Pages

Showing posts with label Live. Show all posts
Showing posts with label Live. Show all posts

Monday, January 11, 2010

யாழ் மண்ணில் வெற்றி உலா


வெற்றிFM அண்மையில் 101.5 பண்பலையினூடாக யாழ்ப்பாணத்திலும் தன்னுடைய தடத்தை பதித்திருக்கிறது.  

பிறந்திருக்கும் இந்த 2010 புதுவருடத்தில் வெற்றி உலா யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாகிறது. உங்களுக்கான பரிசுப்பொருட்களோடு யாழ்ப்பாணத்தில் உங்களை வெற்றி சந்திக்கப்போகும் தினங்கள் 

11ஆம் திகதி குருநகர் 
12ஆம் திகதி நாவாந்துறை 
13ஆம் திகதி யாழ்நகர் 
14ஆம் திகதி சுன்னாகம் 
15ஆம் திகதி திருநெல்வேலி 
16ஆம் திகதி யாழ்நகர் 
17ஆம் திகதி சங்காணை 
18ஆம் திகதி மானிப்பாய் 
19ஆம் திகதி நெல்லியடி 
20ஆம் திகதி யாழ்நகர்  

மகிழ்வையும் உற்சாகத்தையும் உங்களுக்கு வழங்க உங்களை நாடி வருகிறது
வெற்றிFM 
வாழ்க்கைக்கு வெற்றி.

Wednesday, December 30, 2009

மீட்டிப் பார்ப்போம் மீண்டும் வராத வருடத்தை!!!

2009ற்கான பிரியாவிடை உங்கள் வெற்றியில்!!!

2009இன் முடிவில் உங்களோடு சேர்ந்து முற்றுப்புள்ளி வைக்கிறது உங்கள் வெற்றி.

இந்த ஒரு வருட வாழ்க்கையில் ஓராயிரம் மாற்றங்கள் தந்த 2009க்கு பிரியாவிடை கொடுக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் December 31 அன்று உங்கள் வெற்றியில்.

இசை ராஜாங்கம் : வாழ்த்துக்களோடு பரபரப்பு

பூ பூக்கும் நேரம் : 2010இன் சந்தோஷ பாதை

விடியல் : 2009ன் இறுதி விடியல்

வினோத வியூகம் : 2009ல் மறக்க முடியாதது

பகல் பந்தி : 2009ல் நீங்கள் ரசித்தவை பரிமாறப்படும்

கற்றது கையளவு : 2009ல் நினைவில் நின்றவை

எங்கேயும் எப்போதும் : இதுவரை நடந்த சிறப்பு நிகழ்ச்சிகளின் சிறப்புத்தொகுப்பு.

காற்றின் சிறகுகள் : 2009 வரமா? சாபமா?

2009 தந்த வெற்றிகள் - எம் வாழ்வின் முன்னேற்றப்படிகள் 2009 தந்த தோல்விகள் - எம் வாழ்வின் முன்னேற்றப்படிகள் என அக மகிழ்வோம்.
வெற்றியின் நேயர்கள் வாயிலாக வெற்றிக்கு வெற்றிகள் பல தந்த 2009ம் ஆண்டை வெற்றிகரமான ஆண்டாக பூர்த்தி செய்வோம்.

December 31 வெற்றியோடு சங்கமிக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடாதீர்கள்.

Tuesday, September 29, 2009

கன்னியருக்கு 9 ராத்திரி அது நவராத்திரி






காளையருக்கு ஓரு ராத்திரி அது சிவராத்திரி, கன்னியருக்கு 9 ராத்திரி அது நவராத்திரி, அந்த வகையில் அகிலம் ஆளும் அன்னை ஆதி பராசக்தி முப்பெருந் தேவியராய் அருள் தரும் காலம் இந் நவராத்திரி.
அனைத்துருவான பெண்ணை சக்தியாய் போற்றி வழிபடும் தொன்மையை உணர்த்துவது இந்நவராத்திரி.


அதர்மம் தலை நிமிரும் போது தர்மம் காக்க அன்னை வருவாள் என்பதை உணர்த்துவது 10வது நாளான விஜயதசமி. மகிஷாசுரமர்த்தினியாக அன்னை வடிவெடுத்த இவ் விஜயதசமி நன்னாளில் வளமான வாழ்வு வேண்டி பூஜைகள் நடத்தவது தொன்று தொட்டு வரும் வழமை.


இதற்கிணங்க நேற்று காலை 11மணிக்கு எமது அலுவலகத்தில் விஜயதசமி பூஜை நடைபெற்றது. இனமத பேதமின்றி யாவரும் இலங்கை தாயின் குழந்தைகளாக Voice of Asiaவின் அதிகாரிகள் உட்பட அலுவலக ஊழியர்கள் அனைவரும் கலந்து நேற்றைய பூஜையை சிறப்பித்திருந்தனர். Voice of Asiaயை இன்னும் பல வெற்றிகளை பெற்றிட எல்லாம் வல்ல அம்பிகை அருள் புரிவாளாக!

Saturday, March 14, 2009

நான் தன்னந்தனிக்காட்டு ராஜா


ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9மணி செய்த அறிக்கையை தொடர்ந்து உங்கள் பசுமையான நினைவுகளை மீட்டிப்பார்க்கும் அமரகானங்கள் நிகழ்ச்சியில் இந்த ஞாயிறு(March 15) இரவு உங்களுக்காக........ 

எத்தனை புதிய பாடல்கள் வந்தாலும் பழைய பாடல் போல வருமா என்பது இன்றும் பலரது அங்கலாய்ப்பு. அதிலும் தத்துவப்பாடல்கள் என்றால் சொல்லவா வேண்டும். அந்த பாடல்வரிகளில் புதைந்திருக்கும் அர்த்தங்கள் முத்துக்கள். சில சந்தர்ப்பங்களில் அவை நம் வாழ்வின் சில சம்பவங்களின் போது எமக்காகவே எழுதியதை போல பொருந்தியதை எண்ணி வருந்தியவர்கள் யாரும் இருக்க முடியுமா? 

தமிழ் திரையுலகின் பொற்கால தத்துவங்களை கேட்க மறந்து விடாதீர்கள். 
www.vettri.lk