Pages

Thursday, February 19, 2009

வெற்றியின் ஓராண்டு பூர்த்திவெற்றியின் முதலாவது வெற்றிக்கொண்டாட்டங்கள் நேற்று ஆர்ப்பாட்டமில்லாமல் ஆடம்பரமில்லாமல் அமைதியான முறையில் நேயர்களின் வாழ்த்து மழையுடன் வெகு சிறப்பாக நடந்தேறியது.

காலை வேளையில் அதிரடி புதிரடி நிகழ்ச்சியில் நேயர்களின் வாழ்த்துக்களை எஸ்.எம்.எஸ் வாயிலாக மட்டுமன்றி தொலைபேசி நேயர்களையும் நேரடியாக இணைத்துக்கொண்டு ஆரம்பித்து வைத்தார் ஹிஷாம்.
இதில் அறிவிப்புத்துறையில் முன்னோடியான புது தலைமுறையினரை என்றுமே வாழ்த்தும் B.H.அப்துல் ஹமீத் அவர்கள் எங்கள் வெற்றியை வாழ்த்தியது சிறப்பு.
அதனைத்தொடர்ந்து நாங்களும் ஸ்பெஷல் செய்யப்போகிறோம் என்று முன்னோட்டம் வேறு கொடுத்துக்கொண்டு பூஜாவும் வைதேகியும் வந்து அனைத்து அறிவிப்பாளர்களையும் செய்திப்பிரிவு மற்றும் விரிவாக்கர்பிரிவைச் சேர்ந்தவர்களையும் நேயர்களுக்கு வாழ்த்து சொல்ல வைத்து அசத்திட்டாங்க.
இதில் எங்கள் முகாமையாளர் லோஷன் அறிமுகமாகும் போது "தலைபோல வருமா...." பாடலை ஒலிபரப்பி வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.(நீங்கள் தலையாக இருந்தா அந்தக் கூட்டணிக்கு எப்போதும் வெற்றி தான்.)
அதன் பின் உதவி முகாமையாளர் ஹிஷாம் அறிமுகப்பாடலாக அவர் அதிகம் உச்சரிக்கும் பெயர் கொண்ட "மல்லிகா ........" பாடலை ஒலிபரப்பினர்.(ஹிஷாமிடம் கண்டிப்பாக இதைபற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்)
அதன் பின் விமல் தன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் போது "கண்ணில் வந்ததும் நீதான்......." பாடலை ஒலிக்கவிட்டு அறிமுகப்படுத்தினர்.(ஒரு காலத்தில் (!?) விமலுக்கு சோகப்பாட்டுக்கள் என்றால் உயிர்)
அதற்கடுத்து வந்தார் நம் இசைக்கட்டுப்பட்டாளர் பிரதீப் இவரின் அறிமுகப்பாடலோ "விழிமூடி யாசித்தால்....." பாடல் (யூத் என்று சொல்லிக்கொண்டு இந்த பாட்டைக் கேட்பாராம்!......)
அடுத்ததாக வந்தார் நம்ம பில்லா சந்துரு (இவருக்கும் அந்த பில்லாவிற்கும் என்ன சம்பந்தமோ?.........)
அதன் பின் எங்கள் செய்திப் பிரிவைச்சேர்ந்த காளை ஜோ பென்சி வரும்போது "வந்திட்டான்யா வந்திட்டான்யா காளை........." பாடல் ஒலித்தது.(உங்கள் சிகை அலங்காரத்தை எங்கே செய்கிறீர்கள்? அடுத்த சிகை அலங்காரம் என்ன?)
உதவி இசைக்கட்டுப்பாளர், எப்போதும் சந்தேகம் கேட்கும் டிஷோக்குமார் தன் கறுவாத்தோட்டம் பற்றி சொல்லி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
காதல் கொண்டேன் தனுஷ் நாமத்தில் இருந்து இப்போது வெற்றியின் ஜூனியர் என சொல்லும் ஜெய்சனுக்காக "ஜூனியர் .." பாடலை ஒலிக்க விட்டனர்.
அடுத்ததாக சதீஷ் அறிமுகமாகும் போது "ராமா ராமா......." பாடலை ஒலிக்க விட்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.(ஏனுங்கன்னா நீங்க விஜய் போலவோ?)
அதன் பின் "அழகுக் குட்டி....." பாடலுடன் ரஜீவ் அறிமுகமாகி தன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.(அண்ணா அக்கா என எல்லோரையும் பாசமாக அழைக்கும் இவர் எங்கள் எல்லோருக்கும் பெரிய அண்ணா.....)
அடுத்து வந்தவர் "மலையாளக்குருவி......" வனிதா தன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.(மலையாளப் பக்கம் இருந்து எப்ப தமிழ் பக்கம் வரப்போறிங்க?.)
பூஜாவும் வைதேகியும் எங்கள் எல்லாருக்கும் பாட்டும் போட்டிங்க உங்களுக்கு ஏன் குட்டிப்பிசாசே பாடல் போடல? (பரவாயில்லை நீங்களும் நல்லாத்தான் ஸ்பெஷல் செய்கிறீர்கள்..................)
இதில் எங்களிடமிருந்து தன் மாற்று வேலை காரணமாக சற்று தொலைவில் இருக்கும் செந்தூரனும் இணைந்து கொண்டது மகிழ்ச்சியான விடயம்.(தொலை தூரம் போனாலும் வெற்றி மீது நீங்கள் கொண்ட பாசம் மாறாததற்கு நன்றி)
இவர்கள் காதலர் தினத்தையும் விட்டு வைக்கவில்லை. வெடி முத்துவை கூட்டி வந்து காதலர் தின விசேட "பன்ச்" சொல்ல வைத்தனர். அதுமட்டுமன்றி காதலியை சந்திக்க தாமதமாகப் செல்பவர்கள் தப்பிக்க சில வழிமுறைகளையும் வழங்கினர்.

அடுத்து இருபது புது இசை நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக நேயர்களின் வாழ்த்துக்களோடு சந்துருவும் வனிதாவும் அசத்திட்டீங்க.(நேற்று பெரிய அகப்பை வாங்கி வந்ததைப் பார்த்தா கலக்குவீங்க என்று பார்த்தா அசத்திட்டீங்க)

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காதலர்தின சிறப்பு நிகழ்ச்சியாக ஏன்? எதற்கு? எப்படி? என அடிக்கடி கேட்கும் பிரதீப் தந்த நிகழ்ச்சி அருமை. (எப்பதான் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல போறிங்க?)

அதன் பின் லோஷன் மற்றும் விமல் இணைந்து வழங்கிய அவதாரம் வெற்றியின் இரண்டாவது வருடத்தில் எடுத்திருக்கும் புது அவதாரம்.(நீங்க இந்த விளையாட்டு தனத்தை இந்த பிறந்த நாளிலும் விடமாட்டிங்களா? விளையாடுங்க விளையாடுங்க?)

அதற்கு பிறகு தான் காத்திருந்தது கலக்கல் திருவிழா. இரவு செய்தி அறிக்கையைத தொடர்ந்து வழமை போலத்தான் தொடங்கினார் சதீஷ், நானாட நீயாட என்று. விசேட நிகழ்ச்சி வரப்போகிறது என்று கூறிக்கூறியே எங்கள் நாடித்துடிப்பை அதிகரித்தவண்ணம் இருந்தார்.
அதன் பின் 9.30 அந்த கூட்டணி, சந்துருவும் விமலும் தங்கள் நக்கல் நையாண்டிகளுடன் அதிரடியாகத் தொடங்கினர். அதற்கு பின்னர் லோஷன், ஹிஷாம், பிரதீப், ரஜீவ், என எல்லா அறிவிப்பாளர்களும் ஒன்றாக கலையகத்தில் கூட விரிவாக்கல் பிரிவைச் சேர்ந்த ஜேசன், தினேஷும், செய்திப் பிரிவைச் சேர்ந்த ஜோ பென்சியும் ரஞ்சன் அருண் பிரசாத்தும் கலையகத்தில் ஒன்றாகினர்.

அடுத்து வெற்றியின் வெற்றிப்படிகளில் கடந்து வந்த சாதனைகளையும் வேதனைகளையும் எந்த ஒழிவு மறைவும் இன்றி நேயர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
பெண் அறிவிப்பாளர்கள் பூஜா மற்றும் வைதேகியும் தொலைபேசி வாயிலாக இணைந்து தங்கள் கலாட்டாக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
அண்மையில் வெற்றியில் இருந்து விடைபெற்று சென்ற சுபாஷும் தொலைபேசி வாயிலாக இணைந்து தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.(நீங்கள் வெளிநாடு செல்லும் பொது காற்றின் சிறகுகளில் மிதந்தா போகிறீர்கள் அல்லது நானாட நீயாட என ஆடிக்கொண்ட போகிறீர்கள்? அங்கேயும் தாம்தூமாக வாழ வெற்றியின் வாழ்த்துக்கள்.)
இதில் ஒவ்வொருவரும் தங்கள் சகாக்களை கிண்டல்கள் செய்ததுடன் எதையும் மறைக்காமல் உண்மைகளைப் பகிர்ந்து கொண்டனர். நிறைவாக எல்லா கலாட்டங்களும் நள்ளிரவில் களைகட்டி நிறைவு பெற்றது.
காதலர்களையும் மகிழ்விக்க நினைத்த வெற்றி இடையிடையே எங்கள் நேயர்களின் காதல் கதைகளை அவர்கள் குரலிலேயே ஒழிக்க விட்டு மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. நிகழ்ச்சிகளின் இடை இடையே காதலர் தின சிறப்பு பகுதிகளையும் வழங்கி வாழ்த்தியது.

வெற்றிக் குடும்பமும் நேயர்களும் இந்த பிறந்த நாளால் மகிழுந்து நிற்பதோடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டிலும் புதுவிதி செய்து வாழ்க்கைக்கு வெற்றி தருவோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வெற்றி,
வாழ்க்கைக்கு வெற்றி,
இனி ஒரு புது விதி செய்வோம்.

8 comments:

Sinthu said...

"இதில் எங்கள் முகாமையாளர் லோஷன் அறிமுகமாகும் போது "தலைபோல வருமா...." பாடலை ஒலிபரப்பி வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்"

செவியன் அண்ணா, லோஷன் அண்ணாவுக்கு அஜித்தைப் பிடிக்காதே........ எப்படி ஒப்புக் கொண்டாரு....? அப்படி அவங்களுக்கு ஒரு ரஹ்மான், இளையராஜா, பாலசுப்புரமணியம் அவர்களுடைய பாட்டு கிடைக்கவில்லையா?

Sinthu said...

"ஹிஷாமிடம் கண்டிப்பாக இதைபற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்)"
கேட்டிட்டாப் போச்சு

Sinthu said...

".(ஏனுங்கன்னா நீங்க விஜய் போலவோ?"
விஜயிம் பரம ரசிகன் என்று வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன........

Sinthu said...

முழுமையாகத் கேட்க முடியவில்லை...... கிஷாம் அண்ணா சொன்ன அந்த monitor இல்லாத computer இயும் வேலை செய்வதற்காக கதிரையில் இருக்காமல் கதிரையில் இருப்பதற்காக வேலை செய்தார்களாமே அதையும் எப்பவுமே மறக்க முடியாது.......
வாழ்த்துக்கள்.

துஷா said...

"விழிமூடி யாசித்தால்....." பாடல் (யூத் என்று சொல்லிக்கொண்டு இந்த பாட்டைக் கேட்பாராம்!......)"

நம்ம பிரதிப் அண்ணா எப்பவும் யூத்து தன்
அவர் இசை ரசனையில் என்று சொல்ல வந்தன்


"அடுத்ததாக வந்தார் நம்ம பில்லா சந்துரு "

அவ்வ்வ்வ்வ்வ் அவரா நீங்க


"வந்திட்டான்யா வந்திட்டான்யா காளை........." பாடல் ஒலித்தது"

மொத்தத்தில் அங்கு எத்தனை சிலம்பரசம் இருக்காங்க


"வெற்றியின் ஜூனியர் என சொல்லும் ஜெய்சனுக்காக "ஜூனியர் .."

அப்ப அவர்ருக்கு இன்னும ஒரு வயது கூட ஆகலையா

துஷா said...

"சதீஷ் அறிமுகமாகும் போது "ராமா ராமா......." ".(ஏனுங்கன்னா நீங்க விஜய் போலவோ?)

அட ஆமாங்கஅண்ணா சதிஷன் நீங்க தானே விஜய் மாதிரியே நடப்பிங்க சரிதானே எங்களுக்கு தெரியாததா (பூந்தோட்டத்தில்


""அழகுக் குட்டி....."

யாருங்க அந்த அழகு குட்டி ஒ வெற்றியை சொல்லுரிங்ககளா


"மலையாளக்குருவி......"

சேச்சி தமிழ் பராயுமோ........


"பூஜாவும் வைதேகியும் எங்கள் எல்லாருக்கும் பாட்டும் போட்டிங்க உங்களுக்கு ஏன் குட்டிப்பிசாசே பாடல் போடல?"

birth day அன்று ஆவாது அவங்க சகோதரங்களுக்கு ஒய்வு கொடுத்து இருப்பாங்க போல

துஷா said...

"செந்தூரனும் இணைந்து கொண்டது மகிழ்ச்சியான விடயம்"


லேட் ஆ வந்தாலும் அவரு தன் லேடேறேச்ட்

பூஜா அக்காவின் சொற்பொழிவு அருமை, விமல் அண்ணா தன் கதிரையால் (அந்த ஒற்றை கதிரை ) ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கார் போல, தொழில்நுட்ப பிரிவு தங்கள் விட்ட பிழைகளை வெளிப்படையாக ஒத்துக் கொண்டனர், ஜோ பென்சியும் ரஞ்சன் அருண் பிரசாத்தும் அதிகம் பேசமால் நைசா hi சொல்லிட்டு போயிட்டாங்க, இதுக்கு மேல கேட்கவில்லை

துஷா said...

"வெற்றிக் குடும்பமும் நேயர்களும் இந்த பிறந்த நாளால் மகிழுந்து நிற்பதோடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டிலும் புதுவிதி செய்து வாழ்க்கைக்கு வெற்றி தருவோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்."

வெற்றிக்கு எப்போதும் வெற்றியே.........
உண்மையில் இங்கு எங்களுக்கு ஓர் ஆறுதால் வெற்றியே வாழ்த்துக்கள் அண்ணாஸ்