Pages

Thursday, December 31, 2009

வெற்றி FM குடும்பத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!




2010 புத்தாண்டிலும் புதுமைப்படைக்கப்போகும் உங்கள் வெற்றி வனொலியின் அறிவிப்பாளர்கள் என்றும் வெற்றிக்கு வெற்றியாய் இருக்கும் அன்பு நேயர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார்கள்.


வெற்றியின் அன்பு உறவுகளே..
பரபரப்பான பல்வேறு மாற்றங்கள்,திருப்பங்கள்,அனர்த்தங்கள் தந்த ஓராண்டாக 2009 எம்மிடமிருந்து விடைபெற்று 2010 புதிய நம்பிக்கை,எதிர்பார்ப்புக்களோடு உதயமாகிறது.

உங்கள் வெற்றி 2009 இல் ஏராளமான புதிய நகர்வுகள், பாரிய முன்னேற்றங்கள் கண்டுள்ளது.

இவையெல்லாம் உங்கள் அன்பினாலும்,அபிமானத்தினாலும் தான் சாத்தியமானது...
இந்தப் புதிய ஆண்டிலும் வெற்றியின் வெற்றிப் பயணத்தில் உங்கள் ஆசிகளும் ஆதரவுகளும் எங்களுக்குப் பக்கபலமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் அன்பு நெஞ்சங்கள் உங்கள் அனைவருக்கும் இனிய 2010 புது வருட வாழ்த்துக்கள்..

வெற்றி - 2010 இல் நம்பிக்கையின் புது வெற்றி..

உங்கள் அன்பின்
A.R.V.லோஷன்

2009ம் ஆண்டு யுத்தம் வைரஸ் காய்ச்சல் இயற்கை அழிவுகள் என்று பல கவலை தரும் நிகழ்வுகள் நடந்திருந்தாலும்.

கவலைகளையும் கடந்த கால கஷ்டங்களையும் பிரிந்து போகும் 2009ம் ஆண்டுக்கே சொந்தமாக கொடுத்து வழி அனுப்பி வைப்போம்.


புதிய இலக்குகளுடன் கடந்த ஆண்டில் பெற்ற நல்ல பாடங்களின் உதவியுடனும் இந்த ஆண்டை புதிதாய் ஆரம்பிப்போம்.


மலர்ந்திருக்கும் 2010ம் ஆண்டு அனைத்து விதத்திலும் சகலதும் கிடைக்கும் வருடமாக வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.


சந்தோசம் விண்முட்ட, சொந்தங்கள் இனிப்பூட்ட
வந்தாடும் வசந்தங்கள் வாழ்த்திட
புத்தாண்டில் புதிய வழி காட்டட்டும்.

2010ம் ஆண்டு சந்தோஷங்களையும் வெற்றிகளையும் தரட்டும். ஏமாற்றங்கள் தோல்விகள் ஏற்படுகின்ற நேரங்களில் உங்களுக்கு கிடைத்த வெற்றிகளையும் சந்தோஷங்களையும் இனி கிடைக்கப்போகும் சந்தோஷங்களையும் வெற்றிகளையும் நினைத்து வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷத்துடனும் நம்பிக்கையுடனும் வெற்றி நடைபோட வாழ்த்துக்கள்.

வாழ்க்கை எமக்காக எம் சந்தோஷத்துக்காக நான் என்றும் உங்கள் அன்பின் ச.விமல்.



வெற்றி FM நேயர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த புதுவருட வாழ்த்துக்கள்.


இரண்டாயிரத்துப் பத்து இனிமையானதாய் அமையட்டும்.
உலகெங்கும் சூழ்ந்திருக்கும் போர் மேகங்கள் விலகி அமைதியின் வெளிச்சம் விழட்டும்.
தன்னம்பிக்கை வலுப்பெறட்டும்.
ஒடுக்கப்பட்ட மக்களது உரிமைகள் கிடைக்கட்டும்.
மனிதத்துக்குரிய மதிப்பை ஒவ்வொருவரும் உணர்ந்து மற்றவருக்கு அளிக்கட்டும்.


'அன்பு' என்ற பதத்தின் அர்த்தத்தை உணரும் - உணர்த்தும் ஆண்டாக இந்த இரண்டாயிரத்துப்பத்து விளங்கும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் அனைவருக்கும் எனது புதுவருட வாழ்த்துக்கள்.
-பிரதீப்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் எல்லாம் ஆண்டுகளின் நம்பிக்கையின் ஒரு மீள் பதிவு.........



