Pages

Showing posts with label Tamil Radio. Show all posts
Showing posts with label Tamil Radio. Show all posts

Wednesday, December 28, 2011

Vettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்

  • வெற்றியின் கிறிக்கற் விருதுகள் ஏன்?
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தந்த ஆண்டுகளில் சாதனை படைத்தவர்களை திரும்பப் பார்ப்பதுவும், அவர்களை பாராட்டுதலும் அனைவருக்கும் பொதுவானது.
ஆகவே இது புதிய முயற்சியெல்லாம் கிடையாது. வழக்கமான ஒன்றை புதிய விதமாக, மேம்படுத்திய விதத்தில் செய்யும் முயற்சியே.

  • ஏன் நேயர்களின் வாக்கு?
பொதுவாக வானொலிகளும், தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும், இணையத்தளங்களும் தாங்களாக விருதுகளைத் தெரிவுசெய்து உங்களின் பார்வைக்கு வழங்கும் போது அவர்களின் விருதுத் தெரிவில் தவறிருப்பதை உணர்ந்திருப்பீர்கள். ஆனால் விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வழங்கிய விருதுகளில் மாற்றங்கள் வழங்க முடியாது.
ஆகவே உங்களுக்கு அந்த வாய்ப்பை வெற்றி வழங்குகிறது. இணையத்தள வசதியுள்ள அனைவரும் இதில் பங்குபற்றக்கூடியதாக இருக்கும்.


  • அப்போது இணையத்தள வசதியற்ற நண்பர்கள்?
தொலைபேசி, அலைபேசி நேயர்கள் கலையகத்திற்கு அழைப்பெடுத்தோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பியோ வாக்களிப்பது இலகுவானது கிடையாது. ஏனைய நிகழ்ச்சிகள் பாதிக்கப்படக்கூடாது.
விளையாட்டு நிகழ்ச்சி நேரங்களின் போது இதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட எதிர்பார்க்கப்படுகிறது.
தபாலட்டை நேயர்களின் வாக்குகள் எந்நேரமும் வரவேற்கப்படுகின்றன.



  • நேயர்களின் வாக்குகளை மாத்திரம் கொண்டு விருதுகள் வழங்கப்படுமா?
இல்லை. நேயர்களின் வாக்குகள் மாத்திரம் விருதுகளை முடிவு செய்யாது. வெற்றியின் நடுவர் குழாம் ஆராய்ந்து விருதுகளை வழங்கும். நேயர்களின் வாக்குகள் கணிசமாக தாக்கம் செலுத்தும். உதாரணத்திற்கு, ஒரு வீரர் 500 வாக்குகளையும், இன்னொருவர் 50 வாக்குகளையும் பெறுவாராயின் நிச்சயமாக 500 வாக்குகள் பெற்றவருக்கு விருது கிடைக்க முழுமையான வாய்ப்புகள் காணப்படும்.


  • ஏன் நேயர்களின் வாக்குகளை மாத்திரம் கருத்திற்கொள்ள முடியாது?
சிறந்த வீரர் என்பதையும், விருப்பத்துக்குரிய வீரர் என்பதையும் வேறுபடுத்த விரும்பினோம்.
சங்கக்காரவா அல்லது ராகுல் ட்ராவிட்டா இவ்வருடத்தில் சிறப்பாக ஆடினார்கள் என வினவப்படும் போது சங்காவின் இரசிகர்கள் சங்காவிற்கும், ட்ராவிட்டின் இரசிகர்கள் ட்ராவிட் இற்கும் வாக்களித்தால் அங்கு இவ்வாண்டில் அதிக இரசிகர்களுடைய வீரரொருவரே தெரிவுசெய்யப்படுவாரே தவிர, இவ்வாண்டில் சிறப்பாகச் செயற்பட்ட வீரரல்ல.
ஆகவே சிறந்த வீரரைத் தெரிவுசெய்ய நடுவர் குழாமும் செயற்படும்.


  • நடுவர் குழாமை எவ்வளவுக்கு நம்பலாம்? அவர்களின் விருப்பு வெறுப்புக்கள் தாக்கம் செலுத்துமே?
நடுவர்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் காணப்படினும், நடுவர் பணியில் ஈடுபடும் போது முழுமையாக நடுநிலையுடன் செயற்படுவார்கள் என உறுதியளிக்கிறோம்.
அத்தோடு நடுவர் குழாமிலுள்ள ஒவ்வொருவரும் வேறுபட்ட விருப்புக்களை, தெரிவுகளை உடையவர்கள். ஆகவே ஒரு வீரர் அல்லது நாடு விருதுகளில் தாக்கம் செலுத்த வாய்ப்புக்கள் கிடையவே கிடையாது.



  • எனது சந்தேகம் இங்கே காணப்படவில்லை.
எங்கள் பேஸ்புக் பக்கத்தில் அல்லது இந்த பதிவில் அவற்றை வினவுங்கள்.
எங்கள் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.



வாக்களிக்க இங்கே செல்லுங்கள்.
உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்.

Friday, January 14, 2011

பொங்கல் தினத்தன்று காலை அதிரடி புதிரடி நிகழ்ச்சியில் 2லட்சம் ரூபாய்!


அதிரடி புதிரடி நிகழ்ச்சியில் புதிர்களுக்கு சரியான பதில் சொல்லி வழமையான பணப்பரிசு தொகையைவிட அதிகமாக வெல்லும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்...

போட்டியில் பங்குபற்றி 2லட்சம் ரூபாய் வெல்ல நீங்கள் செய்ய வேண்டியது.
காலை 7.30க்கு பிறகு வரும் 3 கேள்விகளுக்கான பதிலை
0718996996 இலக்கத்திற்கு SMS அனுப்புங்கள்.
அழைக்கலாம் 0114560383

5000 ரூபாயிலிருந்து பணப்பரிசு வெல்லலாம் நிகழ்ச்சி கேளுங்கள்!

Saturday, August 14, 2010

வெற்றி FMஇல் றமழான் மாத சிறப்பு நிகழ்ச்சிகள்.


புனித றமழான் மாதத்தில் சஹர் மற்றும் இப்தார் சிறப்பு நிகழ்ச்சிகள் இம்முறையும் இடம் பெறுகின்றன.

சஹர் நிகழ்ச்சி அதிகாலை நான்கு மணி முதல் ஐந்து மணி வரை ஒலிபரப்பாகிறது.

மாலை 6.15 முதல் 6.30 வரை வரும் இப்தார் நிகழ்ச்சியில் மர்ஹும் நியாஸ் மௌலவி அவர்களின் சிறப்பு சிந்தனையை நேயர்கள் கேட்டு பயன்பெறலாம்.


பிரதான அனுசரணை
NOLIMIT

இணை அனுசரணை
GNANAM IMPORTS PVT.LTD

Sunday, June 20, 2010

முதலிடத்தில் வெற்றி FM!

ஆரம்பித்து குறுகிய காலத்தில் நாடு முழுவதும் ஏராளம் நெஞ்சங்களை கவர்ந்த உங்கள் வெற்றி FM இன்று முதலிடத்தில்...

எம்மை முதற்தர வானொலியாக உங்கள் உள்ளத்தில் தரப்படுத்தி அழகுபார்க்கும் அத்தனை வெற்றி சொந்தங்களுக்கும் எம் மனமார்ந்த நன்றிகள்.

Wednesday, December 30, 2009

மீட்டிப் பார்ப்போம் மீண்டும் வராத வருடத்தை!!!

2009ற்கான பிரியாவிடை உங்கள் வெற்றியில்!!!

2009இன் முடிவில் உங்களோடு சேர்ந்து முற்றுப்புள்ளி வைக்கிறது உங்கள் வெற்றி.

இந்த ஒரு வருட வாழ்க்கையில் ஓராயிரம் மாற்றங்கள் தந்த 2009க்கு பிரியாவிடை கொடுக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் December 31 அன்று உங்கள் வெற்றியில்.

இசை ராஜாங்கம் : வாழ்த்துக்களோடு பரபரப்பு

பூ பூக்கும் நேரம் : 2010இன் சந்தோஷ பாதை

விடியல் : 2009ன் இறுதி விடியல்

வினோத வியூகம் : 2009ல் மறக்க முடியாதது

பகல் பந்தி : 2009ல் நீங்கள் ரசித்தவை பரிமாறப்படும்

கற்றது கையளவு : 2009ல் நினைவில் நின்றவை

எங்கேயும் எப்போதும் : இதுவரை நடந்த சிறப்பு நிகழ்ச்சிகளின் சிறப்புத்தொகுப்பு.

காற்றின் சிறகுகள் : 2009 வரமா? சாபமா?

