Pages

Showing posts with label Attack. Show all posts
Showing posts with label Attack. Show all posts

Friday, August 6, 2010

எரிந்த சாம்பலில் இருந்து மீண்டு வெற்றி FM செய்திகள் மீண்டும்.




கடந்த மாதம்(July) 30ம் திகதி எமது நிலையத்தின்(Voice of asia network pvt. ltd) மீது காடையர்கள் சிலரால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு எமது செய்திப்பிரிவு தீக்கிரையாகி முற்றாக செயலிழந்து போனதால் ஒரு வாரம் எமது பிரதான செய்தியறிக்கைகள் இடம்பெறவில்லை. 


ஏற்பட்ட கொடூரமான சம்பவத்திற்கு பிறகு அன்பு நண்பர்கள் கொடுத்த நம்பிக்கையோடு நாம் எமது செய்திப்பிரிவை மீண்டும் கட்டியெழுப்பியிருக்கிறோம். இன்று முதல் நடுநிலையான உண்மையான எமது பிரதான செய்தி அறிக்கைகள் வழமையான நேரத்தில் வரும். 


வெற்றி FM பிரதான செய்தி அறிக்கை நேரங்கள்.


காலை 06.30
மதியம் 12.00
மாலை 06.00
இரவு 09.00

Friday, July 30, 2010

வெற்றி செய்திப்பிரிவு தீக்கிரை

எமது வெற்றி வானொலி நிலையம் (voice of asia network pvt ltd.) இனம் தெரியாத காடையர்களால் சேதப்படுத்தப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது...

இன்று அதிகாலை 1.20அளவில் 10இற்கும் மேற்பட்ட காடையர்களால் எமது நிறுவனம் தாக்குதலுக்குள்ளாகியது. எமது செய்திப்பிரிவு முற்றாக செயலிழந்து போயுள்ளது.

எமது செய்திப்பிரிவைச்சேர்ந்த ரஜனி மற்றும் லெனின் தாக்கப்பட்டதுடன் நிறுசனத்தின் பாதுகாப்பு அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செயலிழந்து போயிருக்கும் வெற்றி செய்திப்பிரிவு விரைவில் இயங்குவதற்கான அத்தனை பணிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.