Pages

Showing posts with label வவுனியா. Show all posts
Showing posts with label வவுனியா. Show all posts

Friday, December 4, 2009

வவுனியாவில் வெற்றிக்கிண்ணம்.


உங்கள் இல்லங்கள் தோறும் இனிய இசை பரப்பி உங்கள் இதய வானொலியாக வலம் வரும் உங்கள் வெற்றி எப்.எம் வவுனியாவில் கால்பதித்தவுடனேயே பிரமாண்டமான கால்பந்தாட்ட தொடர் ஒன்றை நடத்த தயாராகிவிட்டது. வெற்றி கப் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த கால்பந்து திருவிழா இம்மாதம் முழுவதும் வவுனியா கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கின்றது.

கடந்த எட்டு வருடங்களாக வவுனியா வைரவபுளியங்குளம் Youngstars விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடாத்தி வருகின்றது. வவுனியா மண்ணில் இரவுநேரத்தில் மின் ஒளியில் கண்கவர் விருந்தாக கால்பந்தின் களமாக அமைந்துள்ள வைரவபுளியங்குளம் Youngstars விளையாட்டு மைதானத்தில் வழமைபோல இம்முறையும் பன்னிரண்டு கழகங்களும் ஏழு பாடசாலை அணிகளும் களம் காண இருக்கின்றன. கடந்த மூன்று வருடங்களாக நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இரவுப்பொழுதில் இந்த போட்டிகளை நடத்தமுடியாமல் போய் இருந்தாலும் இம்முறை வெற்றியோடு இணைந்து வெற்றிகரமாக நடத்த Youngstars கழகம் தயாராகிவிட்டது.

இம்மாதம் 7ம திகதி தொடக்கம் 27ம திகதி வரை மாலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் போட்டிகள் இரவுப்பொழுதிலும் அனல் பறக்க இருக்கின்றது. 93.9எப்.எம் வாயிலாக வவுனியா மண்ணில் தேனிசை மழை பொழியும் வெற்றி எப்.எம் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி சிறப்பிக்க காத்திருக்கின்றது. இலவசமாக் கால்ப்பந்தாட்ட திருவிழாவில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
வெற்றி எப்.எம்
வாழ்க்கைக்கு வெற்றி