Pages

Monday, August 3, 2009

வெற்றி கால்பந்தாட்ட திருவிழா.

வெற்றி எப்.எம் இப்போது நாடளாவிய ரீதியில் நேயர்களோடு உறவாடிக்கொண்டிருக்கின்றது. அண்மையில் இடம்பெற்ற சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்வு மிகப்பெரிய ஒரு நிகழ்வாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத்தொடர்ந்து வெற்றி இன்னுமொரு வெற்றிப்படியில் ஏற தயாராகிவிட்டது.

இலங்கையில் அதிகம் பேர் விரும்பும், தமிழ் மக்கள் விரும்பி ரசிக்கும் கால்பந்து விளையாட்டின் புதிய பரிமாண வளர்ச்சியில் பிறந்த Futsal கால்பந்தாட்ட கிண்ண தொடர் ஒன்றை வெற்றி எப்.எம் இப்போது ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை மண்ணில் முதன் முறையாக பிரமாண்டமாக இந்த தொடரை வெற்றி ஆரம்பித்து வைக்கின்றது.

பலர் கால்பந்தாட்ட விளையாட்டுக்கு அனுசரணை வழங்க பின் நிற்கும் இந்த நிலையில் வெற்றி கால்பந்தாட்டத்தின் போட்டிகளை பிரபல்யப்படுத்தும் நோக்கிலும், பல புதிய வீரர்களையும் இனங்காணவும் உதவும் வகையில் இந்த போட்டிகள் ஆரம்பமாகப்போகின்றன. பிரபல பாடசாலைகள், விளையாட்டு கழகங்கள், இவர்களோடு நாற்பது வயதை தாண்டிய விளையாட துடிக்கும் வீரர்களையும் ஊக்குவிக்கும் வண்ணம் இந்த போட்டிகள் நடைபெறப்போகின்றன.

இந்த போட்டிகளில் இனம்,மதம்,மொழி களைந்து சகோதரமொழியை சேர்ந்த பல வீரர்களும் விளையாட உள்ளமை குறிப்பிடத்த்தக்கது. அணிக்கு ஐவர் கொண்ட முப்பத்தியிரண்டு பாடசாலை அணிகள், நாற்பத்தியிரண்டு கழகங்கள், இவற்றோடு பதினாறு நாற்பது வயதைக் கடந்தோரைக் கொண்ட அணிகள் களமிறங்கி வெற்றிக்காக போராடப்போகின்றன. வெற்றி எப்.எம் மிகுந்த பொருட்செலவில் பதக்கங்கள், பணப்பரிசுகள், வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வீரர்களை மகிழ்விக்கப்போகின்றது.

தொடர்ந்து இருபத்தைந்து வருடங்களுக்கு வெற்றி வழங்கும் இந்த தொடர் உங்களை நாடி வரப்போகின்றது. இந்த நீண்ட காலத் திட்டம் நம் இலங்கை திருநாட்டில் வரும் காலத்தில் சர்வதேச அணியில் பல திறமையான வீரர்களை சேர்த்துக்கொள்ள வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
எந்த வித கட்டணமும் இன்றி இலவசமாக நீங்கள் இந்த போட்டியை கண்டு களிக்க முடியும். City League கால்பந்தாட்ட மைதானத்தில்(கொழும்பு-௦02) நடைபெற இருக்கும் இந்த போட்டித் தொடர்கள் கிரிக்கெட்டில் போட்டி ஏற்படுத்திய புரட்சியை ஏற்படுத்தப்போகின்றன. வெறும் பதினைந்து நிமிடங்கள் கொண்ட இந்த போட்டியில் ஒரு பந்துடன் பத்து வீரர்கள் மோதும் கண்கொள்ளா காட்சியைக் காண நீங்களும் வாருங்கள். வெற்றியோடு நீங்களும் வெற்றிநடை போடுங்கள்.

இந்த நிகழ்வு நடைபெறும் கால்ப்பந்தாட்ட மைதானத்துக்கான வரைபடம்.

Tuesday, July 14, 2009

சூப்பர் சிங்கர்ஸ் வெற்றியோடு இலங்கையில்......

உங்கள் வெற்றி வானொலி உங்களுக்காக படைக்க இருக்கும் மாபெரும் கலைவிருந்து இம்மாதம் பத்தொன்பதாம் திகதி நடைபெற இருக்கிறது. பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் மாலை ஆறு முப்பத்தொன்றுக்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்வில் பல பிரபலங்கள் பங்குகொண்டு உங்களை மகிழ்விக்க காத்திருக்கின்றனர். இந்தியாவின் விஜய் டி.வி சூப்பர் சிங்கர்ஸ் புகழ் அஜீஸ், ரவி,ரேனு,ரஞ்சனி ஆகியோர் உங்களை தங்கள் காந்தக் குரலினால் மகிழ்விக்க வருகின்றார்கள். மிமிக்கிரி மற்றும் நடனம் என சிரிப்பினால் உள்ளங்களை அள்ளிய சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் டி.வியின் யார் அடுத்த பிரபுதேவாவில் அடுத்த பிரபுதேவா என பட்டம் வென்ற ஷெரிப் தனது புயல் நடனத்தால் கலங்கடிக்க இருக்கின்றார்.

அதுமட்டுமில்லாமல் இலங்கையின் புகழ் பெற்ற இக்பால் ஜெகன் மற்றும் ரத்னம் ரத்னதுரை இவர்களோடு சித்தாராவின் இன்னிசை மழையில் உங்களை நனையவைக்க உங்கள் வெற்றிக் குடும்பமும் காத்திருக்கின்றது. இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை ஆகின்றன. வரும் ஞாயிறு மாலை நடைபெற இருக்கும் இசைத்திருவிழாவில் பங்கு பெற அனைவரையும் அழைக்கின்றோம்.

டிக்கெட்டுகள் கிடைக்குமிடங்கள்
கொட்டாஞ்சேனை : Naveen ceamic T.P 2345 197-8 Orient Pharmacy T.P 2336 451 மெயின் வீதி : Ganesh Textiles T.P 2325 128 செட்டியார் தெரு : Sri Maithili Jewellers T.P 2434 490 வெள்ளவத்தை : Swarnaa Gold House T.P 2501 789
Emi Collection T.P 2595 567
Cd World T.P 2554 481
Hotel New Vivekaananda T.P 5646 245
Wellawatte Pharmacy T.P 2363 957, 2552 670

Friday, July 3, 2009

வாழ்க்கைக்கு வெற்றி தரும் உங்கள் வெற்றி எப்.எம் இப்போது நாடு பூராகவும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இதுவரை காலமும் ஒருகுறிப்பிட்ட பகுதியிலேயே ஒலித்து வந்த வெற்றி ஒலித்து ஆரம்பித்த காலம் முதலே மக்கள் மனதில் நுழைந்துவிட்டது.

99.6 F.M, 93.6F.M, 101.5F.M என்ற அலை வரிசைகளை தொடர்ந்து இன்று 106.7F.M ஊடாக நாடு பூராகவும் உங்கள் வீடுகளை நாடி வந்திருக்கின்றது. இந்த சந்தோசமான விடயத்தை உங்கள் நண்பர்கள், உறவுகள், தெரிந்தவர்களுடன் பகிர்வதோடு, விஸ்தரிக்கப்பட்டிருக்கும் வெற்றியின் அலைவரிசையின் தெளிவு,தெளிவின்மை மற்றும் வெற்றி எப்.எம் பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
T.P:0114560383
SMS:0718996996
E-mail:vettri@voa.lk
இந்த நேரத்தில் வெற்றியின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் எங்கள் நேயர்களுக்கு வெற்றிக்குடும்பம் சார்பாக நன்றிகள்.

Thursday, July 2, 2009

கடல்கடந்து கடவுளை தொழும் வெற்றி.

வாழ்க்கைக்கு வெற்றிதரும் உங்கள் வெற்றி வானொலி இலங்கையின் பல பாகங்களில் நடைபெறும் பல நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்கி உள்ளது. மக்கள் மனதை அறிந்து அவர்களின் மனதில் வெற்றிச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் வெற்றி வானொலி இன்று இன்னுமொரு படியில் ஏறப்போகின்றது.
இறைவன் ஒருவனே,அவனை தினமும் போற்றுவோம் என்பதற்கமைய இன்று கடல்கடந்து திருச்செந்தூர் முருகன் ஆலய நிகழ்வை(காலை 10.30 முதல்) நேரடியாக அஞ்சல் செய்ய போகின்றோம் என்பதை வெற்றி நேயர்களுக்கும், பக்தர்களுக்கும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Saturday, June 13, 2009

Real gameமை தொடர்ந்து வரும் Reel game.

இன்றைய சனிக்கிழமை நானாட நீயாட நிகழ்ச்சியில் T20 உலகக்கிண்ண விசேட நிகழ்ச்சி. என்ன இது நானாட நீயாடவில் விளையாட்டா என அதிர்ச்சி ஆகாதிங்க. அவதாரம் எப்போதும் விளையாட்டு தான் அதை தொடர்ந்து வரும் நிகழ்ச்சியிலும் கொஞ்சம் விளையாடி பார்ப்போமே என தோன்றியதன் விளைவை இன்று இரவு நீங்கள் கேட்கலாம்.

இன்றிரவு எத்தனை மணிக்கு இந்த விசேட நிகழ்ச்சி? சொல்லமாட்டேன் செய்தி அறிக்கையை தொடர்ந்து ஒலிக்கப்போகும் நிகழ்ச்சி திடீரென சிறப்பாக மாறும். சிலர் இதை ஏற்கனவே ஊகித்திருக்கலாம் மற்றவர்கள் கொஞ்சம் எதிர்பார்ப்புடன் காத்திருங்களேன்.