Pages

Saturday, February 16, 2008

ரெடி, ஸ்டார்ட், கேமரா, ஆக்சன்: 'ரோபோ' துவங்கியது!


`ரோபோ' படப்பிடிப்பு துவங்கியது. ஏவிஎம் ஸ்டுடியோவில் ரஜினி நடித்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன.
`சிவாஜி'யை அடுத்து, `குசேலன்' மற்றும் 'ரோபோ' ஆகிய படங்களில் ரஜினி நடிக்கிறார். 'குசேலனை' பி.வாசுவும், `ரோபோ'வை ஷங்கரும் இயக்குகின்றனர்.
125 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக தயாராகிவரும் 'ரோபோ'வில் ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் தொடங்கியது.
ரஜினி நடித்த சில காட்சிகளை இயக்குனர் ஷங்கர் படமாக்கினார். இதனால் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதியதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாவலர்கள் திணறியதாகவும் ரசிகர்கள் சிலர் தெரிவித்தனர்.

No comments: