உங்கள் நீண்ட நாள் இலட்சியம் நாளை நனவாகிறது.....
Thursday, May 13, 2010
வெற்றியில் ஒரு நட்சத்திர அறிவிப்பாளராக உங்களுக்கான வாய்ப்பு...
உங்கள் நீண்ட நாள் இலட்சியம் நாளை நனவாகிறது.....
Monday, December 28, 2009
வானலைகளில் பதினோராண்டுகள் ............
வானலைகளில் பதினோரா ண்டுகள் ............
பாராட்டி குவியும் விருதுகள் ................
நேயர்கள் மனதில் நீங்காத தனியிடம் .........
வானலையின் இளவரசன்.............
எங்கள் வானொலியின் அரசன்...............
வெற்றிகளின் சொந்தக்காரன் .................
கடவுளிடம் குரல் வளம் பெற்றீர்
கடமையில் கண்ணியம் கொண்டீர்
வார்த்தைகளில் நிதானம் கொண்டீர்
பலனாய் மக்களிடம் நல்ல பெயரை கண்டீர்
வாழ்த்துகளும் விருதுகளும் புதிதில்லை உங்களுக்கு .
இன்னும் பல விருதுகள் உங்களை தேடி வர எமது வாழ்த்துக்கள்........
இருந்தும் உங்கள் நலனில் அதிக ஆர்வம் கொண்டோரில் நானும் ஒருவன் என்பதால்
என் வாழ்த்துகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் எனும் நம்பிக்கையுடன் உங்கள் அன்புத்தம்பியின்
பணிவான வாழ்த்துக்கள்.........
Wednesday, December 16, 2009
இன்றிரவு ஆகாயமுகவரியில்.....

Thursday, December 3, 2009
எங்கேயும் எப்போதும் லோஷன்.

Monday, August 3, 2009
வெற்றி கால்பந்தாட்ட திருவிழா.
வெற்றி எப்.எம் இப்போது நாடளாவிய ரீதியில் நேயர்களோடு உறவாடிக்கொண்டிருக்கின்றது. அண்மையில் இடம்பெற்ற சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்வு மிகப்பெரிய ஒரு நிகழ்வாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத்தொடர்ந்து வெற்றி இன்னுமொரு வெற்றிப்படியில் ஏற தயாராகிவிட்டது.
Saturday, March 14, 2009
ஆச்சரியமும் அமானுஷ்யத்தில் நடந்த ஆச்சரியம்.
வெற்றிகரமாக வெற்றி வானொலியில் ஒலிபரப்பாகி வந்த ஆச்சரியமும் அமானுஷ்யமும் நிகழ்ச்சியில் கடந்த ஆறாம் திகதி ஒலிபரப்பான நிகழ்ச்சி சிலருக்கு கேட்டிருக்கிறது சிலருக்கு கேட்கவில்லை. ஏன் ஒரே வீட்டில் வெவ்வேறு அறைகளில் இருந்து கேட்டவர்களுக்கும் இதே அனுபவம் தான். என்ன நடந்தது யாருக்குமே தெரியவில்லை. நிச்சயமாக இது மனித சக்தியை மீறிய ஒரு செயல் தான்.இந்த நிகழ்ச்சியே ஒரு திகில் நிறைந்த நிகழ்ச்சியாக தான் வானலை வழியே வருகிறது. நம் வாழ்வில் நடக்கும் சில ஆச்சரியமான எம் சக்தியை மீறிய நிகழ்வுகள் தான் ஒலிபரப்பாகின்றன. அதே போன்ற ஒரு அமானுஷ்ய சக்தி தான் இந்த ஒலி பரப்பிலும் புகுந்து விளையாடி இருக்க வேண்டும். எங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.
அதனை பற்றிய பல விடயங்களோடு நேற்றைய ஆச்சரியமும் அமானுஷ்யமும் நிகழ்ச்சி உங்களை வந்தடைந்தது. அமானுஷ்ய சக்திகளின் ஆச்சரியமான நிகழ்வுகளுக்கு மத்தியிலும் உங்களை வந்தடையக் காத்திருக்கிறது.
Friday, February 13, 2009
வெற்றிப் பயணத்தில் ஒரு வருடம்.........
கடந்த ஆண்டு February மாதம் 14ம் திகதி பிறந்த உங்கள் வெற்றி FM வானொலி அதன் பின் தவழ்ந்து, எழுந்து நடந்து, வீறு நடையுடன் நாளை முதலாவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் வந்த சில சோதனைகளையும் சாதனைகளாக்கி இன்று இதயம் வென்று வெகு விரைவில் இமயம் வெல்ல வெற்றி நடை போடுகிறது.
A.R.V.லோஷனின் நேர்த்தியான வழிகாட்டலில் வலம்வரும் வெற்றி, நேயர்களின் ரசனைத்தன்மையை நாடிபிடித்தறிந்து அவர்களுக்கு என்ன பிடிக்குமோ,அவற்றை நிகழ்ச்சிகளாகத் தந்துகொண்டிருக்கிறது. வானலைவழியே தேன்மழை பொழிந்து வரும் உங்கள் வெற்றி, தன் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை எந்த நிகழ்ச்சியும் நேயர்களுக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தால் மாற்றவில்லை என்பது பெருமை கொள்ளும் விடயமே.
நாளை அதிகாலை பூபூக்கும் நேரத்தோடு ஆரம்பிக்கும் சிறப்பு நிகச்சிகள் நாள் முழுவதும் தொடர இருக்கிறது. அந்த நிகழ்ச்சிகள் சற்று வித்தியாசமாகவும் உங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தவும் இருக்கிறது. அந்த நிகழ்ச்சிகளை பற்றிய முன்னோட்டங்கள் இப்போது வானலை வழியே ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதன் சுவையையும் சுவாரஸ்யத்தையும் நாளை எங்கள் நேயநெஞ்சங்கள் உணரலாம்.
ஆர்ப்பாட்டமில்லாமல் மிக அமைதியான முறையில் எங்கள் நேயர்களுடன் இந்த நன் நாளில் கால் பதித்து கொண்டாட இருக்கிறோம். வெற்றியின் நேயர்கள் அனைவரும் வெற்றியின் பங்காளர்கள் எனவே அனைவருக்கும் எங்கள் நல்வாழ்த்துக்களுடன் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த ஒரு வருடமும் எங்களோடு இணைந்து வெற்றிக்கொடி கட்டும் நேயர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு கிட்டும் என்ற நம்பிக்கையோடு இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றோம்..................
வெற்றி எப்.எம்
வாழ்க்கைக்கு வெற்றி.
இனி ஒரு புது விதி செய்வோம்.
Thursday, January 8, 2009
விடியலும் கஞ்சிபாயும்


