Pages

Monday, December 28, 2009

வானலைகளில் பதினோராண்டுகள் ............

அன்புள்ள அண்ணா,

வானலைகளில் பதினோ
ரா ண்டுகள் ............
பாராட்டி குவியும் விருதுகள் ................
நேயர்கள் மனதில் நீங்காத தனியிடம் .........
வானலையின் இளவரசன்.............
எங்கள் வானொலியின் அரசன்...............
வெற்றிகளின் சொந்தக்காரன் .................

கடவுளிடம் குரல் வளம் பெற்றீர்
கடமையில் கண்ணியம் கொண்டீர்
வார்த்தைகளில் நிதானம் கொண்டீர்
பலனாய் மக்களிடம் நல்ல பெயரை கண்டீர்

வாழ்த்துகளும் விருதுகளும் புதிதில்லை உங்களுக்கு .
இன்னும் பல விருதுகள் உங்களை தேடி வர எமது வாழ்த்துக்கள்........


நிச்சயமாக உங்களை வாழ்த்த வயதில்லை எனக்கு
இருந்தும் உங்கள் நலனில் அதிக ஆர்வம் கொண்டோரில் நானும் ஒருவன் என்பதால்
என் வாழ்த்துகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் எனும் நம்பிக்கையுடன் உங்கள் அன்புத்தம்பியின்
பணிவான வாழ்த்துக்கள்.........

உங்கள் அன்புத்தம்பி
பிர்னாஸ்

Thursday, December 24, 2009

வெற்றியின் நத்தார்.


தேவபிதா யேசுநாதர் உதித்த திருநாளே இவ் வையத்தார் கொண்டாடும் நத்தார் திருநாள். இந்த நேரத்தில் எங்கள் உறவாக இருக்கும் எங்கள் அன்பான நேயர்களுக்கு இனிய நத்தார் திருநாள் வாழ்த்துக்கள். இந்த சிறப்பு நாளை முன்னிட்டு வெற்றி எப்.எம்மிலும், வெற்றி தொலைக்காட்சியிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன.

எப்போதும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை படைத்து உங்களை மகிழ்விக்கும் வெற்றியில் நள்ளிரவு இசை ராஜாங்கத்தோடு சிறப்பு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி வாழ்த்துக்களோடு கூடிய பூப்பூக்கும் நேரத்தோடு தொடர்ந்து கிறிஸ்மஸ் விருந்தாக விடியல் தொடர இனிய நத்தாரின் சுவையான சம்பவங்களோடு வினோத வியூகம் உங்களை வலம் வர காத்திருக்கின்றது.

மதிய வேளையில் நத்தார் பரிசுகளோடு இன்ப அதிர்ச்சி தரும் ஒருவருடன் பகல் பந்தி. நத்தார் கொண்டாட்டத்தை நயமுடன் சொல்லும் கற்றது கையளவை அடுத்து நத்தார் தாத்தாவுடன் மாலை நேர எங்கேயும் எப்போதும். இரவிலும் உங்கள் வாழ்த்துக்களை ஏந்திவர வெற்றியின் நத்தார் சிறப்பு நிகழ்ச்சி காத்திருக்கின்றது.

உங்கள் வெற்றி தொலைக்காட்சியில் காலை 11.30ற்கும் இரவு 8. 30 ற்கும் சிறப்பு திரைப்படங்களோடு சிறப்பு நத்தார் நிகழ்ச்சிகளும் காத்திருக்கின்றன. இனிமை தரும் நத்தாரில் வெற்றியின் சிறப்பு நிகழ்ச்சிகளை கேளுங்கள் ரசியுங்கள் கொண்டாடுங்கள்.

வெற்றி
வாழ்க்கைக்கு வெற்றி.

Wednesday, December 16, 2009

இன்றிரவு ஆகாயமுகவரியில்.....



வெற்றியின் காற்றின் சிறகுகளில் ஆகாய முகவரி எத்தனையோ கடிதங்களை தாங்கி வந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நடந்த சுகமான சுமையான சம்பவங்கள், அல்லது சொல்லமுடியாமல் சொல்ல நினைக்கும் வார்த்தைகளை உரியவருக்கு அல்லது உரிய பொருளுக்கு அல்லது இடத்துக்கு கடிதம் மூலம் வானொலியில் அஞ்சலிட்டு வந்தோம். வானொலி வரம்புகளை மீறி வரையறைகளை தாண்டி அஞ்சலிடப்படும் கடிதங்களில் இன்று????

வானொலியே ஒரு வானொலிக்கு எழுதும் கடிதம்..... இது நமக்காக நாமே எழுதும் கடிதம்....

எமக்கு வந்த விமர்சனமா?
அல்லது பாராட்டா?
நாங்கள் சந்தித்த சோதனைகள் அல்லது சாதனைகளா?
அல்லது யாருக்காவது ஏதாவது சொல்லப்போகின்றோமா?

இதற்க்கான விடைகளோடு இன்றைய காற்றின் சிறகுகளின் ஆகாயமுகவரி....

Monday, December 7, 2009

காற்றின் சிறகுகளில் புதியவரும் பழையவரும்.

அண்மைக்காலமாக வெற்றியின் காற்றின் சிறகுகள் நிகழ்ச்சியில் விசேட நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது அடுத்தடுத்து இரு பிரபலங்கள் காற்றலை வழியே உங்களை சந்திக்க வருகின்றனர். 

அந்த வகையில் இன்று ரஜீவுடன் இணையும் காற்றின் சிறகுகளில் இனிய குரலால் இதயங்களை வென்று நடிகராக அவதாரம் எடுத்தும் தன் இதமான குரலாலும் அழகிய தோற்றத்தாலும் உங்களை கவர்ந்த பிரபல் இளம் பின்னணி பாடகர் ஒருவர் உங்களை மகிழ்விக்க இருக்கின்றார்.

நாளை??

சதீஷுடன் வரும் காற்றின் சிறகுகளில் ஒரு சகலகலா வல்லவர். திரைத் துறையில் இவர் ஆதிக்கம் செலுத்தும் துறைகள் பல. இன்றும் இவர் இருக்கும் போதே அவரின் வாரிசுகளும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கின்றார்கள். அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கின்றது இவர் குடும்பம்.

இந்த பிரபலங்கள் யார்? என்ன விசேட நிகழ்ச்சி என்பதை அறிய திங்கள் மற்றும் செவ்வாய் காற்றின் சிறகுகளோடு இணைந்திருங்கள். 

Friday, December 4, 2009

வவுனியாவில் வெற்றிக்கிண்ணம்.


உங்கள் இல்லங்கள் தோறும் இனிய இசை பரப்பி உங்கள் இதய வானொலியாக வலம் வரும் உங்கள் வெற்றி எப்.எம் வவுனியாவில் கால்பதித்தவுடனேயே பிரமாண்டமான கால்பந்தாட்ட தொடர் ஒன்றை நடத்த தயாராகிவிட்டது. வெற்றி கப் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த கால்பந்து திருவிழா இம்மாதம் முழுவதும் வவுனியா கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கின்றது.

கடந்த எட்டு வருடங்களாக வவுனியா வைரவபுளியங்குளம் Youngstars விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடாத்தி வருகின்றது. வவுனியா மண்ணில் இரவுநேரத்தில் மின் ஒளியில் கண்கவர் விருந்தாக கால்பந்தின் களமாக அமைந்துள்ள வைரவபுளியங்குளம் Youngstars விளையாட்டு மைதானத்தில் வழமைபோல இம்முறையும் பன்னிரண்டு கழகங்களும் ஏழு பாடசாலை அணிகளும் களம் காண இருக்கின்றன. கடந்த மூன்று வருடங்களாக நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இரவுப்பொழுதில் இந்த போட்டிகளை நடத்தமுடியாமல் போய் இருந்தாலும் இம்முறை வெற்றியோடு இணைந்து வெற்றிகரமாக நடத்த Youngstars கழகம் தயாராகிவிட்டது.

இம்மாதம் 7ம திகதி தொடக்கம் 27ம திகதி வரை மாலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் போட்டிகள் இரவுப்பொழுதிலும் அனல் பறக்க இருக்கின்றது. 93.9எப்.எம் வாயிலாக வவுனியா மண்ணில் தேனிசை மழை பொழியும் வெற்றி எப்.எம் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி சிறப்பிக்க காத்திருக்கின்றது. இலவசமாக் கால்ப்பந்தாட்ட திருவிழாவில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
வெற்றி எப்.எம்
வாழ்க்கைக்கு வெற்றி