
உங்கள் வெற்றி வானொலி எப்போதும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை தருவதில் பின் நிற்பதில்லை. இப்போது தன குடும்பத்திலேயே ஒருவருக்கு விருது கிடைக்கும் பொது பார்த்துக்கொண்டிருக்குமா? இதோ வெற்றிக்குடும்பம் அந்த வெற்றிக்கொண்டாட்டத்தை கொண்டாட தயாராகிவிட்டது.
வானலையில் 11 வருடங்களை தொட்டு இன்று சாகித்திய விருதையும் வென்று சாதனை படைத்திருக்கும் எங்கள் முகாமையாளர் ஏ.ஆர்.வி.லோஷன் அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் நாளை மாலை எங்கேயும் எப்போதும் நிகழ்ச்சி உங்களுக்காக காத்திருக்கின்றது. எங்கள் உறவு ஒன்று சாதித்த பெருமையில் அதை நினைவு கூரும் ஒரு நிகழ்ச்சி மாத்திரமே இது. எங்கேயும் எப்போதும் பாணியில் சொன்னால் பெரிதாக எதிர்பாராதிங்க ஆனால் பெரிய விசயங்களும் இருக்கு.
வெற்றி அறிவிப்பாளர்களின் பல்முக வாழ்த்துக்களும் இன்னும் முகம் தெரியா சிலரின் குரல்களும் ஒலிக்க இருக்கின்றன. லோஷனின் வானொலிப் பயணத்தின் பாதையும் அவர் தனிப்பட்ட வாழ்க்கையின் சுவாரஷ்யங்களும் ஒன்றாக சங்கமிக்க இருக்கும் எங்கேயும் எப்போதும் நிகழ்ச்சியை கேட்க மறக்காதீர்கள்.