Pages

Tuesday, March 25, 2008

முழுமையான நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கவிருக்கிறது

வெற்றி எப்.எம் இப்போது முழுமையாக பாடல்களை வழங்கிக்கொண்டிருக்கிறது. மிக விரைவில் முழுமையான நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை காலை வேளையில் பத்திரிகைப் பார்வை விளையாட்டுத் தொகுப்புக்கள் மற்றும் நகைச்சுவை போன்றன மெல்ல மெல்ல இடம்பிடித்துவருவதையும் கேட்கமுடிகிறது.

Thursday, March 6, 2008

இலங்கை தமிழ் வானொலி வரலாற்றில் புதிய உதயம்.


ஓரிரு வாரங்களில் தனது உத்தியோகபூர்வ ஒலிபரப்பை ஆரம்பிக்கவுள்ள வெற்றி எப் எம் பரீட்சார்த்த ஒலிபரப்பின் மூலம் தற்பொழுது நேயர்களை கவர்ந்து வருகிறது. பாடல்களைத் தொடர்ச்சியாக ஒலிபரப்பும் அதேவேளை, முக்கிய கிரிக்கெட் போட்டி நடைபெறும்வேளைகளில் ஸ்கோர் விபரங்களை தமிழில் உடனுக்குடன் வழங்கியும் நேயர்களை உற்சாகப்படுத்திவருகிறார்கள். பரீட்சார்த்த ஒலிபரப்பின் அடுத்த கட்டமாக காலைவேளையில் அன்றைய தினசரிப் பத்திரிகைகளின் மீதான கண்ணோட்டத்தையும் அடுத்த சில தினங்களில் ஆரம்பிக்கவிருப்பதாகவும் தெரியவருகிறது.

Wednesday, February 20, 2008

காதோரம் வலைப்பூவில் வெற்றி எப் எம்


காதோரம் இணைப்பில் வெற்றி எப் எம் பற்றிய பதிவொன்று உள்ளது.இது தொடர்பாக வெற்றி எப் எம் நிர்வாகம் கவனத்திற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

காதோரம் தளத்தில் பதியப்பட்ட செய்தி

வெற்றி எப் எம் - உத்தியோகபூர்வ ஒலிபரப்பு எப்போது?
99.6 இல் பரீட்சார்த்த ஒலிபரப்பை கொழும்பில் ஆரம்பித்திருக்கும் புதிய தமிழ் வானொலியான வெற்றி எப் எம் நல்ல பாடல்களை தொடர்ச்சியாக ஒலிபரப்பி வருகிறது. ஆயினும் அவர்களது அலைவரிசை பலவீனமாக இருப்பதால் கொழும்பு பெரும்பாக பகுதிகளில் கூட வெற்றி எப் எம் வானொலியை தெளிவாகக் கேட்பது சிரமமாக உள்ளது. குறிப்பாக பகல் நேரங்களில் 99.6 அலைவரிசையில் வேறு வானொலிகளின் அலைவரிசைகளின் இடையூறுகள் மிக அதிகம்.
இத்தகைய இடையூறுகளை களைந்து வெற்றி எப் எம் வெற்றி பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Saturday, February 16, 2008

இணையதளத்தில் ஓரங்கட்டப்படும் ஹிந்தி


உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்று என்ற சிறப்பை பெற்றுள்ள ஹிந்தி, இணையதள பயன்பாட்டில் ஓரங்கட்டப்பட்டு வருவதாக, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகில் பேசப்படும் 6,000 மொழிகளில் 12 மட்டுமே இணையதளங்களில் ஏறக்குறைய முழு அளவிற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதில் ஆங்கிலம் முதலிடத்தில் இருப்பதாகவும், இன்டெர்நெட் வேர்ட் ஸ்டேட்ஸ்.காம் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் உள்ள பிராந்திய மொழிகளில் இணையதள பயன்பாட்டு வளர்ச்சி, வரையறுக்கப்பட்ட விகிதத்திலேயே உள்ளன. இந்திய இணையதள பயன்பாட்டாளர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலத்தை பெரிதும் பயன்படுத்துகின்றனர்.

உலகின் முதல் 5 இடங்களில் ஒன்றாகத் திகழும் ஹிந்தி மொழி, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களிலும் பேசப்படுகிறது. எனினும் இணையதள பயன்பாட்டில் சிறப்பான இடத்தை இது பெறவில்லை என்று ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தவம் - வடிவேல் நகைச்சுவை

அருண் விஜய், அறிமுகங்கள் வந்தனா, அர்பிதா, வடிவேலு, ஜனகராஜ், வெ.ஆ.மூர்த்தி, வாசு விக்ரம், கலைராணி நடிப்பில் ரவியின் ஒளிப்பதிவில் டி. இமான் இசையில் ஷக்தி பரமேஷ் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஸ்ரீராம் பிலிம்ஸ் (பி) லிட்.