பான கட்டங்கள் வெற்றியில். தமிழில் போட்டி விபரங்களை அறிந்துகொள்ள வெற்றி எப்.எம்.முடன் இணைந்துகொள்ளலாம். தற்போது ஒலிபரப்பாளர்களின் குரல்களுடன் பாடல்களை மட்டும் தந்துகொண்டிருக்கும் வெற்றி எப்.எம் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளையும் வழங்குவதற்கு முன்னெடுப்புக்களைச் செய்துவருகிறது. இந்த நிலையில் கிரிக்கெட் போட்டி விபரங்களும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெற்றி நேயர்களுக்கு இனிப்பான செய்திதான்!
வெகுவிரைவில் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆரம்பிக்கவுள்ள வெற்றி எப் எம் உலகெங்கும் உள்ள தமிழ் நேயர்களை தன் வசம் ஈர்க்கும் என்று எதிர்பார்கலாம்

Friday, February 15, 2008

Arai En 305il Kadavul - Simbudeven’s laugh riot yet again!


Director Simbudeven is back again with one more film! The title ‘Arai Enn 305-il Kadavul’of the film it self has created much anticipation. After the success of the blockbuster comedy ‘Imsai Arasan 23am Pulikesi’ this film has also created a lot of expectations among the Tamil audience.The film was shot for around two months around the city, Bangalore and Tenkasi. ‘Arai Enn 305-il Kadavul’ is produced by Director Shankhar’s ‘S’ Pictures which also produced ‘Imsai Arasan 23am Pulikesi’. S. Soundarajan wields the camera for this flick, while G. Sasikumar has taken charge of editing.The music director of ‘Arai Enn 305-il Kadavul’ is Vidyasagar. He has given five different varieties of songs which includes rap, western, a folk song with the smell of the Tamil soil, melody and also a remix. Our sources believe that the songs of this film will sell like hot cakes!The lyrics have been penned by Muthulingam, Na. Muthukumar, Pa. Vijay, Yugabharathy, and Kabilan.The two lead roles of ‘Arai Enn 305-il Kadavul’, Santhanam & Kanja Karuppu were made to sit on the parapet of the tallest building. The guys who enacted the roles seemed to heave a sigh of relief once the take was ok! It is also believed that the makers of the film ‘Arai En 305il Kadavul’ have made authentic costumes and brought special wigs & make-up materials from Mumbai for the character of ‘Maha Vishnu’ played by Prakash Raj.The art Director Selvakumar has successfully re-created a moon at AVM studios that was required for the film ‘Arai En 305il Kadavul’, where a song was shot with Santhanam & Kanja Karuppu dancing on the surface of the moon!‘Arai En 305il Kadavul’ too has historical sequences like in ‘Imsai Arasan..’Santhanam and Kanja Karuppu, who are the heroes of ‘Arai En 305il Kadavul’ have decided not to act in any other film before this flick gets over.‘Arai En 305il Kadavul’ has a huge star cast which includes Prakash Raj, Santhanam, Kanja Karuppu, Madhumitha, & Jyothirmayi in principal characters and also includes Rajesh, Ilavarasu, M.S. Bhaskhar, Thalaivasal Vijay, Madan Bob, Kuyili, Chams, ‘Paruthiveeran’ Sambath, V.M.C. Hanifa, V.S. Raghavan, Delhi Ganesh, Periyar Dasan, ‘Kadhal’ Sukumar & Muthukalai among others.‘Great Selva’ is being introduced as the stunt master through this film ‘Arai En 305il Kadavul’. He is a former assistant of Peter Hain. It was Selva who acted as the dupe artiste for Vikram in the film ‘Anniyan’ (for ‘Anniyan’ character) in the stunt sequences.‘Arai En 305il Kadavul’ will be released by the end of February.

பேர்த் மைதானத்திற்கு விடை கொடுத்தார் கில்கிரிஸ்ட்

காமன்வெல்த் பேங்க் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை ஆஸ்திரேலியா 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 12 புள்ளிகளுடன் அது முதலிடத்தை பெற்றது.

பெர்த் நகரில் வெள்ளிக்கிழமை நடந்த இத்தொடரின் 6வது போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. இதன்படி அந்த அணி 49.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தனது சொந்த மண்ணில் கடைசி போட்டியில் பங்கேற்ற துவக்க வீரர் கில்கிரிஸ்ட், ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். ஆட்டத்தின் 38வது ஓவரில், தனது 16வது சதத்தை கில்கிறிஸ்ட் பூர்த்தி செய்து, 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஹைடன் 4 ரன், கேப்டன் பாண்டிங் 25 ரன், கிளார்க் 43 ரன், சைமண்ட்ச் 4 ரன், ஹசே 25 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். பின் வரிசையில் வந்த ஹோப்ஸ் (2), ஹாக் (5), பிரட் லீ (2), ஜான்சன் (0) ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

இதன் பின் 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்ந்த இலங்கை, 45.3 ஓவர்களில் 173 ரன்களுக்கு சுருண்டது. சிறப்பாக விளையாடி 80 ரன்கள் குவித்த சங்ககராவைத் தவிர மற்றவர்கள் சோபிக்கத் தவறினர்.

ஆஸ்திரேலிய தரப்பில் பிராக்கென், ஜான்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாக் 2 விக்கெட்டுகளையும், பிரட் லீ, ஹோப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

சொந்த மண்ணில் சாதனை சதம் அடித்த கில்கிறிஸ்ட், ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இவ்வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2ம் இடத்திலும் (8 புள்ளிகள்) , இலங்கை (6) 3ம் இடத்திலும் உள்ளன.

இத்தொடரின் அடுத்த போட்டி, இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே வரும் 17ம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது.

வெற்றி எப்.எம். ஒலிபரப்பு ஆரம்பம்வெற்றி எப்.எம். பரீட்சார்த்த ஒலிபரப்பு ஜனவரி மாதம் முதல் ஆரம்பித்து தற்போது ஒலிபரப்பாளர்களின் குரல்களுடன் பாடல்களை வழங்க ஆரம்பித்திருக்கிறது. வெற்றி எப்.எம் தற்பொழுது கொழும்பில் தனது சேவையை ஆரம்பித்துள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் இணையதளத்திலும் வெகுவிரைவில் தனது ஒலிபரப்பை இலங்கை முழுவதும் ஆரம்பிக்கவுள்ளது.
நேயர்கள் தற்போது கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் 99.6 எப்.எம். அலைவரிசையில் வெற்றி எப்.எம். ஒலிபரப்பை கேட்டு மகிழலாம். முற்றிலும் வித்தியாசமான நிகழ்ச்சிகளையும் புத்தம்புதிய பாடல்களையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.
இலங்கையில் முதன்முறையாக புதிய தொழில்நுட்பத்துடன் வெற்றி எப்.எம். இது உங்கள் வெற்றி பொழுதுபோக்கின் வெற்றி.....