Pages

Thursday, January 21, 2010

ஜனாதிபதி தேர்தல் - 2010





தேர்தல் இரவு TV அதிர்ஷ்டம்

ஒரே இரவில் 19 புத்தம் புதிய வர்ண தொலைக்காட்சிகளை வெல்லப் போகின்ற வெற்றி நேயர்கள் யார்?

னாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவரும் இரவில் உங்கள் வெற்றியில் ABANS கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்து, ஒவ்வொரு மணித்தியாலத்திலும் ஒரு புத்தம் புதிய LG TVயை வென்றெடுங்கள்.

5 வருட உத்தரவாதம் பெற்றது LG FLATRON தொலைக்காட்சிகள்.
மீள விற்பனை செய்யும் விலையில் 12 மாதங்களுக்கு வட்டி இல்லை.
இலவச DVD PLAYER சலுகை : இலவச DVD PLAYER ஒன்றை LG TVயுடன் பெற்றுக்கொள்ளலாம்.
உலகின் முதலாவது DIGITAL FLATRONதொலைக்காட்சி.
LG HOME THEATRESகளை 12 மாத வட்டியில்லாப் பெறுமதியில் பெற்றுக்கொள்ளலாம்.
LG தயாரிப்புக்கள் கொரியாவிலிருந்து தருவிக்கப்பட்டது.
கண்களுக்கு பாதிப்பற்றது LG FLATRON தொலைக்காட்சிகள்.


தேர்தல் இரவன்று வெற்றியோடு இணைந்திருங்கள்.

LG தொலைக்காட்சிகளை வெல்லுங்கள்.

Wednesday, January 13, 2010

இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...!



தைத்திருநாளாம்..!
மனங்களை ஒன்றித்து தைத்திடும் நாளாம்..!
பிணி நீக்கி பணி தொடர வைத்திடும் நாளாம்..!
நெல்மணிக் குவியல் உழவன் வரைந்த சித்திரம்..!
இவன் மாத்திரமே தரணியில் வாழும் சரித்திரம்..!
பயிர் வளர்த்து உயிர் காக்கும்
உழவன் புகழ் போற்றி இசைப்போம்.
கதிரவனுக்கு நன்றி உரைப்போம்.
சமத்துவ விதைவிதைத்து வேற்றுமை வேரறுத்து
இன்பக்கதிர்களை அறுவடை செய்வோம்.
இல்லத்தில் அச்சு வெல்லம் உள்ளத்தில் அன்பு வெள்ளம்
பொங்குக தரணியெங்கும் இன்பமாய்..!

வெற்றியின் நேயர்களுக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...!


Tuesday, January 12, 2010

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம் - வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்..!
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்...
பயிற்றுப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்..!

- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.


வெற்றிFM பொங்கலன்று உங்களுக்காக வழங்கும்
பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்.

அதிகாலை 5 - 6 மணி வரை : பொங்கும் காலை

காலை 6 - 10 மணி வரை : பொங்கும் விடியல்

காலை 10 - 1 மணி வரை : ராகநதி இசை நிகழ்ச்சி
தென்னிந்திய பாடகர்கள் முகேஸ், சாருலதாமணி, ஜெய்தேவ், மதுமிதா மற்றும் ரோஷினி பொங்கலன்று உங்கள் வெற்றியில்

மதியம் 1 - 3 மணி வரை : பகல் பந்தி போடும் பொங்கல் பந்தி.
உங்கள் வாழ்த்துக்களோடும் சிறப்பு பாடல்களோடும்

மாலை 3 - 5 மணிவரை : வெற்றியில் வேட்டைக்காரன்.
மனம் திறக்கிறார் இளைய தளபதி - ஒரு சிறப்பு நேர்காணல்

மாலை 5 - 9 மணி வரை : எங்கேயும் பொங்கல் எப்போதும் பொங்கல்.

இரவு 9 - 12 மணி வரை : சின்னத்திரையும் வண்ணத்திரையும் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறதா? இல்லையா?
திண்டுக்கல் I.லியோனியின் நகைச்சுவை கலக்கல் பட்டிமன்றம்.

வெற்றியோடு சேர்ந்து தைமகளை இனிதே வரவேற்போம்.

Monday, January 11, 2010

யாழ் மண்ணில் வெற்றி உலா


வெற்றிFM அண்மையில் 101.5 பண்பலையினூடாக யாழ்ப்பாணத்திலும் தன்னுடைய தடத்தை பதித்திருக்கிறது.  

பிறந்திருக்கும் இந்த 2010 புதுவருடத்தில் வெற்றி உலா யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாகிறது. உங்களுக்கான பரிசுப்பொருட்களோடு யாழ்ப்பாணத்தில் உங்களை வெற்றி சந்திக்கப்போகும் தினங்கள் 

11ஆம் திகதி குருநகர் 
12ஆம் திகதி நாவாந்துறை 
13ஆம் திகதி யாழ்நகர் 
14ஆம் திகதி சுன்னாகம் 
15ஆம் திகதி திருநெல்வேலி 
16ஆம் திகதி யாழ்நகர் 
17ஆம் திகதி சங்காணை 
18ஆம் திகதி மானிப்பாய் 
19ஆம் திகதி நெல்லியடி 
20ஆம் திகதி யாழ்நகர்  

மகிழ்வையும் உற்சாகத்தையும் உங்களுக்கு வழங்க உங்களை நாடி வருகிறது
வெற்றிFM 
வாழ்க்கைக்கு வெற்றி.