Monday, November 30, 2009
Flash News - வடக்கு மற்றும் வடகிழக்கில் வெற்றி......
Friday, October 16, 2009
வெற்றி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்.
இதோ இம்முறை உங்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள்.
அதிகாலை 5 மணிக்கு : தீபாவளி விசேட பூப்பூக்கும் நேரம்.
காலை 6 மணிக்கு : மங்கலத் தீபாவளி
(தலை தீபாவளி தம்பதியினருக்கான சிறப்பு தீபாவளி)
8 மணிக்கு : கலகலக்கும் தலை தீபாவளி
(தலை தீபாவளி தம்பதியனருக்கு சிறப்பு தீபாவளி.)
பகல் 1 மணிக்கு : தித்திக்கும் புது மெட்டுக்கள்.
(தீபாவளி கொண்டுவரும் தித்திக்கும் புதுப்பாடல்கள் புதுத்தகவல்களோடு. )
மாலை 4 மணிக்கு : டமால் டுமீல்.
(தீபாவளி கல கல சிறப்பு கலவை. )
6.15 க்கு : அவதாரம் The Real Super Singers
இரவு 9.15 க்கு : நானாட நீயாட தீபாவளி கொண்டாட.
(உங்கள் வாழ்த்துக்கான நேரம். )
அமைதியான தீபாவளியில் அன்பை வளர்ப்போம். - வெற்றியுடன்.!!!
Friday, October 9, 2009
யாழ் மண்ணில் வெற்றி

மக்களின் இதய துடிப்பறிந்து தேவையான நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்கி வரும் வெற்றி எப்.எம் இப்போது இன்னுமொரு இலக்காக யாழ்ப்பாணத்திலும் தன் வெற்றிக் கோடியை பறக்கவிட்டுள்ளது. அண்மைக் காலமாக வேகமாக தன் அலைவரிசைகளை அதிகரித்துக்கொண்டு நேயர்களை தன் வசப்படுத்திய வெற்றி இப்பொழுது யாழ் நேயர்களையும் வசீகரிக்க வந்துள்ளது.
Wednesday, September 30, 2009
October மாதத்தில் ............... அந்திமாலை நேரத்தில்..............

உங்கள் வெற்றி வானொலியில் மீண்டும் Super Singers இசை, நடன நிகழ்;ச்சி. Super Singer புகழ் அஜீஸ், ரவி, ரேணு, ரஞ்சனி, இவர்களோடு முதன் முறையாக இலங்கையில் பிரசன்னா மற்றும் ராகிணிஸ்ரீ ஆகியோரும் கலந்து ளுரிநச ளுiபெநச இசை, நடன நிகழ்;ச்சி சிறப்பிக்க வருகின்றார்கள். இவர்கள் உங்களை மகிழ்விக்கவிருக்கும் அதேவேளை பிரபல மிமிக்ரி கலைஞர் சிவகார்த்திகேயன் நடனத்தையும் மிமிக்ரியையும் வழங்கி மகிழ்விக்க இருக்கிறார். நடனத்தால் உங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட 'உங்களில் யார் அடுத்த பிரபு தேவா' பட்டம் வென்ற Sherif மீண்டும் தனது புயல் நடனத்தை வழங்கவுள்ளார். இம் மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.31க்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
Spice Travels & Toursஇன் 5வது ஆண்டு நிறைவையொட்டி வீரகேசரியின் ஊடக அனுசரணையோடு வெற்றிகுஆ நடாத்தும் மாபெரும் இசை, நடனத்திருவிழா. ஏற்கனவே உங்களை மகிழ்வித்த இக்கலைஞர்கள் மீண்டும் உங்களோடு உங்கள் வெற்றியில்....
Tuesday, September 29, 2009
கன்னியருக்கு 9 ராத்திரி அது நவராத்திரி
அனைத்துருவான பெண்ணை சக்தியாய் போற்றி வழிபடும் தொன்மையை உணர்த்துவது இந்நவராத்திரி.
அதர்மம் தலை நிமிரும் போது தர்மம் காக்க அன்னை வருவாள் என்பதை உணர்த்துவது 10வது நாளான விஜயதசமி. மகிஷாசுரமர்த்தினியாக அன்னை வடிவெடுத்த இவ் விஜயதசமி நன்னாளில் வளமான வாழ்வு வேண்டி பூஜைகள் நடத்தவது தொன்று தொட்டு வரும் வழமை.
இதற்கிணங்க நேற்று காலை 11மணிக்கு எமது அலுவலகத்தில் விஜயதசமி பூஜை நடைபெற்றது. இனமத பேதமின்றி யாவரும் இலங்கை தாயின் குழந்தைகளாக Voice of Asiaவின் அதிகாரிகள் உட்பட அலுவலக ஊழியர்கள் அனைவரும் கலந்து நேற்றைய பூஜையை சிறப்பித்திருந்தனர். Voice of Asiaயை இன்னும் பல வெற்றிகளை பெற்றிட எல்லாம் வல்ல அம்பிகை அருள் புரிவாளாக!