99.6 F.M, 93.6 F.M, 101.5 F.Mஅலைவரிசைகளில் வலம் வந்து குறுகிய காலத்தில் நேயர்கள் மனதில் அழியாத இடம் பிடித்து வெற்றிக்கொடிகட்டி பறக்கும் வெற்றி F.M புத்தாண்டில் புதுத்தென்புடன் காலடி எடுத்து வைக்கிறது.
ஆரம்பத்தில் வித்தியாசமான படைப்புக்கள் மூலம் நேயர்கள் நெஞ்சில் நுழைந்து இன்று நிலையாக இடம்பிடித்திருக்கும் வெற்றியின் வெற்றியில் பங்கு கொள்ளும் எங்கள் அன்புக்குரிய நேயர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.
அதிகாலைபொழுதில் பூ பூக்கும் நேரம் நிகழ்ச்சியில் சந்துருவும் பூஜாவும் நற்சிந்தனைகளை வழங்கி அன்றைய நாளை நல்ல நாளாக தொடக்கி வைக்க
வாழ்த்துக்கள், "பேப்பர் தம்பி", "விளையாட்டு வலம்", கஞ்சிபாய், சிங்கபூர் சீலன், லாடு லபக்கு தாஸ், பெஞ்சிபாய், என நகைச்சுவை கில்லாடிகளின் நகைச்சுவைகளோடு லோஷன் தரும் விடியல் என்றுமே தமிழ் மக்கள் வாழ்வில் விடியல். புத்தாண்டு அன்று புத்தாண்டு சபதங்களோடும் புதிய விடயங்கNshLம் உங்களை சந்திக்க இருக்கிறது விடியல்.
அதனைத் தொடர்ந்து வித்தியாசமான சுவாரஸ்யமான சம்பந்தமே அற்ற நபர்கள், பொருட்கள், சம்பவங்களை ஒன்றாக்கி அவற்றுக்கு இடையே தேர்தல்போல விநோதவியூகத்தில் ஒரு போட்டியையே நடத்தும் விமலும் வைதேகியும் விரிக்கும் வியூகம் நிச்சயமாக விநோதமானதுதான். புது வருடத்திலும் புது வருடத்துடன் சம்பந்தபட்ட விடயங்களை போட்டியிட வைக்க காத்திருக்கிறது வினோத வியூகம்.
மதிய நேரத்தில் நாம் சாப்பாட்டு பந்தியில் அமரும் நேரம்கூட எங்களை சோர்வடைய விடாமல் உற்சாகமாக வானலை பரிசுகளோடு பூஜா போடும் பகல் பந்தி என்றுமே ஒரு "Energy". புத்தாண்டு அன்று எல்லையற்ற பரிசுகளோடு உங்களை மகிழ்விக்க காத்திருக்கிறது.
மாலைவேளைகளில் உலகவிடயங்கள், உள்ளூர் தகவல்கள், ஏன்? தெரியாத விடயங்கள் என எல்லாவற்றையும் திரட்டி ரசனையுடன் தரும் நண்பன் ஹிஷாமின் கற்றது கையளவு எங்களுக்கும் தருமே தெளிவான உலகறிவு. புத்தாண்டு சம்பந்தமான பல விடயங்களுடன் உங்களுக்காக காத்திருக்கிறது.
அதன்பின் சந்துருவின் எங்கேயும் எப்போதும் எங்கேயும் கலகல எப்போதும் சுவாரஸ்யம். நாம் விரும்பும் பாடல்கும் நகைச்சுவைகளும் வாழ்த்துக்களும் எமக்கு தரும் என்றுமே புன்னகை.
இதமான இரவு வேளைகளில் இதயத்துடன் பேச காற்றின் சிறகுகளோடு சுபாஷ் தரும் கானங்களும், கவிதைகளும், ஆகாயமுகவரியும் வானொலியில் மற்றுமொரு திருப்பம். புத்தாண்டன்று முற்றிலும் வித்தியாசமாக உங்களுடன் சிறகு விரிக்க காத்திருக்கிறது.
நள்ளிரவு முதல் அதிகாலை வரை ஷகி வேலுவின் இசை ராஜாங்கம் இனி என்றுமே புதுமை புரட்சி. புதுவருடத்திலும் உங்கள் அபிமான பாடல்கள் தொடர்ச்சியாக.........
இவை எல்லாம் நம் நேயர்கள் மனதில் மிகக் குறுகிய காலத்தில் பிரபல்யமடைந்த நிகழ்ச்சிகள். எம் நேயர் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்ற இந்நிகழ்ச்சிகள் உங்களுக்கு பிடித்த வண்ணம் புது மெருகுடன் புதுத் தென்புடன் புத்தாண்டிலும் புதுமை படைக்க இருக்கிறது வெற்றி
புத்தாண்டன்று இன்ப அதிர்ச்சிகளுடன் இனிய நிகழ்ச்சிகளையும் தர இருக்கும் வெற்றியோடு தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
வெற்றி F.M
வாழ்க்கைக்கு வெற்றி
புதுவருடத்திலும் புது விதி செய்வோம்.
vettri@voa.lk
3 comments:
"99.6 F.M, 93.6 F.M, 101.5 F.Mஅலைவரிசைகளில் வலம் வந்து குறுகிய காலத்தில் நேயர்கள் மனதில் அழியாத இடம் பிடித்து வெற்றிக்கொடிகட்டி பறக்கும் வெற்றி F.M புத்தாண்டில் புதுத்தென்புடன் காலடி எடுத்து வைக்கிறது"
அனைத்து வெற்றி நேயர்களும் அறிந்ததே அண்ணா..
"எங்கள் அன்புக்குரிய நேயர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றோம்."
உள்ளம் கனிந்த புது வருட நல் வாழ்த்துக்கள்..
நானும் உங்களுக்கு வாழ்த்து சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் வெற்றி ரசிகை என்ற வகையில்..
நல்ல நிகழ்ச்சிகளை தந்துகொண்டிருப்பதட்கும் நன்றிகள்.
"இணைந்திருங்கள்."
நேரம் இருக்கும் போதெல்லாம் இணைந்திருக்கிறோம்.
sinthu
bangladesh
குறுகிய காலத்தில் நேயர்கள் மனதில் அழியாத இடம் பிடித்த வெற்றி F.M க்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
வெற்றி குடும்பத்திற்கு உங்கள் நேயார்களுக்கும் என் தேசத்து உறவுகளுக்கும் எனது இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள் ...............
Post a Comment