2009 தந்த வெற்றிகள் - எம் வாழ்வின் முன்னேற்றப்படிகள் 2009 தந்த தோல்விகள் - எம் வாழ்வின் முன்னேற்றப்படிகள் என அக மகிழ்வோம்.
வெற்றியின் நேயர்கள் வாயிலாக வெற்றிக்கு வெற்றிகள் பல தந்த 2009ம் ஆண்டை வெற்றிகரமான ஆண்டாக பூர்த்தி செய்வோம்.

December 31 வெற்றியோடு சங்கமிக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடாதீர்கள்.

Tuesday, September 29, 2009

கன்னியருக்கு 9 ராத்திரி அது நவராத்திரி






காளையருக்கு ஓரு ராத்திரி அது சிவராத்திரி, கன்னியருக்கு 9 ராத்திரி அது நவராத்திரி, அந்த வகையில் அகிலம் ஆளும் அன்னை ஆதி பராசக்தி முப்பெருந் தேவியராய் அருள் தரும் காலம் இந் நவராத்திரி.
அனைத்துருவான பெண்ணை சக்தியாய் போற்றி வழிபடும் தொன்மையை உணர்த்துவது இந்நவராத்திரி.


அதர்மம் தலை நிமிரும் போது தர்மம் காக்க அன்னை வருவாள் என்பதை உணர்த்துவது 10வது நாளான விஜயதசமி. மகிஷாசுரமர்த்தினியாக அன்னை வடிவெடுத்த இவ் விஜயதசமி நன்னாளில் வளமான வாழ்வு வேண்டி பூஜைகள் நடத்தவது தொன்று தொட்டு வரும் வழமை.


இதற்கிணங்க நேற்று காலை 11மணிக்கு எமது அலுவலகத்தில் விஜயதசமி பூஜை நடைபெற்றது. இனமத பேதமின்றி யாவரும் இலங்கை தாயின் குழந்தைகளாக Voice of Asiaவின் அதிகாரிகள் உட்பட அலுவலக ஊழியர்கள் அனைவரும் கலந்து நேற்றைய பூஜையை சிறப்பித்திருந்தனர். Voice of Asiaயை இன்னும் பல வெற்றிகளை பெற்றிட எல்லாம் வல்ல அம்பிகை அருள் புரிவாளாக!

Saturday, March 14, 2009

நான் தன்னந்தனிக்காட்டு ராஜா


ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9மணி செய்த அறிக்கையை தொடர்ந்து உங்கள் பசுமையான நினைவுகளை மீட்டிப்பார்க்கும் அமரகானங்கள் நிகழ்ச்சியில் இந்த ஞாயிறு(March 15) இரவு உங்களுக்காக........ 

எத்தனை புதிய பாடல்கள் வந்தாலும் பழைய பாடல் போல வருமா என்பது இன்றும் பலரது அங்கலாய்ப்பு. அதிலும் தத்துவப்பாடல்கள் என்றால் சொல்லவா வேண்டும். அந்த பாடல்வரிகளில் புதைந்திருக்கும் அர்த்தங்கள் முத்துக்கள். சில சந்தர்ப்பங்களில் அவை நம் வாழ்வின் சில சம்பவங்களின் போது எமக்காகவே எழுதியதை போல பொருந்தியதை எண்ணி வருந்தியவர்கள் யாரும் இருக்க முடியுமா? 

தமிழ் திரையுலகின் பொற்கால தத்துவங்களை கேட்க மறந்து விடாதீர்கள். 
www.vettri.lk

Friday, February 13, 2009

வெற்றிப் பயணத்தில் ஒரு வருடம்.........

கடந்த ஆண்டு February மாதம் 14ம் திகதி பிறந்த உங்கள் வெற்றி FM வானொலி அதன் பின் தவழ்ந்து, எழுந்து நடந்து, வீறு நடையுடன் நாளை முதலாவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் வந்த சில சோதனைகளையும் சாதனைகளாக்கி இன்று இதயம் வென்று வெகு விரைவில் இமயம் வெல்ல வெற்றி நடை போடுகிறது.

A.R.V.லோஷனின் நேர்த்தியான வழிகாட்டலில் வலம்வரும் வெற்றி, நேயர்களின் ரசனைத்தன்மையை நாடிபிடித்தறிந்து அவர்களுக்கு என்ன பிடிக்குமோ,அவற்றை நிகழ்ச்சிகளாகத் தந்துகொண்டிருக்கிறது. வானலைவழியே தேன்மழை பொழிந்து வரும் உங்கள் வெற்றி, தன் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை எந்த நிகழ்ச்சியும் நேயர்களுக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தால் மாற்றவில்லை என்பது பெருமை கொள்ளும் விடயமே.

நாளை அதிகாலை பூபூக்கும் நேரத்தோடு ஆரம்பிக்கும் சிறப்பு நிகச்சிகள் நாள் முழுவதும் தொடர இருக்கிறது. அந்த நிகழ்ச்சிகள் சற்று வித்தியாசமாகவும் உங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தவும் இருக்கிறது. அந்த நிகழ்ச்சிகளை பற்றிய முன்னோட்டங்கள் இப்போது வானலை வழியே ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதன் சுவையையும் சுவாரஸ்யத்தையும் நாளை எங்கள் நேயநெஞ்சங்கள் உணரலாம்.

ஆர்ப்பாட்டமில்லாமல் மிக அமைதியான முறையில் எங்கள் நேயர்களுடன் இந்த நன் நாளில் கால் பதித்து கொண்டாட இருக்கிறோம். வெற்றியின் நேயர்கள் அனைவரும் வெற்றியின் பங்காளர்கள் எனவே அனைவருக்கும் எங்கள் நல்வாழ்த்துக்களுடன் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த ஒரு வருடமும் எங்களோடு இணைந்து வெற்றிக்கொடி கட்டும் நேயர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு கிட்டும் என்ற நம்பிக்கையோடு இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றோம்............................

வெற்றி எப்.எம்

வாழ்க்கைக்கு வெற்றி.

இனி ஒரு புது விதி செய்வோம்.

Tuesday, February 3, 2009

ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் புனருத்தாரண பாலஸ்தாபன விழா

வெற்றியின் ஊடக அனுசரணையில் நடைபெற்ற கொழும்பு 12 ஆமர் வீதி, பரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் புனருத்தாரண பாலஸ்தாபன விழா நடைபெற்றது.

அமைதியும் அருளும் நிறைந்ததுள்ள இவ் ஆலயத்தின் கிரியைகளை போஷகர் பிரதிஷ்டா சிரோன்மணி பிரம்மஸ்ரீ சாமி விஸ்வநாதக் குருக்கள் ஆசியுடன் பிரதிஷ்டா பூஷணம், சிவஞானவித்தகர் வெங்கட சுப்பிரமணிய குருக்கள் நடத்திவைத்தார். பிரம்மஸ்ரீ க.யசோதரக்குருக்கள் மற்றும் பிரம்மஸ்ரீ ச.பரமேஸ்வரசர்மா ஆகியோர் இணைந்தது கிரியைகளில் ஈடுபட்டனர்.

காலை யாகத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சில முக்கிய கிரியைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து சுவாமி பால ஆலயத்தை அடைந்து பாலஸ்தாபன கிரியைகள் நடைபெற்றன. இதனிடையே, பல ஆலயங்களில் கும்பாபிஷேகங்கள் செய்து புகழ் பெற்ற பிரதிஷ்டா சிரோன்மணி பிரம்மஸ்ரீ சாமி விஸ்வநாதக் குருக்கள்(நவாலி) அவர்களிடம் பக்தர்கள் ஆசி பெற்றனர். தொடர்ந்து இடம்பெற்ற பூசை நிகழ்வுகளில் பல பக்தர்கள் பக்தி சிரத்தையோடு கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வுகளின் நேரடி வர்ணனை நிகழ்ச்சிகளின் இடை இடையே ஆலயத்தில் இருந்து வெற்றியில்

வழங்கப்பட்டது. நிகழ்வுகளின் நிறைவாக அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. கலந்து கொண்ட அனைத்து பக்த அடியார்களும் அம்பாளின் அருளை பெற்றுச் சென்றனர்.

இந்த நிகழ்விற்குச் சென்ற வெற்றி குழுவினரை ஆலயபரிபாலன சபையினர் அன்புடன் அனுசரித்ததுடன் தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். சில நேயர்கள் வெற்றி அறிவிப்பாளர்களுடன் நிகழ்ச்சிகள் பற்றி கலந்துரையாடினர்.

இந்த நேரத்தில் ஆலயபரிபாலன சபையினருக்கும் நேயர்களுக்கும் வெற்றி குடும்பம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வெற்றி,

வாழ்க்கைக்கு வெற்றி.