புத்தாண்டு என்றாலே மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, நம்பிக்கை.
பழைய ஆண்டின் விரும்பத்தகாத நிகழ்வுகளோ, கசப்போ இந்த ஆண்டும் தொடரக்கூடாது என்பதே அனைவரின் ஆசை.
அந்த ஆசைகள் அனைத்தும் இந்த ஆண்டு நிச்சயமாக நிறைவேறும்.


வெற்றியின் நண்பர்களுக்கு இனிய புது வருட வாழ்த்துக்கள்.




2009ம் ஆண்டு எதை தந்தது?


இனிப்பாக இருந்தால் எடுத்துக்கொள்வோம்.

கசப்பானவையாக இருந்தால் கைவிடுவோம்.



மலரும் 2010ம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி மிக்க ஆண்டாக அமைய எனது இனிய புதுவருட வாழ்த்துக்கள்.



அனைவருக்கும் இனிமையான 2010இன் புதுவருட வாழ்த்துக்கள்....



இந்த வருடத்தில் உங்கள் அனைவரினதும் கனவுகள் நனவாக வாழ்த்துகிறேன்...
உங்கள் கனவுகள் நனவாக என்றுமே உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் உங்கள் பெற்றோரை என்றுமே சந்தோஷப்படுத்துங்கள்....

வெற்றியின் இனிமையான புதுவருட வாழ்த்துக்கள்

வைதேகி ஸ்ரீபவன்


காயங்களை மறந்து காலத்தை வென்று
சோதனை முயற்சிகளில் சாதனை படைத்து
மன மகிழ்வுடன் மனைகள் விளங்கிட
வாழ்க்கையின் வெற்றியில் வெற்றியும் கைகோர்க்கும் என்ற நம்பிக்கையில்.

என் பிரியமானவர்களுக்கு உங்கள் ப்ரியமானவனின் வாழ்த்துக்கள்.



2008ல் வெற்றியின் உறவில் புது வரவாகி, வானலையில் இனிய தோழி வனிதாவாக அறிமுகமாகி ஒரு வருட பூர்த்தியை கொண்டாடும் இந்நாளில் 2010ம் ஆண்டையும் வெற்றியோடு வெற்றியின் நேயர்களோடு வெற்றிநடை போட ஆரம்பிக்கிறேன்.



பிறந்திருக்கும் புது வருடம் பூமியில் புது வசந்தத்தை விதைக்கட்டும்.
பார் எங்கும் சந்தோஷ சாரல் வீசட்டும்.
மலர்ந்திருக்கும் புத்தாண்டு மானிட வாழ்வில் சுபீட்சத்தையும் மகிழ்வினையும் அள்ளித்தர இனிய தோழியின் புத்தாண்டு வாழ்த்துக்கள் வெற்றியின் நேயர்களுக்கு உரித்தாகட்டும்





புத்தம் புது ஆண்டு 2010
புதிதாக நீ மலர்வாய்.
நீ வித்தாக தளைத்து விடியலைக் காட்டி முத்தான ஓர் ஆண்டாய் முத்திரை பதித்திடுவாய்.


மலர இருக்கும் 2010 ஆம் ஆண்டு உங்கள் அனைவருக்கும் இனிய ஆண்டாய் மலர வாழ்த்துக்கள்.
நான் உங்கள் அன்பின் ர.டினேஷா



சுவாசத்தில் நுழைந்து இதயத்தோடு இணைந்து உதிரத்தோடு கலந்து அன்பு என்னும் நீரூற்றில் உள்ளங்களோடு இணைந்து கொண்டாடுவோம் புதுவருடம்...

உங்கள் அன்பின் ஆர்.ரஜீவ்

பிறக்கப்போகும் இப் புது வருடத்தில் எம் மனங்களில் ஒரு தீபம் போல என்றும் நம் வாழ்வு பிரகாசிக்க மனமகிழ்ந்து வாழ்த்துகின்றேன்.
பாபு

கடந்த வருட சோக சுவடுகளை வென்று
ஒரு புத்தம் புதிய வருடத்திற்குள் நுழைகின்றோம்........ பிறந்திருக்கும் இப்புதிய அத்தியாயம் சந்தோசங்களை மட்டும் அள்ளிதரட்டும். நேயர்களுக்கு எமது இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
Firnas

No comments: