வெற்றியின் ஊடக அனுசரணையில் நடைபெற்ற கொழும்பு 12 ஆமர் வீதி, பரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் புனருத்தாரண பாலஸ்தாபன விழா நடைபெற்றது.
அமைதியும் அருளும் நிறைந்ததுள்ள இவ் ஆலயத்தின் கிரியைகளை போஷகர் பிரதிஷ்டா சிரோன்மணி பிரம்மஸ்ரீ சாமி விஸ்வநாதக் குருக்கள் ஆசியுடன் பிரதிஷ்டா பூஷணம், சிவஞானவித்தகர் வெங்கட சுப்பிரமணிய குருக்கள் நடத்திவைத்தார். பிரம்மஸ்ரீ க.யசோதரக்குருக்கள் மற்றும் பிரம்மஸ்ரீ ச.பரமேஸ்வரசர்மா ஆகியோர் இணைந்தது கிரியைகளில் ஈடுபட்டனர்.
காலை யாகத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சில முக்கிய கிரியைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து சுவாமி பால ஆலயத்தை அடைந்து பாலஸ்தாபன கிரியைகள் நடைபெற்றன. இதனிடையே, பல ஆலயங்களில் கும்பாபிஷேகங்கள் செய்து புகழ் பெற்ற பிரதிஷ்டா சிரோன்மணி பிரம்மஸ்ரீ சாமி விஸ்வநாதக் குருக்கள்(நவாலி) அவர்களிடம் பக்தர்கள் ஆசி பெற்றனர். தொடர்ந்து இடம்பெற்ற பூசை நிகழ்வுகளில் பல பக்தர்கள் பக்தி சிரத்தையோடு கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வுகளின் நேரடி வர்ணனை நிகழ்ச்சிகளின் இடை இடையே ஆலயத்தில் இருந்து வெற்றியில்
வழங்கப்பட்டது. நிகழ்வுகளின் நிறைவாக அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. கலந்து கொண்ட அனைத்து பக்த அடியார்களும் அம்பாளின் அருளை பெற்றுச் சென்றனர்.இந்த நிகழ்விற்குச் சென்ற வெற்றி குழுவினரை ஆலயபரிபாலன சபையினர் அன்புடன் அனுசரித்ததுடன் தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். சில நேயர்கள் வெற்றி அறிவிப்பாளர்களுடன் நிகழ்ச்சிகள் பற்றி கலந்துரையாடினர்.
இந்த நேரத்தில் ஆலயபரிபாலன சபையினருக்கும் நேயர்களுக்கும் வெற்றி குடும்பம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வெற்றி,
வாழ்க்கைக்கு வெற்றி.
No comments:
Post a Comment