Pages

Showing posts with label கொழும்பு. Show all posts
Showing posts with label கொழும்பு. Show all posts

Tuesday, December 1, 2009

உங்களை நெருங்கிவந்த வெற்றி.



தனியார் வானொலிகளில் வெற்றி எப்.எம் தனக்கென்ற ஒரு தனிப்பாதையில் நடை போட்டுவருகின்றது. கொழும்பில் 99.6 F.Mஇல் ஆரம்பித்த வெற்றிப்பயணம் இன்று இலங்கை முழுவதும் கொடிகட்ட ஆரம்பித்திருக்கின்றது. எத்தனையோ சவால்களை சந்தித்து எங்கேயும் எப்போதும் ரசிகர்களின் நாடித்துடிப்பறிந்து ஜொலித்து காட்டியது வெற்றி. மேல்மாகாணத்தில் ஆரம்பித்த குறுகியநாளில் நேய நெஞ்சங்களை கொள்ளையடித்த உங்கள் வெற்றி அதன் அடுத்த கட்ட விரிவாக்கலில் 101.5F.M இல் கண்டியை அடைந்து இன்னிசை மழை தூவியது.

கண்டி நேயர்களின் அளப்பரிய ஆதரவில் வெற்றியின் வெற்றி இன்னும் அதிகரித்தது. நல்ல நிகழ்ச்சிகளை நயம்படத்தந்த வெற்றி, தொடர்ந்து ஊவா,தென்கிழக்கில் 93.6 F.M இல் தன் அடுத்த பயணத்தை ஆரம்பித்தது. தொட்டதெல்லாம் துலங்க ஊவா தென்கிழக்கு வெற்றிக் கோட்டையாக மாறியது.

அடுத்தது எங்கே? யாருக்கு தெரியும் என அத்தனை நேயர்களும் கேட்டுக்கொண்டிருக்க நாளை எங்கே? என்ற கேள்வியுடன் 106.7 F.M இல் நாடு முழுவதும் என்னும் தொனியுடன் தன் கம்பீர அலையை பரப்பியது உங்கள் வெற்றி வானொலி. அதன் பின் யாழ் மண்ணில் 101.5F.M இல் தமிழ் வானொலி என்ற பெருமையுடன் களம் கண்டு யாழ் மக்களின் அன்பான ஆதரவில் அகம் மகிழ்ந்தது. இப்படி சென்ற இடமெல்லாம் ரசிகர் படை...
நாள்தோறும் அதிகரிக்கும் நேயர்கள்.....
ஆரம்பித்து இரண்டு வருடங்கள் கடக்கும் முன் பல சாதனைகள்.....

வெற்றி இலங்கை மண் முழுவதும் தன் ஒலியை ஒலிக்கவைக்க இன்றுமுதல் 93.9 F.M வாயிலாக வவுனியா,அனுராதபுரம்,திருகோணமலை, மன்னார்,பொலநறுவை,குருநாகல் இன்னும் பல பிரதேசங்களில் உங்கள் வாசல்கள் தோறும் வந்திருக்கின்றது.சிலபிரதேசங்களில் ஒலித்தெளிவின்மை இருப்பின் மிக விரைவில் அந்த தெளிவின்மையை சரிசெய்து உங்களை மகிழ்ச்சிப்படுத்துவோம். அதேநேரம் அலைவரிசையின் தெளிவு நிகழ்ச்சிகள் பற்றிய உங்கள் கருத்துக்கள் போன்றவற்றையும் வரவேற்கின்றோம். இதுவரை நாங்கள் உங்கள் ரசனை அறிந்து நிகழ்ச்சிகளை தந்தோம் இனியும் தருவோம் அதேபோல நீங்களும் எங்களுக்கு இதுவரை வழங்கிய ஆதரவை விட பலமடங்கு ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில்.

உலகளாவிய ரீதியில் நீங்கள் கேட்க :www.vettri.lk

உங்கள் மேலான கருத்துக்களுக்கு
SMS:0718996996
T.P:0114560383
Fax:0112304387

வெற்றி எப்.எம்
வாழ்க்கைக்கு வெற்றி.

Friday, March 20, 2009

அகதியான மக்களுக்கு அமைதியான வாழ்வு கேட்போம்!


நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு தங்கள் சொந்த வீடு வாசல்களை விட்டு நிர்க்கதியாக நலன்புரி நிலையங்களில் தங்கி வாழும் நம் சகோதரர்களுக்கு கை கொடுக்க அனைவரும் ஒன்றுபடுவோம்.


பல கஷ்டங்களுக்கு மத்தியில் தங்கள் உறவுகளை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் எங்கள் சொந்தங்களுக்கு The International Association of Lions Clubs Multiple District 306 Sri Lanaka உடன் இலங்கையின் அனைத்து Lions கழகங்களும் வெற்றி F.Mமும் இணைந்து ஏற்ப்பாடு செய்துள்ள இந்த கரம்கொடுக்கும் நிகழ்வில் உங்கள் கரத்தையும் இணைத்து பாலம் அமையுங்கள்.

கைக்குழந்தைகள் முதல் பெரியோருக்கு அத்தியாவசியமாகத் தேவையான பால் மா, புதிய ஆடைகள், கட்டில் விரிப்புகள், துவாய்கள், சவர்க்காரம் மற்றும் உலர் உணவுப்போருட்களோடு உங்களால் இயன்ற பண உதவியையும் செய்து நீங்களும் அவர்கள் வாழ்கையில் தாங்கிப்பிடிக்கும் தூண்கள் ஆகுங்கள்.


உங்கள் பொருட்களை இலக்கம் 38, Ward Place கொழும்பு-07 என்ற முகவரியில் கையளிக்கும் அதேநேரம் உங்கள் பண உதவியை இலங்கை Lions கழகத்தின் பம்பலப்பிட்டி Commercial வங்கியின் கணக்கிலக்கம் 1106013630 இல் வைப்புச் செய்யுங்கள்.
இம்மாதம் 31 திகதிக்கு முன் உங்கள் உதவிகளை வழங்குங்கள்.தமிழ் மக்களுக்கு கைகொடுத்து உதவ வெற்றியோடு ஒன்று சேருங்கள்.
மேலதிக விபரங்களுக்கு: vettri@voa.lk


வெற்றி எப்.எம்,
வாழ்க்கைக்கு வெற்றி.