புது வருடத்தில் புது விதி செய்ய வந்திருக்கும் வெற்றி FMமின் புது வரவுகள் தான் சதீஷ் மற்றும் வனிதா.
எங்கள் தேடலில் கிடைத்த இந்த இருவரும் ஒரு சில மாத பயிற்சியின் பின் 01.01.2009 இல் தங்கள் அறிமுகத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.
எங்களின் நேர்முகத்தேர்வுகளின் பின் பயிற்சியில் இணைந்து கொண்ட இவர்கள் பயிற்சிகாலத்தில் மூத்த அறிவிப்பாளர்களின் நேர்த்தியான பயிற்சியினால் குறுகியகாலத்திலேயே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நிலைமைக்கு உயர்ந்தனர்.
கடின உழைப்பு, தேடல் நிறைந்தவர்களால் தான் இந்த துறையில் நிலைக்க முடியும் என்பதை உணர்ந்த இருவரும் இவற்றில் தங்களை ஈடுபடுதிகொண்டனர்.
வார இறுதி நாட்களில் நானாடநீயாடவில் சுபாஷ் உடன் ஆரம்பமான சதீஷின் வானொலி பயணம் விமலுடன் அமரகானங்கள், ஒருசொல் ஒரு கானம், சந்துருவுடன் வாங்க நீங்க அதன் பின் பூஜாவுடன் குதூகலக்குவியல் என சென்று தனியாக பகல் பந்தி மற்றும் காற்றின் சிறகுகள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நிலைமைக்கு உயர்ந்தது.
இதேபோல சந்துருவுடன் இருபது புது இசை நிகழ்ச்சியின் மூலம் வானலையில் தன் குரலையும் தவழவிட்ட வனிதா வேகம் விவேகம் நிகழ்ச்சியை வைதேகியுடன் இணைந்து சிறப்பாக தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார்.
இந்த புதுவரவுகளும் வெற்றியோடு இணைந்து புது விதி படைக்க காத்திருக்கிறார்கள். இந்த இரண்டு புதியவர்களையும் புது வருட இன்ப அதிர்ச்சியாக உங்களுக்கு அறிமுகப்படுத்தியத்தில் வெற்றிக்குடும்பம் பெருமையடைகிறது.
வெற்றிக்கும் ஏனைய அறிவிப்பாளர்களுக்கும் வழங்கிய ஆதரவை இந்த புது வரவுகளுக்கும் வழங்க வேண்டும் என எம் அன்பான நேயர்களை கேட்டு கொள்கின்றோம்.
1 comment:
"வெற்றிக்கும் ஏனைய அறிவிப்பாளர்களுக்கும் வழங்கிய ஆதரவை இந்த புது வரவுகளுக்கும் வழங்க வேண்டும் என எம் அன்பான நேயர்களை கேட்டு கொள்கின்றோம்."
என்ன இப்படி சொல்லிட்டீங்க. வெற்றி கூட்டத்தில் இணைந்திட்டான்களே இனி அசத்துவாங்க என்று நம்புகிறோம். லோஷன் அண்ணா இன்று ஒரு சிறப்பு அம்சம் இருக்கிறது என்று இல் சொன்னவுடன் சதீஷ் அண்ணாவும் வனிதா அக்காவும்(முன்பே தெரிந்தவர் தானே இந்த அக்கா) இன்று அறிமுக படுத்தப்படுவாங்க என்று நினைத்தேன்.
Sinthu
Bangladesh
Post a Comment