இந்திய மண் பெற்றெடுத்த ஒரு இசைக்குழந்தைதான் திலீப்குமார் என்ற A.R.ரஹ்மான். சாதனை நாயகன் A.R.ரஹ்மானின் சாதனைகள் அளப்பரியன. விருதுகளையும் புகழையும் குவித்துவரும் இசைப்புயலின் புதிய அத்தியாயம் தான் "GOLDEN GLOBE" மற்றும் "OSCAR" விருதுக்கான பரிந்துரை. 1992இல் ரோஜா மூலம் புறப்பட்ட இசைப் புயல் இன்னும் வீசிக்கொண்டுதான் இருக்கிறது.
தமிழில் கலக்கிய இந்த புயல் மொழிகள் கடந்து ஆங்கிலத்தில் "SLUMDOG MILLIONAIRE" என்ற படத்தில் தொட்ட ஒரு சிகரம் தான் "GOLDEN GLOBE". இந்த தமிழ் இசை நாயகனின் வெற்றிச் செய்தியை முதன் முதலில் வழங்கியது உங்கள் வெற்றியே. இந்த இனிமையான தருணத்தில் எமது வழமையான நிகழ்ச்சிகளை மாற்றம் செய்யாது சரித்திர நாயகனின் சாதனைக்கு வாழ்த்து சொன்னது வெற்றி.
இந்த சாதனையை தொட்டு ஒரு மாதத்துக்குள்ளேயே ஒவ்வொரு தமிழனின் கனவாகவும் இலட்சியமாகவும் இருக்கும் OSCAR விருதுக்கு "SLUMDOG MILLIONAIRE" திரைப்படத்தின் இசைக்காக 2 பிரிவுகளின் 3 விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது வெற்றி வரலாற்று நாயகனின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டியுள்ளது. இந்த இனிய செய்தியையும் முதன்முதலாக உங்களுடன் பகிர்ந்து ஒரு தமிழனாக பெருமைப்பட்டது வெற்றி.இசையில் ராஜாங்கம் நடத்தும் A.R.ரஹ்மான் கலைத்துறையில் செய்யும் புது முயற்சிகளும் தரும் இதமான இசையும் இசைத்துறையின் மற்றொரு பரிணாமம்.
வெற்றிகளையும் விருதுகளையும் குவித்து வரும் A.R.ரஹ்மானின் சாதனைகளை கெளரவப்படுத்துவதொடு அவர் ரசிகர்களையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்த 28.01.2009 பகல் பந்தி முற்றிலும் A.R.ரஹ்மான் சிறப்பு நிகழ்ச்சியாக வானலையில் தவழ இருக்கிறது. இசையில் புதுமை செய்து உலக வலம் வரும் A.R.ரஹ்மானுக்கு புது விதி செய்து உலக வலம் வரும் வெற்றி F.M மின் வாழ்த்துக்களோடு OSCAR வெற்றிக்காக பிரார்த்தனையும் செய்கிறது வெற்றி.
ரஹ்மானுக்கு லாழ்த்துச்சொல்லலாம் வாரீங்களா...........
வெற்றி F.M,
இனி ஒரு புது விதி செய்வோம்.
1 comment:
முதலில் வெற்றிக்கு வாழ்த்துக்கள்
A.R. Rahman ற்கு கிடைக்கப்போகும் விருது பற்றி ஞாபகப்படுத்தும் வெற்றிக்கு நன்றி நன்றி.
அத்தோடு அன்புடன் வேண்டிக்கொள்வது A.R. Rahman போன்ற சாதனை மிக்க இசையமைப்பாளா்களின் விபரங்களையும் வெற்றியின் Blog இல் தர வேண்டும்
இந்த comment ஐ தர நான் கொஞ்சம் தாமதம் காரணம் அன்மையில் தான் இந்த Blog பற்றி தெரிய வந்தது.
மேலும் வெற்றியின் பார்வையில் பட்டால் எனது Blog
http://neerthulihal.blogspot.com/
நன்றி
நான்
sasee
Post a Comment