Pages

Monday, April 21, 2008

IPL கிரிக்கெட் போட்டிகள்!

இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்றுவரும் IPLகிரிக்கெட் போட்டிகளின் ஸ்கோர் விபரங்களை உடனுக்குடன் - பந்துக்குப் பந்து நேயர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது வெற்றி எப்.எம்.

20- 20 கிரிக்கெட் போட்டிகள் பரபரப்புக்குப் பெயர்பெற்றவை. IPL போட்டிகளில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நட்சத்திர வீரர்கள் விளையாடுவதால் பரபரப்புக்குப் பஞ்சமே இல்லை. எனவே இந்தப் போட்டிகளின் ஸ்கோர் விபரங்களை தொடர்ச்சியாக வழங்கிவரும் வெற்றி எப்.எம் நேயர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றுவருகிறது.

வெறுமனே ஸ்கோர் விபரங்களை மாத்திரம் வழங்காது போட்டிகள் பற்றிய முழுவிபரங்கள், எதிர்வுகூறல்கள் என்று வெற்றி எப்.எம் வழங்கிவரும் தகவல்களும் நேயர்களிடத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Monday, April 14, 2008

வெற்றி எப்.எம். ஐ தொடர்புகொள்ள -

வெற்றி எப்.எம்.இன் எஸ்.எம்.எஸ். இலக்கம் : 0094 718 996 996
மின்னஞ்சல்: vettri@voa.lk
அஞ்சல் முகவரி:
Vettri FM,
P.O.Box No. 1011,
Colombo,
Sri Lanka.

வெற்றியின் விளையாட்டுத்திடல்!!!

ஆரம்பமாகிறது - வெற்றியின் விளையாட்டுத்திடல்!!!
14ஆம் திகதி திங்கட்கிழமை முதல் விளையாட்டுத் தகவல்களைத் தொகுத்துத் தரும் வெற்றியின் விளையாட்டுத் திடல் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.

தினமும் இரவு 8.00 மணிக்கு வெற்றியின் விளையாட்டுத்திடலை நேயர்கள் கேட்டு மகிழலாம் என்ற தகவல் எமக்குக் கிடைத்திருக்கிறது.

Saturday, April 12, 2008

பேப்பர் தம்பி!!!

வாரநாட்களில் காலையில் தினமும் 7.05க்கு பேப்பர் தம்பி (முன்னாள் பேப்பர் பொடியனேதான்!!) பத்திரிகைகளை அலசும் நேரம் - வெற்றியின் காலைநேர நிகழ்ச்சியின் சிறப்புக்களில் ஒன்று.

செய்திகளை வாசித்துவிட்டு பேப்பர் தம்பி அடிக்கும் கொமென்ட்டுகள் கலகல!!!

சிங்கப்பூருக்கு பறக்கும் வாய்ப்பு!

வெற்றி எப்.எம் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாகக் கேட்கும் நேயர்களுக்கு சிங்கப்பூருக்கான விமானப் பயணச்சீட்டுக்களை வெல்லும் வாய்ப்புக் கிடைக்கவிருக்கிறது.
வெற்றியில் தினமும் கேட்கப்படும் 3 கேள்விகளுக்கு குறுஞ்செய்திமூலம் பதிலளிக்கும் நேயர்களில் தினமும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு விமானப் பயணச்சீட்டு பரிசாக வழங்கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது. இந்த அறிவிப்பானது நேயர்கள் மத்தியில் பரபரப்பை உண்டுபண்ணியிருப்பதாக அறியமுடிகிறது.