Pages

Monday, April 20, 2009

வெற்றியின் கிரிக்கெட் திருவிழா

கடந்த சனிக்கிழமை எங்கள் வெற்றி நிறுவனத்துக்கு அருகில் இருந்த விளையாட்டு மைதானத்தில் VOA நிறுவன அனைத்து ஊழியர்களும் ஒன்று சேர்ந்தோம். ஏன் எதற்கு எப்படி என கேட்கிறியளா? எல்லாம் விளையாட்டுக்கு தான்.

நிறுவன ஊழியர்கள் எல்லோரும் ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து கிரிக்கெட் விளையாட தயாரானோம். வெற்றி நிகழ்ச்சிப்பிரிவு மற்றும் செய்திப்பிரிவை சேர்ந்தவர்களும் ஒன்றாக சேர்ந்து ஒரு அணியாக விளையாட களம் புகுந்தோம். அணிக்கு ஆறு overகள் அடங்கிய இந்தப்போட்டியில் அணிக்கு எட்டு பேர் பங்கு பற்றினர்.
முதல் போட்டி எங்கள் சகோதர வானொலியான சியத செய்திப்பிரிவைச் சேர்ந்த அணியினருடன் மோதினோம். நாணய சுழற்ச்சியில் வென்ற எங்கள் தலைவர் லோஷன் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சியத செய்திப்பிரிவை சேர்ந்தவர்கள் 68 ஓட்டங்களை குவித்தனர். பந்து வீச்சில் அருண் 2 விக்கெட்டுக்களையும் லோஷன், விமல், சந்துரு, விஜயகுமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வெற்றி அணியினர் விமல் மற்றும் விஜயகுமார் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் வெற்றி இலக்கை அடைந்தனர். இதில் விமல் ஓட்டங்களையும் விஜயகுமார் ஓட்டங்களையும் பெற்றனர்.
அதன் பின் அரை இறுதியில் நிர்வாகப்பிரிவுடன் மோதிய வெற்றி அணி அந்த அணியை துவைத்தே எடுத்து விட்டது. முதலில் துடுப்பெடுத்து ஆடிய நிர்வாகப்பிரிவு அணி 19 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. விமல், விஜயகுமார், லோஷன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். விமலின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் இந்தப்போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து நின்றது வெற்றி.
இறுதிப்போட்டியில் சகோதர வானொலியான வானொலியின் நிகழ்ச்சி பிரிவு மற்றும் செய்திப்பிரிவினர் ஒன்றாக இணைந்து களம் புகுந்த அணியினரை எதிர்த்து களம் கண்ட வெற்றி அணியினர் ஓட்டங்களை குவிக்க பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வெற்றி அணி ஊடங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
சந்துரு, ரஜீவ், பென்சி,ஹிஷாமின் அபாரமான களத்தடுப்பு என ஒரு சிறந்த அணியாக இந்த போட்டியில் பிரகாசித்த வெற்றி அணியினருக்கு நிறைவில் நடைபெற்ற பரிசளிப்பில் நிறுவன உரிமையாளர், மற்றும் உயர் அதிகாரிகளால் பாராட்டு கிடைத்தது.
மொத்தத்தில் இந்த போட்டி சில சில சுவையான சம்பவங்களுடன் நடந்தேறியது.

No comments: